Jul 4, 2014

நீயும் நானும் வேலு நாய்க்கர்!

நாயகன் படத்துல ஒரு சூப்பர் சீன் வரும். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கமல்ஹாசனை தேடி வந்து சொந்த கதை சோக கதையல்லாம் சொல்வாங்க! அத கேட்டுட்டு கமல் சொல்வார், "சரி இதலாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க?"

அதுக்கு, பக்கத்துல நிக்கும் ஜனகராஜ், கமல் கையைப் பிடித்து, "நாய்க்கரே, இனி அப்படி தான்" என்பார்.


கிட்டதட்ட நம்ம அனைவரும் ஒரு வகையில் வேலு நாய்க்கர் தான்! என்னிக்கு, இந்த SMARTPHONE நம்மகிட்ட கதை கதையா பேச ஆரம்பிச்சுதோ அன்று முதல் ஒரு மாதிரி ரவுடியா தான் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்.

எதையோ தேடி, எதையோ தொலைத்த கதையாக வாழ்க்கை போகுது.

whatsapp messageகளுக்கு அடிமை
இதுல நமக்கு என்ன பெருமை?

இரும்பினால், ஒரு whatsapp group.தும்பினால் ஒரு whatsapp group,

என எதுக்கு எடுத்தாலும், செய்திகளை 24 மணி நேரமும் சொல்லி கொண்டே இருப்பதால், பைத்தியம் போல் இருக்கிறோம்.

இந்த smartphone வைத்து இருப்பது fast food உணவை தினமும் திண்பதுபோல். சுவையாக தெரிவது பின்னர், வாந்தி எடுக்க காரணமாக அமையும்.

மண்டை வலி, குண்டை வலி, தொண்டை வலி வருவது தான் மிச்சம். whatsapp இல்லமால் தொடர்ந்தாற்போல் நாலு நாளைக்கு நிம்மதியா இருக்க முடியல! என்னடா வாழ்க்கை இது!


'உனக்கு என்ன திடீர் அக்கறை?' என்று நீங்க கேட்பது எனக்கு கேட்குது.

'நானே பாதிக்கபட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்.'

வேலு நாய்க்கருக்கு கடைசில ஏற்பட்ட நிலைமை நமக்கும் ஏற்பட்டுவிடுமோ-னு ஒரு அச்சம். கையில் நாம் எடுத்தது, நம்மை அழிக்கும் சக்தியாகி விடுமோ-னு பயமா இருக்கு.

May 30, 2014

ஜஸ்ட் சும்மா (30/5/14)

டிடிக்கு கல்யாணமாம்!! காலையில எழுந்த டிவிட்டர் பக்கம் போனால், பசங்கெல்லாம் நெஞ்சு வலிக்கு மருத்துவமனை போகும் செய்தி இருக்கு.

So here I hav an answer atlst. Al ur blessings r vry important to us. Weddin wil b durin end of june. This is him

May 29, 2014

எனக்கு பிடித்த குறும்படம்-4

இந்த வாரம் கிட்டதட்ட 30 குறும்படங்களாவது பார்த்து இருப்பேன். முழு நீள படங்களை காட்டிலும் இக்குறும்படங்கள் உண்மையான நிறைவை தருகிறது. அப்படி தந்த நிறைவான படங்கள் சில இங்கே.

1) கசப்பு இனிப்பு


ஒரே இடத்தில் நடக்கும் வெவ்வேறு காதல்கள். இப்படி ஒரு வரியில் சொல்லகூடிய கதையாக இருந்தாலும், வசனங்களும், காட்சி அமைப்பும், முக்கியமா சொல்லனும்னா நடிகர்களின் அபார நடிப்பும் டாப் கிளாஸ்!!


2) the first kiss




காதல் கதைக்கான சரியான தலைப்பாக இருந்தாலும், படத்தின் கதை வேறு. ரொம்ப ரொம்ப யதார்த்தமான கதை. இம்மாதிரியான படங்களில் நடிகர்களின் தேர்வு ரொம்ப முக்கியம். அதை சரியாக செய்து ஒரு நிறைவான படத்தை தந்துள்ளது இயக்குனருக்கு பாராட்டுகள்!!

3) வியூகம்



படம் ( 1.43-17.46)

முகநூல்...அதாங்க இந்த கிரேககககம் புடிச்ச facebook! அத பத்தி ஒரு கதை. நான் பார்த்த குறும்படங்களிலே ஒரு செம்ம 'rich feel' கொடுத்த படம் இது தான். ஹீரோவாக நடித்தவருக்கு பெரிய எதிர்காலம் உண்டு.


(அப்படியே நம்ம 'தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்' பட்டியலிலும் இடம்பெற வாய்ப்பு உண்டு)

May 26, 2014

இசை கேட்டா அழுகை வருமா, மச்சி? எனக்கு வந்துச்சு, மச்சி!

வலது கண் சிமிட்டினால் காதல் வருமா, இடது கண் சிமிட்டினால் காதல் வருமா என்ற வகையில் மொக்கையான தலைப்பில் சில நேரங்களில் நிகழ்ச்சி நடத்தும் நீயா நானா, நேற்று நடத்திய 1.5 மணி இசை விருந்து மெய்சிலிர்க்க வைத்து விட்டது. (london star nite இல்லங்க.)

கோபி இங்கிலீஷில் சொல்ல போனால், "no words to say" எனலாம். ரொம்ப நாளைக்கு அப்பரம் ரசித்து பார்த்த நீயா நானா நிகழ்ச்சி.

இந்திய பண்பாட்டில் இருக்கும் இசையும், இசை கருவிகளும் அதை செய்பவர்களை பற்றியும் ரொம்ப ஜாலியாக போன நிகழ்ச்சி. 

இசை கலைஞர்கள் பலரும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை லேசாக சுட்டிக்காட்டி விட்டு போனது இன்னொரு சிறப்பு. அதை வைத்து அழுகாச்சி நிகழ்ச்சி செய்யாமல் போனதற்கு, மிக பெரிய நன்றி விஜய் டீவி!
நாதஸ்வரம் வாசித்த தம்பதியினரே, அருமை அருமை! மெய்சிலிர்த்து, கண்கள் கலங்கியது எனக்கு! 

இசை வேறு பாடல் வேறு என சொன்ன கருத்தும் ரொம்ப யதார்த்தமாய் இருந்தது. பாடல் என்று வரும்போது, கேட்பவரின் 'freedom of interpretation' அடங்கி போகும். ஆனால், இசை என்பது தானே ஒருவர் ஓவியம் வரைவது போல, அவர் தம் கற்பனைக்கு ஏற்றாற்போல அமைத்து கொள்ளலாம போன்ற கருத்துகள் அனைத்தும் எனக்கு புதிதாய் தெரிந்தது. 

அப்படியே ஒரு இசை விருந்துக்கு சென்று வந்ததை போல் ஓர் உணர்வு. ஒவ்வொரு முறையும் இசை கலைஞர்கள் வாசிக்கும்போது, என்னை அறியாமலேயே ஒரு வித சந்தோஷம் கண்ணீரை வரவழைத்தது. 

சில விஷயங்களையும், சில மக்களையும் பார்க்கும்போது தான் தோன்றும், "இவங்க நல்லா இருக்கனும். இதவிட பெரிய இடத்துக்கு போகனும்' அப்படி 1.5 மணி நேரமாய் தோன்றியது!