Jul 7, 2007

நீ-நான்

பொறாமை எனக்கு
உன் கைபேசி மீது
தினமும் நான் வாங்கும் முத்தங்களை
அது வாங்கி கொள்கிறது.
முத்தங்கள் அதுக்கு
வெறு சத்தங்கள் மட்டும் எனக்கா?

என்ன தைரியம் உன்
மோதிரத்திற்கு?
24 மணி நேரமும்
உன் விரலையே
கட்டி பிடித்து கொண்டிருக்கிறது.
நான் பிடிக்கும் உன் விரலை
வேறு யாரையும் தொட அனுமதிக்கமாட்டேன்
சொல்லி வை உன் மோதிரத்திற்கு!

கழுத்தில் இருக்கும் உன்
தங்க சங்கிலிக்கு எதிரியே
நான் தான்!
நெஞ்சில் சாய்ந்துகிடக்கும்
அந்த தங்க டாலரின்
ஆயுள் காலத்தை குறைக்க
வந்துவிட்டேன்,
அந்த இடத்தை நான் நிரப்பி....

6 comments:

விழியன் said...

கூல்....

நளாயினி said...

OOOO------!

இப்போ புரியுது. எனது மகள் காதலிக்க தொடங்கிவிட்டாள் என்ற கவிதையின் பொருள். நல்ல மகள். அம்மாக்கு மெதுவா சொல்ல முயற்சியுங்கள். வாழ்த்துக்கள். கவிதை படிப்பவா அம்மா என்றால் கட்டாயம் புரிந்து கொள்வா.

FunScribbler said...

நன்றி நளாயினி! கொஞ்சம் கற்பனை கலந்து எழுதினேன்... காதலிக்கிறேன் என்றல்லாம் இல்லங்க... நான் இன்னும் ரொம்ப சின்ன புள்ளைங்கோ!

மஞ்சூர் ராசா said...

முதல் கவிதைக்கும் இந்த கவிதைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்றாலும் இவை கவிதைகளாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

எழுத்தில் முன்னேற்றம் தெரிகிறது.

http://groups.google.com/group/muththamiz

cheena (சீனா) said...

தமிழ் மாங்கனி

கவிதை அருமை - கைபேசி, மோதிரம், சங்கிலி என அசத்தி விட்டீர்கள் - நல்வாழ்த்துகள் தமிழ் மாங்கனி

FunScribbler said...

@சீனா,

கவிதையை படித்து பாராட்டியதற்கு நன்றி!