Jan 22, 2015

success meet of Ai- ஏன் this soi soi??

2 நாளுக்கு முன்னாடி ரிலிஸ் ஆன 'Ai- ஏன் this soi soi?' திரைவிமர்சனம் கிட்டதட்ட ஒரு மில்லியன் ஹிட்ஸ் வாங்கி இருக்கு!!! இந்தியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா, மொரிஸ்சியஸ் ஆகிய நாடுகளில் அதிக வரவேற்பு பெற்றதால், உடனே ஒரு success meetக்கு ஏற்பாடு செய்தோம்.....

விஷால்: ம்ம்...எல்லாருக்கும் வணக்கம். பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம். ம்ம்ம்... Ai- ஏன் this soi soi? ரொம்ப பெரிய ஹிட். எல்லா இடத்திலும்,மக்கள் வரவேற்பு இருக்கு. ஆனா ரிலிஸ் ஆன அதே நாள்ல காரைக்குடில இதோட திருட்டு விசிடி வந்திருச்சி. நான் போய் கேட்டபோ....அவனுக்கே தெரியல அவன் செய்ற தப்புனு. இத நான் வன்மையா கண்டிக்கிறேன். நம்ம எல்லாரும் ஒன்னா நின்னு இத தடுக்கனும்.




KS RAVIKUMAR: இதலாம் ஒரு விமர்சனமானு கிண்டல் பண்றவங்கெல்லாம் இதே விமர்சனம் இங்கிலிஷ்லையோ ஹாலிவுட்லையோ வந்தா கைதட்டி ரசிக்குறீங்க!! முதல் லைன்-க்கு அப்பரம் விமர்சனமே முடிஞ்சிட்டு! அதுக்கு அப்பரம் கிளம்பி போ!! don't see the review. எந்திரிச்சு போ!





ஹிப் ஆப் தமிழா ஆதி: மேடைல இருக்குற அனைவருக்கும் வணக்கம். விஷால் அண்ணாவுக்கு வணக்கம்! Ai- ஏன் this soi soi?' படிச்சேன். செம்ம மாஸ்! சூப்பரா வந்திருக்கு! எப்படி பாராட்டனும் தெரில.... 
ஒரு ராப்-பாவே 
பாடிடுறேன்.....ஏய்நானுஉன்ஹிப்ஆப்தமிழாசூப்பர்போஸ்ட்இது
ஏய்புள்ளபுள்ளஇந்தவிமர்சனம்குள்ளகுள்ள
எதும்தப்பேஇல்லஇல்ல 









சூர்யா: ரவிகுமார் சார்க்கு வணக்கம். மத்த எல்லாருக்கும் வணக்கம். பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம். தயாரிப்பாளர்களுக்கு வணக்கம். இயக்குனர்க்கு வணக்கம். இங்க வந்து இருக்கு எல்லாருக்கும் வணக்கம்.
இத நான் சொல்லியே ஆகனும். எழுதுறது ரொம்ப பெரிய பெரிய விஷயம். இது இன்னும் பெரிசு பெரிசு வளரனும். அப்பா அடிக்கடி சொல்வாரு. வீட்டுல தம்பி இருக்கான். வீட்டுல ஜோவும் அடிக்கடி சொல்லும். வீட்டுல தியா, தேவ் ரொம்ப ரொம்ப அழகா விளையாடுவாங்க.

(அருகே நின்ற நான் அவர் காது அருகே...."சூர்யா..... முடிஞ்ச...இத விமர்சனம் படிச்சத பத்தி....")

இத நான் சொல்லியே ஆகனும். படிப்பு ரொம்ப முக்கியம். அகரம் ஆரம்பிச்சதே அதுக்கு தான். அகரம் ரொம்ப அழகான விஷயங்கள் பண்ணிகிட்டு இருக்கு. ஒரு கோடி குழந்தைகள......

(நான்: சார் இருக்கட்டும் சார்!! இந்த விமர்சனம் படிச்சீங்களா இல்லையா?)

காயத்ரி....அவங்க படிப்பு செலவு முழுசும் அகரம் ஏத்துக்கும்!!!

(நான்: சார் நான் படிச்சு முடிச்சு 10 வருஷம் ஆயிச்சு சார்!!!)


Jan 19, 2015

Ai- ஏன் this soi soi....?

லிங்கா படம் பார்க்கல மக்கா! கேட்ட விம்ரசனங்களும், பார்த்தவர்களின் பலவீனமான உடல் நிலையும் பார்த்து நான் தப்பித்து கொண்டேன் என்று நினைத்த போது 'விடாது கருப்பு' போல் என்னை தாக்கிய படம் தான் 'ஐ'.

இப்பலாம் படம் நல்லா இருக்குனு சொல்ல முடியல, நல்லா இல்லேன்னு சொல்ல முடியல. நம்மலே போட்டு தாக்குறாங்கப்பா!! ஏன் இந்த வீண் வம்புனு நினைச்சுகிட்டு போக முடியல!! கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்  புகை புடிச்சு அழிச்சு, தண்ணி குடிச்சு அழிச்சு வீண் போகும்போது வரும் அதே வலி தான், படம் பார்த்து வீண் அடிக்கும் போது வருகிறது.


இந்தியா- 120 rs ( 1.94 usd)
சிங்கப்பூர்  - S$18 (14.40 usd)
  லண்டன் - 22 pounds (33.34 usd)
 மலேசியா - 17 Rm (4.76 usd)

லண்டன் அடுத்த வரிசையில், அதிக பணம் செலுத்தி படம் பார்த்த என்னை போன்றவர்களுக்கு படம் பற்றி பேச உரிமை இருப்பதால், இத நான் சொல்லியே ஆகனும்....

கப்பு- சூப்பர்
காபி- ரொம்ப சுமார்

யூகிக்க கூடிய கதையவா இவ்வளவு நாளு யோசிச்சீங்க சார்?? அது என்ன சார், ஆஊனு கும்பிபாகம், கம்பிகுபாம், அப்படினு ஆரம்பிச்சுட்டுறீங்க!! நிறைய பார்த்தாச்சு சார்!!! விடுங்க....

 நானே கவலைய மறக்க படம் பார்க்க வந்தா, ஆபிஸ் மூஞ்சிங்கள ஞபாகம் படுத்துற ஒரு பாடல் வேற இதுல. ஏன் சார் ஏன்???

பாடல்கள் கேட்டு ரசித்து அளவுக்கு காட்சியமைப்பும் சரி, படத்தின் பிண்ணனி இசையும் சரி, மறுபடியும் சொய் சொய் தான் போங்க!!!

இதுகூட பரவாயில்ல, காமெடி என்ற பெயரில் திருநங்கைகளை கிண்டல் அடித்ததை தான் ஏற்று கொள்ளமுடியவில்லை. நான் கூட நினைச்சேன், இப்ப கிண்டல் பண்ணிட்டு அதுக்கு அப்பரம் கதையில் ஏதாச்சு வலுவான மெசெஜ் சொல்வாங்கனு நம்பி உட்கார்ந்து இருந்த எனக்கு மறுபடியும் சொய்...சொய் தான்!!

சந்தானம் இருந்ததால் இப்படி தைரியமா வசனம் வைக்கலாம்னு நினைச்சீங்களோ என்னவோனு தெரியல!

உடல் குறைத்து உடல் ஏத்தி நடிப்பது ரொம்ப கஷ்டம். அது தான் சொன்னேன் கப்பு- சூப்பர்

அதுக்கள்ள இருந்த காபி- ரொம்ப சுமார்!

விக்ரம் இனி இந்த 2, 3 வருஷம் படம் எல்லாம் பண்ணாதிங்க! 6 மாசத்துக்குள்ள படம் முடிக்கிற மாதிரி பண்ணுங்க (ஐயோ...அதே தான் ரஜினி லிங்காவுக்கு பண்ணாரு...) ம்ம்ம்...கட்டத்துரைக்களுக்கு எல்லாம் கட்டம் சரியில்லையோ!!!
**************************************************************

முதல் நாள் காலையில் படம் பார்க்க போய் 2 நாள் கழிச்சு தான் வெளியே வந்த மாதிரி ஒரு உணர்வு! தலைப்பு மட்டும் தான் சுருக்கி வச்சியிருக்கீங்க, அதே மாதிரி படத்தின் நீளத்தை கொஞ்சம் அப்படியே செய்து இருக்கலாம்!!

Jan 1, 2015

ஜஸ்ட் சும்மா (1/1/15)

 
தூணை ஓடி போய் கட்டிபிடிக்கும் சிவாஜி போல தான், நானும் என் ப்ளாக்கை கட்டிபிடிக்க வேண்டும் என தோன்றுகிறது. கிட்டதட்ட 2 மாசம் ஆச்சு, இந்த பக்கம் வந்து!!

தினமும் எழுத துடிக்கும் எனக்கு ஏன் பழைய மாதிரி எழுத வர மாட்டேங்குது ஆராய்ச்சி பண்ணி பார்த்தேன். மூன்று காரணங்கள் கண்டுபிடிச்சேன்.

காரணம் 1) பேஸ் புக்
காரணம் 2) பேஸ் புக்
காரணம் 3) பேஸ் புக்

தக்காளி, பேஸ் புக் விட்டு வந்துடுலாம்னு பார்த்தா, கத்திய ஒரு தடவ எடுத்துட்டோம் அத தூக்கி போட முடியாது. வேலு நாய்க்கர் மாதிரி அதேலேய அழிஞ்சிடுவோம். அப்படி, பேஸ் புக் எங் ப்ளாக் எழுதும் பழக்கத்தை அழிச்சுடுமோனு ஒரு சின்ன பயம் இருக்கு!!

இருந்தாலும், எழுதுவேன்!!

******************************************************************************

புது வருடம் அன்று ஒன்றை செய்தால், தொடர்ந்து அந்த ஆண்டில் அப்பழக்கம் தொடரும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க!! ஆக, இன்று நல்ல கோழி பிரியாணி அடித்து, நிம்மதியான தூக்கம் போட்டு, உடற்பயிற்சி செய்து, ப்ளாக் எழுதி இருக்கேன்.

பார்ப்போம்..... பெரியவங்க சொல்வது சரியா இல்லையானு!

**********************************************************************

பீகே- படம் பார்த்தேன்! எனக்கு ரொம்ப பிடித்த படம். வாய்ப்பு இருந்தால், இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும், வீட்டில் உள்ளவர்கள் என்னை வெளியே தூக்கி போட்டாலும் பரவாயில்ல. ஹிஹிஹி.....

*************************************************************

இந்த ஹிப் ஆப் தமிழா செம்ம பாட்டு போடுறாருப்பா!!