Showing posts with label கிண்டல். Show all posts
Showing posts with label கிண்டல். Show all posts

Mar 15, 2013

என்னது பாலா அடிச்சாரா?

பரதேசி! (யோவ்..உங்கள திட்டலையா? படத்த பெயர சொன்னேன்)

பரதேசி படத்தின் teaser ஒன்று வெளியாகி, அதில் நடிப்பவர்களை போட்டு அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


 

இதற்கு பலவித எதிர்ப்புகள்! முக்கியமா இந்த டிவிட்டர் பக்கமா போனால்...சக நடிகர்கள்/இயக்குனர்கள் காட்டிய எதிர்ப்புகள்:

 Actor : Siddharth"A video of a director hitting his actors in the name of reality is going viral.Can we please have one of actors beating the hell out of him?"

 Director : Balaji Mohan"Paradesi 'reality' teaser sets a bad example to young future filmmakers who consider Bala sir as an idol. This isnt the way to make films."

 Actor-producer : Udhayanidhi Stalin"I decided not 2 watch the reality muvi! I shud b building temples for directors Rajesh S.R.Prabhakaran sir!"

எனக்கு சிரிப்பு தான் வந்தது இவர்களின் எதிர்ப்புகளை பார்த்து! பாலாவுக்கு தெரியாதா- இது விளம்பர யுத்தி என்று?

இதுக்கு தானே ஆசைப்பாட்டாய் குமாரா? என்பதுபோல் எதிர்வினை விளம்பர தானே இன்றைய 'விஸ்வரூப' வெற்றியை நிர்ணயிக்கின்றது!!  தப்போ சரியோ? படம் நல்லாயிருக்குதுனு நிறைய பேர் சொல்றாங்க! இயக்குனர் பாலாவின் ரசிகை நான் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான படங்களை கொடுத்து இருக்கிறார்! படம் ஓடினால் சரி! ஆனால், இவரிடம் பிடிக்காத விஷயம்- அழகானவர்களை அழுக்காய் அலங்காரம் செய்வது!

http://filmy365.com/tamil/files/2012/11/Atharva-02.jpg             http://moviegalleri.net/wp-content/gallery/paradesi-movie-stills/bala_in_paradesi_movie_stills_adharvaa_murali_6dba4ba.jpg

அதர்வா எவ்வளவு அழகு!! ச்சே போங்க பாஸ்...மனசே சரியில்லை! அடுத்து, விஜய் இவரிடம் படம் பண்ண போவதாய் செய்தி!!! தல!!!!!!!!!! இது நமக்கு தேவையா தல? நம்மகிட்ட இருக்கும் ஒரே அம்சம்- அந்த அழகான சிரிப்பு தான்! பார்த்து சுதார்ச்சிக்கோ தல!
             
                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUGlBeZ6AfqWZ0fsOwfe9sfFBFOExgjnq0vPMy81C7_qDPsvTQgEu8cV3UsTZOhRM9pNKFnTQeYEysjSzwv_kiFqFtt26GBXJ627g43WbE7sjFuhyphenhyphenwupHamYYypxHlJy-B_x6BK-Q5mBzV/s1600/smile.jpg


சரி பாலா அடிச்சதுக்கே இப்படினா? சின்ன வயசுல, நம்ம அப்பாக்கள் நம்மள தூக்கிபோட்டு மிதிச்சு அடி இடி மாதிரி விழுந்த கதையை reality teaser போட்டால், பூகம்பமே கிளம்புமா பாஸ்?? உஷ்ஷ்ஷ்ஷ....யப்பா!!!

Mar 14, 2013

office- அப்பளம்னா எப்படி இருக்கனும்?

என்னைய மாதிரி ஒரு sales executive இது தான் அப்பளம்னா எப்படி வியாபாரம் ஆகும்? அப்பளம்னா எப்படி இருக்கனும்? கும்பலா, பொன்நிறமா, சும்மா வின்ன்ன்ன்ன்னு ஒரு பொடுப்போட இருக்க வேண்டாம்!- கவுண்டர் அப்பளம் விக்கும் காமெடியை பார்த்தபிறகு, எனக்கு ஆபிஸ் விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/205376_317819421640663_1052643186_n.jpg

ஆபிஸ் போன பிறகு தான் 'விடுகதையா இந்த வாழ்க்கை' என்று ரஜினி ரத்த கறையோடு போகும் வலி புரிந்தது. கொடுமைகள் ஒருபுரம் நடந்தாலும், அதிலும் சில காமெடிகள் நடக்கும்.

மீட்டிங் என்னும் காமெடி கொடுமை: கோபம் வர மாதிரி காமெடி செய்வதில் ஆபிஸ் ஆட்களை அடித்து கொள்ள ஆள் இல்லை! வீட்டிற்கு போகும் நேரத்தில் மீட்டிங். வாழ்க்கைக்கு ஒரு நாளும் தேவையில்லாத விஷயத்தை பத்தி பேச ஒரு மீட்டிங்.
http://i.ytimg.com/vi/0nlTPkSC8gI/2.jpg
பட்ட பெயர் வைக்கும் காமெடிகள். மண்டையன், வழுக்க மண்டையன், 'சின்ன வீடு', பைத்தியக்காரி, ' 7 ஸ்டார் கிங்' போன்றவை என் ஆபிஸில் நாங்க வைத்து கொள்ளும் 'code word' பட்ட பெயர்கள்.  ஆபிஸ் security officer ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இந்த பெரிய ஆபிசர்களின் நற்பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார். ஒரு நாள், ஏதோ, சாதாரண விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதை வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்து அனைவருக்கும்,



"these photos are for your memorial." என்று அனுப்பிவிட்டார். அன்று முதல் இவர் காமெடி தான் ஒரு வாரம் ஓடியது.

பெரிய ஆபிசர் ஒருத்தர் இருக்கிறார். அவர் மூச்சுக்கு மூணூறு தடவ 'chief security officer' என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டு தான் அடுத்த வாக்கியத்தை தொடருவார்! ஐப்பா கேட்டு கேட்டு....ரீலு அந்துபோச்சு டா சாமி!

இன்று காலையில் விஜய் டிவியின் புதிய தொடரை பார்த்துவிட்டு, இந்த போஸ்ட் எழுதவேண்டும் என்று தோன்றியது.


அடுத்த போஸ்ட்...ம்ம்.... தற்போது சைட் அடிக்கப்பட்டுகொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்குனு நினைக்குறேன்!!

May 20, 2011

சோ- உலகத்தையே திருப்பி போட போற படம்!

(producer தனது ஆபிசில் சில தெலுங்கு பட விசிடிகளை பார்த்து கொண்டிருந்தார். )

director: சார்! உள்ள வரலாமா சார்?

prod: யோவ்! பாரதிகௌதம்....என்னய்யா ஆளே காணும்? வா வா...உட்காரு.

dir: சார், போன தடவ நீங்க தான் சார் என்னைய அடிச்சு விரட்டிவுட்டீங்க!

prod: ஆமா யா! பன்னி கதை, நாய் கதைனு சொன்னா....கோபம் தான் வரும்! சரி, அப்பரம்..இப்ப என்ன படம் direct பண்ணிகிட்டு இருக்க?

(மேசையில் இருந்த தெலுங்கு பட விசிடிகளை பார்த்த கௌதம்)

dir: சார், என்ன சார், தெலுங்கு படம் எடுக்க போறீங்களா?

prod: அது ஒன்னுமில்லையா, சிம்பு கால்ஷீட் இருக்கு. அப்படியே ஏதாச்சு ஒரு தெலுங்கு படத்த ரீமேக் பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

dir: என்ன சார் நீங்க? நீங்க இப்படி பண்ணலாமா? ரீமேக் படமெல்லாம் எடுத்தா, எங்கள மாதிரி creative ideas இருக்குற இயக்குனர்களுக்கு வாய்ப்பு இல்லாமா போயிடாதா சார்:)

prod: அதலாம் ஒன்னும் போகாது. உங்கிட்ட கதை இருக்கா? சொல்லு?

dir: ஆமா சார்! உங்களுக்கு தெலுங்கு படம் மேல இப்படி ஒரு மோகம் இருக்குன்னு எனக்கு தெரியும் சார். என்கிட்ட ஒரு script இருக்கு. ஒரு படம், 5 கதை.....

prod: (வாய் விட்டு சிரித்தார்)

dir: சார், இது காமெடி கதையா? action கதையான்னு கூட தெரியாம ஏன் சார் சிரிக்கிறீங்க?

prod: உன்கிட்ட கதை இருக்குதுனு சொன்னதே பெரிய காமெடி, அதலயும் 5 கதைனு சொன்ன பாத்தீயா....(சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்)

dir: சார், கிண்டல் பண்ணாதீங்க...கதைய கேளுங்க....5 கதை, 5 characters, எல்லாரும் வெவ்வேற வாழ்க்கை வாழுறாங்க...ஆனா கடைசில ஒரு ipl match சந்திக்குறாங்க. அங்க என்ன நடக்குது....அது தான் சார் கதை. எப்படி?

prod: படத்துக்கு title?

dir: பூமி, கீழே tagline 'எங்க காமி?'

prod: என்னய்யா? என்னைய பாத்தா geography professor மாதிரி இருக்கா? இந்த 5 பட கதை எல்லாம் உனக்கு ஒத்து வராது. ஒரே கதை, நல்ல கதையா சொல்லு?

dir: so

prod: அதான் சொல்லிட்டேன்ல. நீ தான் கதைய சொல்லனும்.

dir: so

prod: என்னய்யா மறுபடி மறுபடியும் so? கதை இருக்கா இல்லையா?

dir: ஐயோ சார், கதை பெயரே அது தான் சார்!

prod: என்னது?

dir: சோ!

prod: (முகம் மலர்ந்தது) ரொம்ப வித்தியாசமா இருக்கே!

dir: எனக்கு தெரியும் சார்! உங்களுக்கு இந்த கதை பிடிக்கும்னு. இந்த படம் முழுக்க ரொம்ப hi techல போகும் சார். படத்துல hero ஆப்பிள் விக்கிறவரு!

prod: ஆப்பிளா? யோவ்...சாத்துகுடி, மாம்பழம்...இப்படி ஏதாச்சு விக்க சொல்லுய்யா!

dir: சார்! அந்த ஆப்பிள் இல்ல. apple products விக்கிறாரு. iphone salesman.

prod: ஓ...ஓ...சரி சரி.

dir: ஹீரோவோட ஆயுதமே iphone4 தான். அத வச்சு ரோட்ல நடக்குற traffic குற்றங்களையும், அரசியல் வாதி பண்ணுற தப்புகளை ஃபோட்டா எடுத்து, facebookல upload பண்ணுறதுனு அவரோட பொழப்பு!

prod: (அமைதியாக இருந்தார், கொஞ்சம் நேரம் கழித்து) படத்துல ஹீரோயின்?

dir: சார், நம்ம ஊர் பொண்ணு தான் போடனும். அந்த காலத்துல famousஆ இருந்த ஹீரோ அல்லது ஹீரோயின் பொண்ண போட்டால் தான் சரியா இருக்கும்!

prod: ஏன்?

dir: சார்! நம்ம படத்துல எல்லாத்தலயும் புதுமை புகுத்திகிட்டே இருக்கனும் சார்! நவரச நாயகன் கார்த்திக் பொண்ண போடலாமா?

prod: யோவ் அவருக்கு பொண்ணே இல்லையா!

dir: தேவையானி பொண்ணு?

prod: யோவ்...அதுங்க இப்ப தான் எல்கேஜி போகுதுங்க!

dir: ம்ம்....ரம்பாவுக்கு....

prod: நீ வாய மூடு! ஆமா எதுக்கு இப்படிப்பட்ட ஹீரோயின் தேவை?

dir: இந்த படத்துல ஹீரோயினுக்கு கண்ணு பெரிசா இருக்கனும்! அந்த கண்ண வச்சு ஒரு சூப்பர் ஹிட் பாடல் ஒரு புது கவிஞர் எழுதியிருக்கார்!

prod: கதை ஓகே ஆவறதுக்கு முன்னாடியே பாட்டு ரெடி ஆயிட்டா!??

dir: இப்ப எல்லாம் ready-made பாடல்கள் trend. எந்த படத்துக்கும் பாட்டு always ரெடி.

prod: சரி, அந்த புது கவிஞர் யாரு?

dir: (புன்சிரிப்புடன்) நான் தான் சார்!

prod: கொடுமை!

dir: சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

prod: ஐயோ ரொம்ப பெருமையா இருக்குனு சொல்ல வந்தேன். பாட்டு வரிய சொல்லு.

dir: ஹீரோயின் கண்ணு ஷார்ப்பா இருக்குது...அதனால...

"உன் கண்ணு கண்ணமாபேட்டே, அதுல ஏன் என்னைய கொன்னுபுட்ட?"

இப்படி போகுது சார் பாட்டு. இந்த பாடல norway உள்ள ஒரு மலை உச்சியில ஒரு சுடுகாடு இருக்கு. அங்க தான் ஷுட் பண்ண போறோம்.

prod: ஏன்? நம்ம ஊரு சுடுகாட்டுல இந்த பாட்ட எடுக்க முடியாதா?! (கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் வந்தது)

dir: சார், இந்த பாட்டுல highlightஏ அந்த மலையில் ஒரு சின்ன கல்லு ஒன்னு தொங்கும். அங்க நீன்னுகிட்டு ஆடுனும் நம்ம ஹீரோவும் ஹீரோயினும்.

prod: இந்த ஷாட் பாட்டுல எவ்வளவு நேரம் வரும்?

dir: 10 secondக்கு மேலே காட்ட மாட்டோம்! இந்த பாட்டுல ஒரு speciality இருக்கு.

prod: என்ன அது? (கிண்டலாய் இழுத்தார்)

dir: உலகத்துல உள்ள famous சுடுகாடுகள் இருக்கும் இடத்துக்கு போய் ஷுட் பண்ணுவோம்:)) பாட்டு சூப்பர் ஹிட், எழுதி வச்சுக்குங்க சார்!

prod: போன தடவ என்ன பண்ணேன் நான்?

dir: அடிச்சு விரட்டுனீங்க!

prod: இப்ப விரட்டி அடிக்க போறேண்டா!

dir: ஐயோ சார்!!!

prod: அடிங்க!!!

(அச்சமயம், ஒரு வெள்ளக்காரன் tea glassவுடன் உள்ளே நுழைந்தான்.)

dir: என்ன சார்? வெள்ளக்காரன் எல்லாம் office boyயா வச்சு இருக்கீங்க?

வெள்ளக்காரன்(ஆங்கிலம் கலந்த தமிழில்): நான் office boy இல்ல. tour guide! உங்க ஊருல முக்காவாசி பேரு எங்க ஊருல வந்து தான் படம் எடுக்குறாங்க! அதுக்கு நான் தான் guide.

dir: norway நான் பார்த்தே ஆகனும்.

வெள்ளக்காரன்: உங்க ஊருலே அழகு அழகா இடம் இருக்கு. அதவிட்டுட்டு ஏன் தான் எங்க ஊருல வந்து நாசம் பண்ணுறீங்களோ!!??

*முற்றும்*

Mar 18, 2011

ஆத்தா, பயணம்!- box office hit

director: "ATM productions வழங்கும் ஆத்தா, பயணம்" இது தான் சார் ஓபனிங்.

producer: யோவ்! கதைய முதல சொல்லுய்யா!

director: சார், இது ஒரு கிராமத்த கதை சார்! ஒரு பெரிய....

producer: wait wait...உன் பேர் என்ன சொன்ன?

director: பாரதி கௌதம்.

producer: ஹாஹாஹா...என்னய்யா பேரு இது?

dir: பாரதிராஜா மாதிரி கிராமத்த படத்த கௌதம் மேனன் மாதிரி ரொம்ப ஸ்டைலீஷா எடுக்கனும்னு ஆசை. அதான்...இந்த பேர வச்சுகிட்டேன்!

prod: சரி கதைய சொல்லு!

dir: சார் ஓபினிங் சீன்....ஒரு பெரிய மாட்டுவண்டி, யாருமில்லாத railway station வெளியே நிக்குது. தண்டவாளத்த long shotல காட்டுறோம். அங்க இருக்கற clockஎ close upல காட்டுறோம். பயங்கரமா காத்து அடிக்குது சார்! மரத்துலேந்து இலை எல்லாம் கீழே விழுது சார்.

prod: எனக்கு தூக்கம் வரதுய்யா! catchingங்கா ஒன்னு இல்லையா!??

dir: சார், அதுக்கு தான் சார் வரேன். எப்போதுமே lateஏ வர train அன்னிக்கு மட்டும் சீக்கிரம் வந்துடுச்சு சார்.

prod: இது ரொம்ப புதுசா இருக்கே...வெரி குட்...மேல சொல்லு.

dir: எல்லாரும் நினைப்பாங்க. நேரம் சரியா இருக்குனு. ஆனா, எல்லாருக்கும் அது bad time!- அப்படின்னு பின்னாடி narration voice போடுவோம் சார். அந்த trainலேந்து ஒரு வயசான பாட்டி கண்ணு ஆபிரேஷன் முடிஞ்சு வறாங்க. கூடவே அவங்க பேத்தியும் இருக்கா.

prod: தமன்னா callsheet என்கிட்ட இருக்கு. அவங்கள இந்த ரோல போட்டுடுவோம்.

dir: இல்ல சார். பாட்டியும் பேத்தியும் ஒரு ஆளு தான் சார் பண்ணனும். double action sir.

prod: தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்.... நீ கதைய மேல சொல்லு.

dir: கண்ணாடி போட்ட ஒரு mechanic அதே ரயில வந்து இருங்குறாரு.

prod: அது என்னய்யா கண்ணாடி போட்ட மெக்கானிக்?

dir: பாரதிராஜா படத்துல கண்ணாடி போட்ட ஹீரோ வர மாதிரி நம்ம படத்துலயும் ஹீரோ கண்ணாடி போடுறாரு சார்...

prod: characters மட்டுமே சொல்லிகிட்டு இருக்க...கதைக்கு போய்யா! கதை இருக்கா இல்லையா?

dir: சார் வரேன் சார். இன்னும் நிறைய characters இருக்கு. ஒரு சின்ன பொண்ணு, 16 வயசு பொண்ணு சினிமால நடிக்கனும்னு ஆசைப்பட்டு ஓடி வறா அதே ரயில.

prod: கிராமத்துக்கு ஏய்யா வறா?

dir: ரயில் மாறி ஏறிட்டா சார்! (கண் கலங்குகிறார்)

prod: அப்பரம் என்ன ஆகுது? அந்த 16 வயசு பொண்ணா யார போடலாம்?

dir: நமீதா.

prod: நமீதாவா? நீ சொல்ற கதையவிட இது இன்னும் shockingஆ இருக்கே!

dir: கவலைப்படாதீங்க சார். ரெண்டே மாசம் 35 கிலோ குறைப்பாங்க. 16 வயசா மாறுவாங்க! நான் guarantee சார் அதுக்கு!

prod: சரி கதையில அப்பரம் என்ன ஆகுது.....

dir: புதுசா கல்யாணம் ஆனா ஜோடி, அமெரிக்கா return ஒரு பையன் - இத்தன பேரும் அந்த stationல நிக்குறாங்க. shot freeze!

எழுத்து-இயக்கம்: உங்கள் பாரதி கௌதம்
அப்படினு போடுறோம் சார்!

prod: title credits எல்லாம் editor பாத்து பாரு. அந்த மாட்டுவண்டி எதுக்கு வெளியே நிக்குது?

dir: பின்னிட்டீங்க சார்! ஒரு audienceஆ இந்த படத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க. i like it sir. அந்த மாட்டுவண்டில தான் இவங்க எல்லாருமே கிராமத்துக்குள்ள போறாங்க. அந்த மாட்டுவண்டிய ஓட்டுறது அந்த கிராமத்துக்கே தெய்வம் மாதிரி.

prod: ஆமா அந்த ரோலுக்கு யார....

dir: சார் என் friend நவீன்குமார் பண்ணனும் சார். 'அந்த பக்கம் போகாதீங்க இந்த பக்கம் வாங்க' அப்படினு ஒரு ஹிட் படம் எடுத்தாரே அவரு சார்.

prod: ஓ ஆமா ஆமா!

dir: இந்த powerful role அவர் தான் பண்ணனும். என் படத்துல அவர் கண்டிப்பா நடிச்சே ஆகனும்.

prod: அவர் எடுத்த முந்தைய படத்துல கூட நீ நடிச்ச தானே?

dir: ஆமா சார். இப்படி மாத்தி மாத்தி நடிச்சு கொடுக்குறது தானே சார் இப்ப trend!

prod: (தலையில் அடித்து கொண்டார்) அப்பரம் அந்த மாட்டுவண்டிக்கு என்ன ஆகுது?

dir: திடீரென்னு மழை பெய்யுது. வண்டி வழில breakdown ஆவுது?

prod: மாட்டுவண்டி breakdownஆ? டேய் லாஜிக்கே இல்லையடா இதுல!??

dir: சார், வண்டில problem சார். அத சரி பண்ண மெக்கேனிக் கீழே இறங்கி வேலை பாக்குறாரு. அந்த வேலை பாக்குற ஸ்டைல பாத்து தமன்னாவுக்கு காதல் வரது?

prod: பாட்டி தமன்னாவுக்கா? பேத்தி தமன்னாவுக்கா?

dir: சார், பேத்திக்கு தான் சார் காதல் வரது!

prod: இப்படிலாம்கூட காதல் வருமா?

dir: சார் இது ஒரு வித்தியாசமான காதல் சார்! தமிழ் சினிமாவுல இப்படி ஒரு காதல் காட்சிய audience பாத்து இருக்க மாட்டாங்க!

prod: சரி சொல்லு....

dir: இங்க ஒரு பஞ் டயலாக் சார்! மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, "தம்பி, ஏன் உருட்டுறீங்க?"

அதுக்கு மெக்கேனிக் பஞ் டயலாக் சொல்றாரு,
"உருட்டுறதுல நான் பூனை மாதிரி.
மிரட்டுறதுல நான் யானை மாதிரி."

அப்படியே மெக்கேனிக் கண்கள close upல காட்டுறோம். கண்ணு சிவந்து போகுது சார்.

prod: யோ, பாட்டி சொன்னதுக்கு எதுக்கு டா பஞ் டயலாக்?

dir: சார், audience விரும்புவான் சார். நீங்க பாருங்க? இது தான் 2011 வருஷத்துல ஹிட் பஞ் டயலாக்கா வர போகுது. இந்த ஒரு பஞ் தான் படத்த 100 நாள் ஓட வைக்க போகுது.

prod: (producer தன் கோபத்தை அடக்கி கொள்கிறார்)

dir: repair பண்ணி முடிச்ச பிறகு வண்டி கிளம்புது.... போற வழில மின்னல், இடி, மழை... ஒரே இருட்டு! நாலு பேரு காட்டுக்குள்ளேந்து வராங்க. முஞ்சிய மூடி இருக்காங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது. கையில எல்லாருமே gun வச்சு இருக்காங்க. வண்டில இருக்குற எல்லாரையும் close upல காட்டுறோம். அப்படியே அடுத்த ஷாட்.... முஞ்சிய மூடி இருக்குற நாலு பேருல ஒருத்தர் மட்டும் name tag போட்டு இருக்காரு.... name tagஎ close upல காட்டுறோம்.

"அக்ரம் கான் - son of wasim khan"

இங்க தான் interval block!

எப்படி சார் கதை?

prod: எந்த தீவிரவாதிய்யா name tag போட்டு இருப்பான்?

dir: சார், நம்ம ஒரு வித்தியசாமன படம் எடுக்கறதயே நீங்க அப்பெப்ப மறந்துடுறீங்க!!

prod: சரி 2nd halfல கதை?

dir: இந்த கிராமத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம்? the mystery unfolds.......

prod: ஆமா? அப்பவே கேட்கனும்னு இருந்தேன். அந்த மெக்கேனிக் ரோலுக்கு.... யார போடலாம்னு...

dir: கார்த்தி தான் இதுக்கு சரியான மேச்.

prod: யோவ்... அவருக்கும் தமன்னாவுக்கும் ஏதோ கிசுகிசு....

dir: இருக்கட்டும் சார். நம்ம படத்துக்கு அப்பரம் அவங்க ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு தான் சார் பெருமை.

prod: யோ, அப்படிலாம் ஒன்னும் நடக்ககூடாதுய்யா! இன்னும் ரெண்டு படத்துக்கு தமன்னா கால்ஷீட் வாங்கி வச்சுருக்கேன்ய்யா!

dir: சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict! 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்!

prod: என்னய்யா நீ வேற......? சரி இந்த படத்துக்கு location எங்க?

dir: america. chicago பக்கத்துல இருக்குற ஒரு கிராமம்.

prod: என்னது? அமெரிக்காவா? யோ.... இந்த கதைக்கு எதுக்கு டா அமெரிக்கா.

dir: சார், போன படத்துல எச்சி துப்புற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சியவே நாங்க switzerlandல தான் shoot பண்ணுனோம்.

prod: (கையில் வைத்திருந்த பேப்பரை மேசையில் வீசினார்.) நான் கொலவெறியா போறதுக்குள்ள ஓடி போயிடு! நீ எல்லாம் ஒரு director??? உன்கிட்ட கதை கேட்டேன் பாரு...என்னைய.....

dir: சார் சார்.... கோபம் படாதீங்க சார்! என் குருநாதரின் 'நடுநிசி நாய்கள்' படம்
மாறி 'பரதேசி பன்னிகள்' அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்.... அந்த கதைய கேக்குறீங்களா சார்?

producer: எடு அந்த வெளக்கமாத்த!!!!!!!

Jan 24, 2010

ஆயிரத்தில் ஆயா

காமெடி போஸ்ட் எழுதுவதற்கு சரக்கு(அட தப்பா நினைக்காதீங்க...) எதுவுமே இல்லன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போது தான் செல்வாராகவன், கார்த்தி, ரீமா ஞாபகம் வந்துச்சு. உடனே கிளம்பி போனேன்...அப்படின்னு நினைக்காதீங்க! அவங்க இப்போ வேலவெட்டி இல்லாம தான் இருக்காங்க...ஆக மெதுவாக தான் கிளம்பி போனேன்.

செல்வா வீட்டு ஹாலில் நிறைய வரலாறு குறிப்பு புத்தகங்கள், ஆங்கில பட டிவிடிகள் மேசையில் கிடந்தது. செல்வா, கார்த்தி, ரீமா உட்கார்ந்து இருந்தாங்க.
நான் உள்ளே நுழைந்தேன்.

நான்: வணக்கம் கார்த்தி, ஹாய் செல்வா, ஹாலோ ரீமா.
(மூவரும் சிரித்தனர். சிரிப்பதுபோல் முறைத்தனர். )

நான்: என் வலைப்பூவுக்கு ஒரு காமெடி போஸ்ட் தேவை. அதான் உங்கள பாக்க வந்தேன்.

செல்வா: எங்கள பார்த்தா எப்படி இருக்கு? (கண்ணாடியை சரிசெய்து கொண்டார்)

நான் ஒரு முறை அவரை மேலும் கீழும் பார்த்தேன்.

நான்: ஆயிரத்தில் ஒருவன் மாதிரி தெரியுறீங்க சார். (ஐஸ் வைத்தேன்...படத்தின் தலைப்பை சொன்னதும் சாந்தம் ஆனார்)

நான்: ஆமா....சார்...நீங்க ஏன் இந்த படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன்னு தலைப்பு வச்சீங்க? அது அர்த்தம் என்ன?

கார்த்தி: நானும் நிறைய தடவ கேட்டேன். அவர் எம் ஜி ஆர் ரசிகர்...அதான் அப்படி வச்சேன்னு சொன்னாரு.

நான்: ஓ...நான்கூட நினைச்சுட்டேன்...இந்த படம் ஆயிரத்தில் ஒருத்தனுக்கு மட்டும் தான் புரியும்னு!

கார்த்தி: ஏங்க..இப்படி எடுக்குமுடுக்கா கேட்டா நாங்க என்ன பண்றது?

நான்: சரி அடுத்த கேள்வி உங்களுக்கு கார்த்தி.... அது என்ன படத்துல ஆவூன்னா...பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன் உங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றீங்க. சரி ரீமாவுக்கு பதிலா ஒரு கிழவி அங்க நின்னு இருந்தா...ஏன் ரீமாவே மேக்-கப் போடாம அங்க நின்னு இருந்தா... அப்படி தான் சொல்லியிருப்பீங்களா?

கார்த்தி: இது முழுக்க முழுக்க செல்வாவோட கற்பனை! அவர் தான் இதுக்கு பதில் சொல்லனும்...

நான்: இப்படி எஸ்கேப் ஆனா எப்படி சார்?

(நான் ரீமாவை கிண்டல் பண்ணியது கொஞ்சம் நேரம் கழிச்சு தான் அவருக்கு புரிஞ்சுது...அவர் பாய்ந்தார்...)

ரீமா: hey what are you thinking of me man? u *&($&$^$##&***.

நான்: இந்தா தாயீ.... லண்டன்ல பொறந்து வாஷிங்டன்ல வாய் கொப்புளிச்ச மாதிரி இங்கிலீஷ் பேசினா...நான் ஒன்னும் பயப்புட மாட்டேன்!

ரீமா: i'll shoot you!
நான்: தீபாவளி துப்பாக்கி உங்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா? எனக்கும் தான் கிடைக்கும்.

(என் டம்மி துப்பாக்கிய தூக்கி காட்டியதும் பயந்துட்டார்)

ரீமா: ok ok cool yea...what were u asking me?

நான்: தமிழ் தமிழ்...

ரீமா: (ஆங்கிலம் கலந்த தமிழில்) இந்த படத்துல ஏண்டா நடிச்சேன்னு நினைச்சேன் ஆரம்புத்துலே... அப்பரம் விளங்கிச்சு செல்வா என்ன எதிர்பார்க்குறார்ன்னு.

நான்: படம் பார்க்க போன நாங்களும் அப்படி தான்...ஏண்டா படத்துக்கு வந்தோம்னு ஆச்சு!

கார்த்தி: ஏன் படம் பிடிக்கலையா?

நான்: அட என்ன ஒரு படம். என் வாழ்க்கையவே திருப்பி போட்ட படம்!

செல்வா: (சந்தோஷம் அடைந்தார்) அப்படியா? ஏன்?

நான்: இந்த படத்த பார்த்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னேன் முதல் நாள் முதல் ஷோவுக்கு. குடும்பத்தோட பார்க்க போனோம். அடுத்த நாள் காலையில எனக்கு டிபன் கட். மதியம் சாப்பாடு இல்ல! என்னைய கொலவெறியோட பாக்குறாங்க என் குடும்பம். இப்படி என் வாழ்க்கை திசைதிருப்பி போனதற்கு காரணம் இந்த படம் தான்!

செல்வா: உங்களுக்கு புரியலைன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது? வரலாறு புரிஞ்சா இது புரியும். (குதித்தார்)

நான்: வரலாறு மட்டும் போதுமா? இல்ல...தமிழும் தெரிஞ்சு இருக்கனுமா? ரெண்டாவது பகுதில எனக்கு தமிழ் படத்துக்கே தமிழ் subtitles தேவைப்பட்டுச்சு!

கார்த்தி: கொஞ்சம் சுத்த தமிழா போச்சு.

நான்: தமிழ் சுத்தமா இருந்து என்ன பயன்? படம் சுத்தமா இல்லையே?

கார்த்தி:(தலையை தொங்க போட்டார்)

நான்: சரி பருத்திவீரன் படத்துல ஒரு மாதிரியா நடிச்சீங்க. சரி ஏத்துகிட்டோம். அதே மாதிரி மறுபடியும் இந்த படத்துல நடிச்சு போர் அடிக்க வச்சுட்டீங்களே. இந்த சாக்லெட் பாய், அமெரிக்கா மாப்பிள்ள, பொண்ணு பின்னாடி ஓடுற பையன், காலேஜ் பசங்க ரோல்.... இந்த மாதிரி எல்லாம் நடிக்க வராதா?

கார்த்தி: அப்பா சொல்லியிருக்கார்.....

நான்: என்னென்னு? அழுக்கு ரோல தான் நடிக்கனும்னா...

கார்த்தி: அது இல்லங்க...

செல்வா: முதல அவருக்கு நல்ல கோட் சூட் போட்ட கதாபாத்திரம் தான் கொடுத்தோம்... அவரு தான் செண்டிமெண்ட் காரணத்துக்காக...அதெல்லாம் கழட்டி போட்டு கருப்பு மண்ண எடுத்து தேச்சிகிட்டாரு.

நான்: ஓ...அப்படி போகுதா கதை....செல்வா சார் உங்ககிட்ட இன்னொரு கேள்வி.. இத படத்துல பார்த்திபன் சார காமெடி பண்ண வைக்கனும்னு எப்படி தோணிச்சு?

செல்வா: யோவ்...அவர் பண்ணது ராஜா ரோல். காமெடி ரோல் கிடையாது.

நான்: ஹாஹாஹா...எது அதுவா? ஆடிகிட்டே ஒரு சீன்ல வருவாரே...அது காமெடி கிடையாதா உங்க ஊர்ல??? ஹாஹாஹா...ஐயோ ஐயோ... தியெட்டர்ல அந்த சீனுக்கு என்ன மாதிரி ஒரு சிரிப்பு வெடி வெடிச்சுது தெரியுமா? ஹாஹா...போங்க சார்...நீங்க தான் செம்ம காமெடியா பேசுறீங்க (எனக்கு சிரிப்பு தாங்க முடியல)

(ரீமாவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் தமிழில் பேசியதால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள கார்த்தியிடம் சென்றார்.)

செல்வா: அந்த காலத்துல ராஜா இப்படி தான் இருந்தாரு!!

நான்: அப்போ எல்லாம் ராஜாவும் பெரிய டான்சர்னு சொல்லுங்க...(எனக்கு பார்த்திபன் ஆடிய சீன் கண்ணு முன்னால வர...மீண்டும் சிரித்தேன்.)

செல்வா: தமிழ் சினிமாவ அடுத்த லெவுலுக்கு எடுத்துகிட்டு போக இந்த மாதிரி படம் தேவை.

நான்: ஆமா சார். சரியா சொன்னீங்க. சன் டிவில இங்கிலீஷ் படத்த தான் தமிழ்ல டப் பண்ணி போட்டுகிட்டு இருந்தான். இந்த மாதிரி படம் வந்துச்சுனா, அவன் தமிழ் படத்தையே தமிழ்ல டப் பண்ணி போடனும்! இத எவ்வளவு பெரிய முன்னேற்றம்!! அடுத்த லெவுல் தாங்கோ!!

ரீமா: where is andrea?

(செல்வா பதில் சொல்லவில்லை)

நான்: செல்வா சார் எங்க அவங்க?

செல்வா: வீணா எங்கிட்ட கேள்விகேட்டு என்னைய மாட்டிவிடாதீங்க! நான் ஏதாச்சு சொல்ல போக...செல்வாவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ...அப்படி ஏதாச்சு கிசுகிசு எழுதுவீங்க... எதுக்கு வீண்பேச்சு...

நான்: ஆஹா... சூப்பரா ஐடியாவ அள்ளிவீசுறீங்க! அடுத்த கிசுகிசு அது தான்.

கார்த்தி: இண்டர்வியூ முடிஞ்சுதா?

நான்: இதே மாதிரி படத்துல நடிச்சீங்கன்னா, உங்க கதை தான் சார் முடிஞ்சு போகும்.

கார்த்தி: அடுத்த படத்துல ரொம்ப யூத்வுல்லா வறேன்.

நான்: எனக்கு நம்பிக்கை இல்ல சார்.

கார்த்தி: அட நம்புங்கப்பா!

நான்: இன்னொரு முக்கியமான கேள்வி செல்வா சார்.... அடுத்த படம் என்ன?

செல்வா: இப்போதைக்கு ஒரு passport size photo கூட எடுக்க போறது இல்ல. எத எடுத்தாலும், உங்கள மாதிரி ஆளுங்க ஏதாச்சு குறை சொல்லிகிட்டு இருப்பீங்க!

நான்: அட நீங்க இந்த மாதிரி கண்டிப்பா எடுக்கனும். அப்பரம் இல்லேன்னு ப்ளாக் எழுதுற எங்கள மாதிரி ஆளுங்க புழைப்பு என்ன ஆகுறது? ரீமா...உங்க அடுத்த படம்?

ரீமா: ஹாலிவுட்ல இரண்டு மூனு படம் பேசிகிட்டு இருக்காங்க....

நான்: இது உலக நடிப்புடா சாமி! கார்த்தி நீங்க...?

கார்த்தி: செஞ்ச பாவங்கள கழிக்க இமயமலைக்கு போக போறேன்...

நான்: ஹாஹா...ஒரே ஒரு கேள்வி. நீங்க திடீரென்னு கலரா மாறிடுறீங்க...அப்பரம் கருப்பா இருக்கீங்க படத்துல...சோப்பு போட்டு குளிப்பீங்களா இல்ல தங்க பிஸ்கேட் போட்டு குளிப்பீங்களா?

கார்த்தி: ஐயோ...எனக்கும் அதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல. அண்ணன் பிரச்சனை அது. அது தங்கம்கூட இல்லங்க...நாய் பிஸ்கேட் அடிக்கி வச்சு இருந்தோம்...அத போய் தங்கம் பிஸ்கேட்னு சொல்லிட்டாங்க இந்த இன்கம்டெக்ஸ் ஆபிசர்.....

நான்: நிசமாவா? இந்த உலகம் இன்னுமா நம்பிகிட்டு இருக்கு!!

Apr 24, 2009

எக்ஸாம் முடிஞ்சபிறகு வரும் ஆசைகள்!

3rd year 2nd semester கடைசி பரிட்சையை(வெற்றிகரமா) முடித்துவிட்டேன். இனி 2 மாதம் லீவு. இரண்டு வாரம் உடல் சுகமில்லை. அப்படி இருந்தும் தேர்வை எப்படியோ போட்டு அடிச்சு முடிச்சுட்டேன். நல்லா இருக்கும்போது எழுதினாவே, ம்ஹும்.... இப்ப இந்த நிலைமையில் தேர்வு முடிவுகள் எப்படியோ! உங்கள் ஆசிர்வாதமும் பிராத்தனைகளும் ரொம்ம்ப தேவைங்கோ! இப்போ வரும் ஆசைகள்...
எனக்காக தனஷ் பேசுகிறார்.



தனஷ்: இது என் கனவு திவ்யா.சின்ன வயசுல ஒன்னாவது படிக்கும்போது mathsல 100% வாங்கினேனே, அது மாதிரி. இதலாம் கிடைக்காதா கிடைக்காதான்னு எவ்வளவு நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா. இதோ இதோ இந்த செவத்தலாம் கேட்டு பாரேன். எத்தன நாள் இது முன்னாடி நின்னு அழுது இருக்கேன்னு சொல்லும்.

எனக்கு இதாண்டா பிரச்சனை. எனக்குன்னு வரும்போது எதுவுமே நடக்குறது இல்ல. அப்படி நான் என்ன பெரிசா கேட்டேன். நீங்கலாம் வாங்குற மாதிரி சாதாரண ஒரு distinction. அது ஏன் எனக்கும் மட்டும் கிடைக்க மாட்டேங்குது. ஏன் எனக்கும் மட்டும் தப்பாவே நடக்குது. நான் என்ன பாவம் பண்ணேன் திவ்யா??

Apr 6, 2009

டி ஆர் மற்றும் ரமேஷின் இங்கிலீசு- துரை என்னமா பேசுது!



யப்பா... ambulanceக்கு ஃபோன் பண்ணுங்க? என்னால முடியல....atleast ஒரு oxygen tankகாவது ஆர்டர் பண்ணுங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....



suppress and upress and depress!
compress
actress
aggress
distress
empress
hindu express
overdress
u media press
i going congress!!

Apr 1, 2009

முட்டாள்கள் தினம்- எங்களுக்கு தீபாவளி மாதிரில!

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும்(அவ்வ்வ்வ்வ்வ்...) சென்ற ஆண்டு தொடங்கிய இந்த 'வியாதி' இந்த ஆண்டு வரை நீடிக்கிறது. சென்ற ஆண்டு ஒரே கதையை வைத்து 4 நண்பர்களை ஏமாற்றினேன். (இதலாம் ஒரு பொழப்பா அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழுந்தாலும்... விழாத மாதிரி இருந்துகிறேன்)


எத்தனையோ கதை எழுதுறோம்(ஓ... நீ எழுதுவதற்கு பெயர் கதையா.. சரி ரைட்டு), நமக்காக ஒரு கதைய அவிழ்த்துவிடுவோமே என்று ஆரம்பித்தேன். ஏப்ரல் 1ஆம் தேதி அன்று நிறைய பேர் உஷாராக இருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே என் வேட்டையை ஆரம்பித்துவிட்டேன். இப்போது எல்லாம் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று யாருமே ஃபோனைகூட எடுப்பதில்லை! ஹிஹி.... சரி நம்ம கதைக்கு வருவோம். இந்த வருடம் target அப்பாவி 5 நண்பர்கள்.


1) தோழனிடம் ஒரு வாரத்திற்கு முன் பேசி கொண்டிருந்தபோது, அவன் என்னை கிண்டல் செய்து பேசிய போது நான் சொன்னேன், " ஏய் இப்படி பேசாதே...என் bf கேட்டாருன்னா தப்பா நினைப்பார்." என்று பொய் சொன்னேன். அவன் அதிர்ச்சியாய், "என்னது bf? எப்போ இதலாம் நடந்துச்சு?" என்று ஆரம்பித்தவனிடம் ஒரு மெகா மகா பொய் கதையை கூறினேன். கொஞ்ச நாள்கள் கழித்து, bf என்னிடம் சண்டை போட்டதாகவும், நாங்க பிரிந்துவிட்டோம் என்பதாகவும் சொன்னேன். ஒரு வாரம் ஓடிய கதை, இன்று தான் உண்மையை போட்டு உடைத்து, இந்த உலகில் நீயும் ஒரு முட்டாள் தான் என்று மகுடம் சூடி பாராட்டினேன். :) பையன் கோபத்துல கொந்தளிச்சுகிட்டு இருக்கான்!!


2) வூட்டுல மாப்பிள்ள பாக்குறாங்கன்னு இன்னொரு கதை, இது சிட்னியில் படிக்கும் என் பள்ளி தோழிக்கு இமெயில் மூலம் அனுப்பினேன். பொண்ணு பயந்து, மிரண்டு போய், அட்வைஸ் மேல் அட்வைஸ் அனுப்பி அதன் பாச மழையை பொழிந்துவிட்டது. என்ன தான் சொல்லுங்க... நமக்கு ஒரு கஷ்டம் வந்தா... இந்த பாசக்கார புள்ளைங்க ரொம்ம்ப தவிச்சுடுறாங்கப்பா!! எப்படி ஓடியது என்பதை காண இங்க செல்லலாம்! இமெயில் கலாட்டா

பிறகு, அவளிடம் உண்மையை போட்டு உடைத்து, எனது இரண்டாவது சதத்தை அடித்தேன்.


3) இது மூன்றாவது பந்து, கண்டிப்பாக hatrick அடித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஆக, மேல் சொன்ன இரண்டாவது கதையை குறுந்தகவல் மூலம் அனுப்பினேன் ஒரு தோழியிடம்.அவளும் ஓரளவுக்கு ஏமாந்துவிட்டாள்.


4) குறந்தகவல், இமெயில்....ஒகே. யாரு யாரோ கண்டுபிடித்ததை பயன்படுத்தினாயே, ஏன் நான் கண்டுபிடித்ததை பயன்படுத்தவில்லை என்று alexander grahambell கேட்டுவிடகூடாது பாருங்க. ஆக, நேற்று என் கல்லூரி தோழியிடம் ஃபோன் செய்து , "என் ஆண்ட்டி ஒருத்தர் ஒரு film production company வச்சு இருக்காங்க. அவங்க ஒரு குறும்படம் எடுக்க போறாங்க. உன்னைய நியூ இயிர் பார்ட்டில பாத்தாங்க. உன் ஃபோட்டா காட்டுனாங்க. நான் சொன்னே இந்த பொண்ணு என் தோழி தானு. என்னைய உன்கிட்ட பேசி பாக்க சொன்னாங்க. அதுல உன்னைய நடிக்க கூப்பிடுறாங்க. அந்த படம் ஒரு இளையர பத்தி.' என்றேன். பொண்ணு ரொம்ப fitness conscious. ஒல்லியா இருப்பா. அதனால நான் சொன்னேன் ," இந்த படத்துக்காக நீ ஒரு 20 கிலோ வேட் போடனும்." என்றதும் ஆச்சிரியத்தின் உச்சிக்கு போய்விட்டாள்.

அதுக்கு அப்பரம் உண்மை தெரிந்தபிறகு, என்னை பாராட்டிய ஒரே ஜீவன் இவள் தான். சிரித்து கொண்டே அவள், "உனக்கு எப்படி இப்படிலாம் தோணுது. very innovative idea."

5) இன்னொரு கல்லூரி தோழியிடம் assignment due date நாளைக்கு என்றதும் பதறிவிட்டாள். அவள் எனக்கு பாராட்டு விழா எடுக்க போவதாக சொல்லியிருக்கிறாள். ஹிஹி...

ஆமா... எல்லாரையும் ஏமாற்றுகிறோமே. நம்மை ஏன் யாருமே ஏமாற்றுவதில்லை?? :)))

Jan 28, 2009

9 வருஷ நட்பு இன்னும் தொடரனும்.

பள்ளி நண்பர்களின் சந்திப்பு- 26/01/09

ஒவ்வொரு வருஷமும் குறைந்தது இரு முறையாவது சந்தித்து கொள்வோம். போன வருஷம் அதிகமாகவே இருந்தது. காரணம் எல்லாரும் தங்களது 21வது பிறந்தநாள் கொண்டாடத்தை கொண்டாடினர். ஒவ்வொரு நண்பரின் பிறந்த நாளுக்கும் போய்விடுவோம் (பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தே...பட்ஜெட் சங்கர் படம் அளவுக்கு ஏறிபோச்சு...அத வேற கதை..)


மதியம் 12 மணிக்கு வந்துடுங்க என்று தோழி ஸ் எம் ஸ் செய்தாள் அதற்கு முன் தினம். எங்களை ஒன்று திரட்டி ஏற்பாடு செய்த தோழிக்கு பெரிய கட் அவுட் வைக்கனும். ஏன்னா, ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். இதை ஒரு மாதம் முன்பே, தொடங்கிவிட்டாள். கெட்டிக்காரி! (என் ஃபிரண்டாச்சே..:)


அக்காவுக்கும் என் பள்ளி நண்பர்களை நன்கு தெரியும் என்பதால், அக்காவும் வந்தாங்க. நானும் அக்காவும் தான் சொன்ன நேரத்திற்கு சென்றோம். அதுக்கு அப்பரம் ஒவ்வொரு ஆளா வந்து சேர்ந்தாங்க. ஒவ்வொருவரும் ஒரு சாப்பாடு ஐட்டம் கொண்டு வரனும். mee goreng (noodles வகை மாதிரி ஒன்னு), egg fried rice, sambal chicken, sardine fish curry, chicken nuggets, egg masala,chips, biscuits, coke, miranda...என்று பலவகையான சாப்பாடு.

இவ்வளவு வந்துவிடும் என்று தெரியாது. தெரிந்து இருந்தால், இரண்டு நாள் பட்டினியா இருந்திருப்பேன்!:)


நண்பர் விக்கி என்பவர் பாவம். கால்ல ஆப்ரேஷன் அவனுக்கு. இருந்தாலும் பதினாறு வயதினிலே சப்பானி மாதிரி வந்து சேர்ந்துட்டான். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவங்க எல்லார்கிட்டயும்- என்ன நடந்தாலும் சரி, சந்திப்பு என்றால் கண்டிப்பா வந்துடுவாங்க.

இன்னொரு தோழியின் தங்கையோட பிறந்தநாள். அப்படி இருந்தும் அன்று, தோழி இங்கு வந்தாள். சாப்பாடு வயிற்றை நிரப்பியது. இவர்கள் பாசம் மனசை நிரப்பியது (ஃபீலிங்ஸ் ஆஃ தளபதி ரஜினி, மம்மூட்டி)

பொங்கலுக்கே வெடி வெடிப்போம். தீபாவளி வந்தா சும்மா விடுவோமா! ஒருத்தர் இரண்டு பேர சந்திச்சுக்கிட்டாலே, முடிஞ்சுது. இதுல பத்து பேரு நாங்க, சும்மா இருப்போமா...கேலிக்கும் கூத்துக்கும் பஞ்சமே இல்ல!

இங்க குரூப்ல இங்களவிட கொஞ்ச வயது அதிகம் முத்து என்னும் நண்பருக்கு தான். அவருக்கு கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் ஆக போகுது, புது வீடு வாங்கிவிட்டார்- இப்படி அவர் சொந்த கதைய சொல்ல, நாங்க கிண்டல் பண்ண...டைம் போனதே தெரியல.

அப்பரம் இன்னொரு தோழி இருக்கா. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவள், 1008 தடவ ஃபோன் வரும் அவளுக்கு. சென்னையில் மாமா மகன் ஒருத்தர் இருக்கார் அவளுக்கு. இவளுக்கும் இந்த மாமா மகனுக்கு கல்யாணம் ஆக போகுது. ஆக, இத வச்சே இவள கன்னாபின்னான்னு கிண்டல் அடிப்போம்.

அவள் ஃபோன் attend பண்ணிட்டு வந்தாள்.

அக்கா: ஏய், can u come and eat first? who was that on the line?
அவள்: overseas call...
நான்: அப்பரம், அத்தான் சாப்பிட்டார? மாமியார் சாப்பிட்டாங்களா? மாமனார் சாப்பிட்டாங்களா?
இவங்களாம் சாப்பிட்டு பிறகு தான் இவ சாப்பிடுவாள். இவங்க சாப்பிடலன்னா, பச்சை தண்ணிகூட பல்லுல படாது பாப்பாவுக்கு!

என்று சொல்லி முடிப்பதற்குள் என்னைய அடிக்க ஓடி வர, நானும் ESCAPE!

அப்பரம் உலக கதை, சொந்த கதை, சோக கதை. sydneyயில் படித்து கொண்டிருக்கிறாள் இன்னொரு தோழி. அவளை 'sydney-return' என்று கிண்டல் அடிப்போம். ஏன் என்றால் அவள் இட்லியைகூட spoon/forkல் தான் சாப்பிடுவாள்.

ஏதோ ஒன்னு பேசிகிட்டு இருந்தபோது, ஆஸ்பித்திரி என்ற வார்த்தை வந்துவிட்டது. உடனே அக்கா, "ஏய் guys, எனக்கு ஒரு கவிதை தோனுது."

எல்லாரும் ஆர்வமாய் அவள் சொல்வதை கேட்க,

"ஆஸ்பித்திரி போனா ஒரு கற்பஸ்திரி
புள்ள பொறந்த பிறகு தெரிஞ்சுது
அவள் history!"

என்றாள்.

பக்கத்திலுள்ள கல்ல எடுத்து தூக்கிபோட்டனர் சிலர். ஆஹா ஓஹோ என்று பாராட்டினர் சிலர். இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் குழம்பி இருந்தனர் சிலர்.

அதற்கு அப்பரம், guessing-the-movie-name விளையாட்டை விளையாடினோம். இரு குழுக்களாய் பிரித்தோம். ஒரு படத்தின் தலைப்பை பாவனை செய்து தன் குழுவை அத்தலைப்பை சொல்ல வைக்கனும். கேள்வி படாத பட பெயர்லாம் வந்துச்சு... செம்ம காமெடியா போச்சு. எல்லாருக்குள்ளயும் ஒரு நடிப்பு திறமை இருக்குப்பா!

இதுல டாப் காமெடி என்னவென்றால் 'sydney-return' அடிக்கும் கூத்து தான். எல்லா படத்துக்கு ஒரே மாதிரியான பாவனை செய்து காட்டி எங்களை கொலைவெறிக்கு ஆளாக்கினாள்!!!

நேரம் 430 ஆகிவிட்டது. சில புகைபடங்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினோம்.

அடிச்சு போட்ட மாதிரி உடல் சோர்வு ஏற்பட்டது. இத்தனைக்கும் நாங்க அதிகமா ஒன்னுமே பண்ணல!???!!! :)