Apr 27, 2010

ஜஸ்ட் சும்மா(27/4/10)

கதை எழுதவேண்டும் என்றால் மனசு சந்தோஷமா இருக்கனும். அப்ப தான் கதையும் கொஞ்சம் சுவாரஸ்சியமா போகும். 'விண்ணை தாண்டி வந்தாளே' கதை எழுதி ரொம்ம்ம்ம்ப காலமா போய்கிட்டு இருக்கு. ஒவ்வொரு பாகம் ஒரு மாசம் கழிச்சு வெளியிடும் வகையில் இருக்கு. அதுக்கு காரணம் மூட் இல்ல (வெளிப்படையா சொல்ல போனால்)

நான் இப்போது வேலை பார்க்கும் (அதாவது training செய்யும் இடத்தில் எனக்கு பல தலவலி) அதுவும் பிடிக்காத வேலையில் எத்தனை நாள் தான் குப்பை கொட்ட போறேனோ என்ற கவலையிலேயே பாதி நாள் ஓடி போகுது அப்பரம் கதை எழுத எங்க மூட் வரும்? ஆக, வாசகர்களுக்கு சாரி சொல்லிகிறேன் ரொம்ப தாமதமா ஒவ்வொரு பகுதியை வெளியிடுவதற்கு. முடிந்தவரை சீக்கிரம் போட பாக்கிறேன்.

********************************************************************

பையா பார்த்தேன். இருக்கிற புண்ணுல பூசணிக்காயை உடைத்ததுபோல் இருந்துச்சு. படத்தில் காரின் நடிப்பு தான் சூப்பர்! கார்த்தி இனிமேல் அவங்க அப்பாகிட்ட யோகா கத்துகிட்ட யோகா மையம் ஆரம்பிக்கலாம். அப்பரம் என்னங்க இனிமேல படத்துல வாய்ப்பு எல்லாம்...ம்ஹும்....சரி விடுங்க!

மன்னிக்க முடியாத குற்றம்: அடடா மழை பாட்டு கேட்க அற்புதம். பார்க்க, ஐய்யோ என்னால சொல்ல முடியல. ஒரு அழகான பாடலை அதைவிட அழகாய் காட்சி அமைத்து இருக்கவேண்டாமா, ராஜுசுந்தரம்!
***********************************************************************

சுறா சுறா சுறா!!! வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக போகுது. அதன் முன் ஏற்பாடாக ஒரு வாரமாக சுறா புட்டு, சுறா கறி சாப்பிட்டு வருகிறேன். ஹாஹா ஹா..சும்மா சும்மா!!
**********************************************************************

3 comments:

Ramesh said...

சுறா மீன் வம்சம் அழியறதுக்கு முன்னாடி சீக்கிரம் படத்த ரிலீஸ் பண்ணுங்கப்பா.

Ramesh said...

வோட்டு போட வசதியா லிங்க்க சரியா குடுங்கக்கா.

Kumaresh said...

பையா பற்றி தங்கள் கருத்துதான் எனக்கும்

கார்த்தியை யாரும் இளம் ஹீரோ என்று சொன்னால் எனக்கு கேட்ட கோபம் வருகிறது. அவருக்கு தம்பியாக விஜய் சூர்யா நடிக்கலாம் போல இருக்கிறது.