Apr 21, 2013

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-24



சித்தார்த்....இவர் சித்தார்த்...........





சாரி, இதுக்கு மேல பேச்சு வரல:))) கொஞ்சம் பொறுங்க....:))))


வயசு 34. 34???!!?? வருஷம் போக போக இவர் இன்னும் இளமையா போய்கிட்டு இருக்காரு! இவர் ரொம்ப நாள் சினிமால இருக்காரே, ஏன் திடீரென்னு 'சைட்' என்பீர்கள்.சமீபத்தில் 'உதயம் nh4' படம் trailer பார்த்ததினால் வந்தது!!

அடுத்து....



ரவி ராம்பால். இப்போது நடக்கும் ஐபில் ஆட்டங்களை அவ்வபோது பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் ரொம்ப கவர்ந்தவர் ரவி ராம்பால். அதாவது சிலரை பார்த்தவுடனே 'அட' என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்டவர் தான் இந்த ரவி ராம்பால்!! 

அடுத்து....



ஜெடேஜா. பிடித்த அம்சம்- திறமை. கடந்த சில ஆட்டங்களில் இவரின் அபார வெற்றி இவர் பக்கம் ஈர்த்துள்ளது. மற்றபடி பார்க்க போனால்..ம்ம்... இப்படி trimmed hair and beard தான் இவருக்கு அழகு!! 

Apr 8, 2013

சென்னையில் ஒரு கேடி பில்லாவும் பரதேசியும்.

இந்த வார இறுதி நாட்களில், 3 படங்கள்.

1) சென்னையில் ஒரு நாள்

ஏற்கனவே வந்த மலையாள படத்தை பார்த்துவிட்டதால், இந்த படம் அவ்வளவு புதிதாக தெரியவில்லை. அந்த படத்தில் இருந்த ஒரு சில 'மேஜிக்' இதில் இல்லை.

இருந்தாலும், சில காட்சிகள் ரொம்பவே நல்லா இருந்துச்சு. அதிலும் அந்த கார், பெரிய லாரி மோதி கொள்ளாமல் பயங்கரமாய் சர்சர் என்று வாகனம் போன காட்சிகள் எல்லாம் சூப்பர்! நடித்த அனைவருமே ரொம்ப நல்ல செய்து இருந்தாங்க.

தமிழ் டாக்கிஸ் யூடியுப் விமர்சனம் சொன்னதுபோல், "சேரன் நடிக்குறார்னு பயந்து படத்த பாக்காம போயிடாதீங்க. அவர் ரொம்ப நல்லா நடித்து இருந்தார்."

இதே மாதிரி நல்ல கதாபாத்திரங்களில் நடிங்க சார்! உங்கள எல்லாருக்கும் பிடிக்கும்.

2) கேடி பில்லா கிள்ளாடி ரங்கா- சூப்பர் ஹிட் படம் என்றார்கள்! 

படத்தை பார்த்துவிட்டு, 'இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல' என்று தான் தோன்றியது. ஒரு கட்டத்தில் செம கடுப்பாய் வந்தது. சிரிப்பே வராமல் எவ்வளவு நேரம் தான் நானும் 'இந்தா காமெடி வந்துடும். அந்தா காமெடி வந்துடும்'னு எதிர்பார்க்குறது?

சும்மா ஃபேஸ்புக் பக்கங்களின் தலைப்பின் சாயலில் காமெடி டயலாக் சொன்னால், சிரிப்பு வருமா?

இதை காமெடி படம் என்றால், உள்ளத்தை அளித்தா போன்ற படத்தை எல்லாம் என்ன சொல்வீங்க!!!???

the convent boy விமல் அவர்களே, நடிப்பு வந்தால் அதை கொஞ்சமாவது எடுத்து பாக்கெட்-ல போட்டுக்குங்க. தூர தூக்கி போடாதீங்க.

சிவா கார்த்திகேயா, பெண்களை கிண்டல் பண்ணி சுண்டல் சாப்பிடும் இந்த கதாபாத்திரம் உனக்கு இனிமேல் வேண்டாம்ய்யா!!! இப்படி பேசினால் தான், கை தட்டல் கிடைக்கும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. கை தட்டல் வாங்க, வேற நல்ல வழியெல்லாம் இருக்குது தல!

சூரி, சந்தானத்துக்கு வந்த நிலை உங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு. டபுள் மீனிங் வசனம் பேசினால் அடுத்த 'சந்தானம்' நீங்க தான் பாஸ்!!

இயக்குனரே,................. சரி விடுங்க. இந்த அரையாண்டு பரிட்சைல என்னை பொருத்தவரை பாஸ் ஆகல. அடுத்த முழு ஆண்டு பரிட்சைலவாது நல்லா வர முயற்சி பண்ணுங்க.

அப்பரம் யுவன பத்தி சொல்ல மறந்துட்டேனே!!! சரி அது மறந்ததாகவே இருக்கட்டும்.

3) பரதேசி.

முதலில் இப்படத்தை பார்க்க அவ்வளவு ஆர்வம் இல்லை. அவரின் 'நான் கடவுள்' படம் கொடுத்த 'பயம்'. நம்ம வாழ்க்கையே கொஞ்சம் பரதேசி நிலைமைல தான் போயிகிட்டு இருக்கு. அதுல இந்த படத்த வேற பாக்கனுமா-னு யோசித்தேன். படத்தை பார்த்தேன். அட, பரவாயில்ல கொஞ்ச நல்லா தான் இருக்கு.

நிறைய காட்சிகளில், நாம் நமது வாழ்க்கையில் நடப்பவற்றை பார்க்க முடிந்தது.

கஷ்டப்பட்டு படிச்சு, பட்டம் வாங்கி, வேலைக்கு போகும்போது தெரிவதில்லை நாமும் நவீன பரதேசிகள் என்று.

அடிமையாக்கப்படுவோம்
வீட்டை மறந்து
சில நேரங்களில்
அனாதையாக்கப்படுவோம்.

 என்ன தான் உடல் நலம் சரியில்லை என்றாலும் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நாட்கள் எல்லாம் உண்டு. மருந்து செலவுக்கும் முதலாளிக்கும் பயந்து தன்ஷிகா கொஞ்சம் கொஞ்சமாய் சாகும் காட்சியில் உணர்ந்தேன் நானும் ஒரு 'பரதேசி' என்று.

தன்மானத்தை புதைத்தோம்
வருமானத்திற்காக!

இந்த மாதிரி படம் முழுவதும் இன்றைய சூழலுக்கு ஒற்றுமை இருந்தது. கடைசியில் அதர்வா, வேதிகாவை பார்த்து, "இந்த நரகத்துக்கள்ள விழுந்துட்டியே?" என்று வாய்விட்டு அழும் காட்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையை நினைச்சு நாம் அழுவதைபோலவே இருந்ததுச்சு.

நடிப்பு என்ற வகையில் எல்லாருமே நல்லா செய்து இருந்தாங்க. அதர்வாவின் பிச்சுபோட்ட பரோட்டா தமிழ் தான் ஆங்காங்கே தலை தூக்கியது. இருந்தாலும், நல்லாவே நடித்து இருந்தார்.

Mar 18, 2013

கவுண்டமணிக்கு ''happy birthdey dey dey to you'

இன்று கவுண்டமணியின் பிறந்தநாள். என்னை பொருத்தவரை 'the king of comedy' என்று சொல்வேன். நான் சின்ன வயதில் தொலைக்காட்சியில் படம் பார்க்கும்போது, பெயர் போடும் வேளையில் நான் பார்ப்பது ஒன்றே ஒன்று தான் - 'கவுண்டமணி செந்தில்' பெயரை தான்!

அப்படி இல்லை என்றால், அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் குறையும். அப்படி பெயர் இருந்தால், ரொம்ப குஷியாகிவிடுவேன். அவ்வளவு பிடிக்கும் கவுண்டமணியை (செந்திலும் சேர்ந்து) இப்போது கூட எனது வலைப்பூ பதிவு எழுதும்போது, அவரின் வசனங்கள் தான் பெரிய inspiration!!!

http://www.sparkthemagazine.com/wp-content/uploads/2012/05/petromax-opt.jpg

நண்பர்களிடம் பேசும்போது கூட அவரின் தாக்கம் நிறைய வரும் பேச்சில்!! அவரின்...

1) petrolmax lighta தான் வேணுமா?

2) ஆமா ஆமா.. நாங்க தான் நாங்க தான்!!

3) இப்பலாம் படிப்பு எந்த ரேஞ்சுல இருக்கு தெரியுமா?


4) நம்ம ஒன்னு கேட்டா, நம்மள அசர வைக்குற மாதிரி ஒரு பதில் 

சொல்வாரு பாரு....அது இங்க புரியாது வீட்டுக்கு போனா தான் புரியும்!!

5) ஒட்டுற வேளையா ஒழுங்கா பாருடானா, உட்கார்ந்து ஓட்டை போட்டு கொண்டு வந்திருக்கான்!!

6) yes, I am rajashekar!!

7) என்னது? வடுகபட்டி ராமசாமி செத்து போயிட்டாரா??

போன்ற வசனங்கள் எல்லாம் பேசும்போது பயன்படுத்துவோம் சூழ்நிலைக்கு ஏற்ப!!


 http://starmusiq.com/movieimages/Ullathai-Allitha_B.jpg

உள்ளத்தை அள்ளித்தா படம் எத்தன முறை பார்த்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை!! சோகமாக இருக்கும்போது அவரின் காமெடி வீடியோக்களை youtubeல் பார்த்து உற்சாகம் அடைவேன்!

அப்படிப்பட்ட ஒருவரின் பிறந்தநாள் இன்று!!!

கவுண்டரே, happy birthdey dey dey to you!!!!

Mar 15, 2013

என்னது பாலா அடிச்சாரா?

பரதேசி! (யோவ்..உங்கள திட்டலையா? படத்த பெயர சொன்னேன்)

பரதேசி படத்தின் teaser ஒன்று வெளியாகி, அதில் நடிப்பவர்களை போட்டு அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


 

இதற்கு பலவித எதிர்ப்புகள்! முக்கியமா இந்த டிவிட்டர் பக்கமா போனால்...சக நடிகர்கள்/இயக்குனர்கள் காட்டிய எதிர்ப்புகள்:

 Actor : Siddharth"A video of a director hitting his actors in the name of reality is going viral.Can we please have one of actors beating the hell out of him?"

 Director : Balaji Mohan"Paradesi 'reality' teaser sets a bad example to young future filmmakers who consider Bala sir as an idol. This isnt the way to make films."

 Actor-producer : Udhayanidhi Stalin"I decided not 2 watch the reality muvi! I shud b building temples for directors Rajesh S.R.Prabhakaran sir!"

எனக்கு சிரிப்பு தான் வந்தது இவர்களின் எதிர்ப்புகளை பார்த்து! பாலாவுக்கு தெரியாதா- இது விளம்பர யுத்தி என்று?

இதுக்கு தானே ஆசைப்பாட்டாய் குமாரா? என்பதுபோல் எதிர்வினை விளம்பர தானே இன்றைய 'விஸ்வரூப' வெற்றியை நிர்ணயிக்கின்றது!!  தப்போ சரியோ? படம் நல்லாயிருக்குதுனு நிறைய பேர் சொல்றாங்க! இயக்குனர் பாலாவின் ரசிகை நான் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான படங்களை கொடுத்து இருக்கிறார்! படம் ஓடினால் சரி! ஆனால், இவரிடம் பிடிக்காத விஷயம்- அழகானவர்களை அழுக்காய் அலங்காரம் செய்வது!

http://filmy365.com/tamil/files/2012/11/Atharva-02.jpg             http://moviegalleri.net/wp-content/gallery/paradesi-movie-stills/bala_in_paradesi_movie_stills_adharvaa_murali_6dba4ba.jpg

அதர்வா எவ்வளவு அழகு!! ச்சே போங்க பாஸ்...மனசே சரியில்லை! அடுத்து, விஜய் இவரிடம் படம் பண்ண போவதாய் செய்தி!!! தல!!!!!!!!!! இது நமக்கு தேவையா தல? நம்மகிட்ட இருக்கும் ஒரே அம்சம்- அந்த அழகான சிரிப்பு தான்! பார்த்து சுதார்ச்சிக்கோ தல!
             
                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUGlBeZ6AfqWZ0fsOwfe9sfFBFOExgjnq0vPMy81C7_qDPsvTQgEu8cV3UsTZOhRM9pNKFnTQeYEysjSzwv_kiFqFtt26GBXJ627g43WbE7sjFuhyphenhyphenwupHamYYypxHlJy-B_x6BK-Q5mBzV/s1600/smile.jpg


சரி பாலா அடிச்சதுக்கே இப்படினா? சின்ன வயசுல, நம்ம அப்பாக்கள் நம்மள தூக்கிபோட்டு மிதிச்சு அடி இடி மாதிரி விழுந்த கதையை reality teaser போட்டால், பூகம்பமே கிளம்புமா பாஸ்?? உஷ்ஷ்ஷ்ஷ....யப்பா!!!