Oct 19, 2011

ஓடி போலாமா? ஓடி போலாமா?

உங்க காதலன்கூடவோ அல்லது காதலிகூடவோ ஓடி போகும் டிப்ஸை எதிர்பார்த்து இந்த போஸ்ட்டுக்கு வந்தீங்க என்றால் ஐ எம் வெரி சாரி....

நான் சொல்ல வந்தது வேலை இடத்திலிருந்து எப்படி வீட்டிற்கு சீக்கிரமாய் ஓடி போவதைப் பற்றி! பொதுவா வேலை இல்லை என்றால் மூன்று மணிக்கே சென்றுவிடலாம்! அது வரைக்கும் என்னால் கால் ஆட்டிக் கொண்டு இருக்க முடியாது. ஆக, முடிவு எடுத்தேன் ஒரு மணிக்கே எப்படியாச்சு ஓடி போவது என்று!

பாஸ் கேட் அருகில் நின்று கொண்டிருந்தார். நானும் அவரை கடந்து சென்றேன். அவர் புன்னகையித்தார். நானும் பதில் புன்னகை வீசினேன். ஆனால், அவர் ஒன்றும் சொல்லவில்லை! எப்படி????? ஏன்????

கையில் ஒரு பையும் இல்லாமல் சென்றால் எப்படி சந்தேகம் வரும்? :)))))))) ஆமாங்க, முதல் நாளே தேவையானவற்றை ஆபிஸில் வைத்துவிட்டேன். நான் எடுத்து சென்றது- பஸ் கார்ட், செலவுக்கு பத்து வெள்ளி நோட், atm card ஒரு pant pocketல். இன்னொரு pant pocketல் ஐடி கார்ட், ஃபோன்+earpiece.

கைவீசு யம்மா கைவீசு என்று சந்தோஷமாக பாஸ்-ஸை கடந்து செல்லும்போது வந்த மகிழ்ச்சி இருக்குதே!!!! உலக கோப்பையை ஒரே வருடத்தில் ரெண்டு தடவ தூக்கின மாதிரி ஒரு சந்தோஷம்.

ஆனா, desk பக்கம் வந்து பாத்தாங்கன்னா, மாட்டிக்க மாட்டீயா?

அதுக்கும் கைவசம் technique இருக்கே. அப்படியே வேலை செய்து கொண்டிருக்கும் தோரணையில் சில documentகளை மேசையில் பரப்பி வைத்துவிட்டேன். ஒரு சைட்ல black pen, red pen வேற. குவளையில் தண்ணீர் இருக்கும். நம்ம எல்லாம் யாரு? art director தோட்டா தரணிக்கே எப்படி கோடு போடனும்னு சொல்லி கொடுத்த ஆளுங்களாச்சே!

:))))))))))))))))))))))))))))))))))))))

இதை எங்கோ படித்தேன் - ஞாயிற்றுக்கிழமை அன்று திங்கட்கிழமை பற்றி நினைத்தால் எரிச்சல் வந்தால், நீ செய்யும் வேலை உனக்கு உகந்தது அல்ல!

எவன் எழுதிய வாசகம்னு தெரியல...ஆனால் திருவாசகம்!! உண்மையிலும் உண்மை! பிடிக்காத வேலையிலிருந்து எப்படி வெளியேறுவது??? :((((

அவங்க அப்படி தான்!

லீலா கொடுத்த shopping list தனது சட்டை பையில் இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட்-டுக்கு கிளம்பினான். போகும் வழியில், வீட்டிலிருந்து ஃபோன்.

"ஹலோ ராஜ், எங்க இருக்க?"

"சூப்பர் மார்கெட் கிட்ட தான்."

"சூப்பர் மார்கெட் பின்னாடி ஒரு பூ கடை இருக்குல..."

"அந்த பஸ் டாப் பக்கத்துலயா?" என்று கேட்டான் ராஜ்.

"இல்ல ராஜ்...அது இப்ப ரெண்டாவது தெருவுல இருக்கு. அதே தெருவுல ஒரு வயசான ஆளு பூ விப்பாரு... அவர் கடையில வாங்கிடாத. ஒரு சின்ன பையன் விப்பான்...அவன் கடையில வாங்கு!!" என்று கூறினாள் லீலா.

"ஏன்? எல்லா கடையிலும் அதே பூ தானே. ஒரே விலை தானே?" பதில் சொன்னான் ராஜ்.

"ராஜ்! போன தடவ போகும்போது பழைய பூவா கொடுத்தாரு...so please don't get from that old man. 8 சின்ன மாலை, 2 பெரிய மாலை...." என்று தொடர்ந்து பூ list கொடுத்தாள் வேகமாய்.

"லீலா...slow slow. 8 சின்ன மாலை...ரெண்டு...ரெண்டு...அப்பரம் என்ன சொன்ன?" ஒரு பக்கம் ஃபோனையும் இன்னொரு கையில் listல் எழுதவும் balance பண்ண முடியாமல் திணறினான்.

"ராஜ் 5 items எழுத இவ்வளவு கஷ்டமா.... வாரம் வாரம் நான் பூ வாங்கும் போது கூட வந்து நின்னா தானே இது எல்லாம் தெரியும்." சலித்து கொண்டாள். வீட்டில் குழந்தை அழ,

"ராஜ்.... பாப்பா அழுவுது...i call you back later." என்று சொல்லி ஃபோன்னை கட் செய்தாள். லீலா என்ன கூறினாள் என்பதை மறுபடியும் ஒரு முறை நினைவு கூர்ந்து பார்த்தாலும்- 8 சின்ன மாலைக்கு அப்பரம் என்னவென்று தெரியவில்லை. குத்துமதிப்பாக பூக்கடையில், 8 சின்ன மாலை, 3 பெரிய மாலை, ரோஜாப்பூ, ஜாதி மல்லி ஆகியவற்றை வாங்கி கொண்டு சூப்பர் மார்கெட்-டுக்கு சென்றான்.

listல் எல்லா பொருட்களையும் எழுதியவள், அதன் அளவை எழுதவில்லை. மறுபடியும் ஃபோன் செய்தான், "லீலா, இந்த சீனி packet வந்து....3கிலோவா 5 கிலோவா?"

"3 கிலோ."

"ok thanks..."

பால் விற்கும் இடத்திற்கு சென்றவன், ரொம்பவே குழம்பி போனான். ஒரு மாட்டிலிருந்து வரும் பாலுக்கு இத்தன brandஆ என்று தலையில் அடித்து கொண்டான். லீலா ஒரு குறிப்பிட்ட brand பால் packetயை தான் வாங்குவாள். அது எதுவென்று புரியாமல் மறுபடியும் திண்டாடினான்.

மறுபடியும் ஒரு ஃபோன்.

மறுமுனையிலிருந்து, "என்ன ராஜ் வேணும்?"

"சாரி மா...இந்த பால் packet வந்து...."

"HL milk packet. low fat."

புன்னகையித்த ராஜ், "ok...thank you darling."

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல." ஃபோன்னை கட் செய்தாள் லீலா.

ஆயிரக்கணக்கில் அடிக்கி வைத்திருந்த பால் packetகளில் அவனது கண்கள் HL milk packet low fatயை தேடியது. முதல் வரிசையிலும் இல்லை. இரண்டாவது வரிசையிலும் இல்லை. மூன்றாவது வரிசையில்..... கண்டு பிடித்துவிட்டேன் என்ற சந்தோஷத்தில் அதனை எடுக்க சென்ற போது இன்னொரு 'இடி'

அதே பெயர் கொண்ட பால் packet ஒன்று பச்சை நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் இருந்தன. ஆஹா, இதுல எது என்று தெரியாமல் மறுபடியும் மனதில் போராட்டாம்! அக்கம் பக்கம் திரும்பி பார்த்தான், யாரேனும் உதவி செய்வார்களா என்று. ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் சென்ற ராஜ்,

"சார்...இந்த ரெண்டு பால் packet ஒரே பெயர் தான். ஆனா இதுல என்ன வித்தியாசம்?"

அவர் ராஜை ஒரு முறை மேலும் கீழும் பார்த்து, "என்ன new admissionஆ??" என்று சொல்லி வாய்விட்டு சிரித்தார். அவரின் நக்கல் ராஜுக்கு பிடிக்கவில்லை என்ற போதிலும் சாட்சிக்காரன் காலிலும் சண்டைக்காரன் காலிலும் விழ தயாராக இருந்தான்.

"ஆமா சார்...சொல்லுங்க சார்...what's the difference?"

அவர், "ஒன்னு வந்து high calcium. இன்னொரு medium level. உங்க வீட்டுல எத use பண்ணுவீங்க?"

"thanks சார்" என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றான் ராஜ். கடைசி ஆண்டு engineering படிக்கும்போது கேட்ட கேள்விகூட ராஜை இப்படி பதற செய்யவில்லை! ஆனால், அவரது கேள்வி ராஜை பயத்தால் உதற செய்தது. ஃபோன்னை பார்த்தான். ஃபோன் அவனைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது.

"லீலா....."

"என்ன ராஜ்!!??? இதுக்கு நானே போய் வாங்கிட்டு வந்து இருப்பேன். இதே வீட்டுல தானே இருக்க. வீட்டுல என்ன items வாங்கி வைச்சுருக்கேன் கூட தெரியாதா?" கோபத்தில் இன்னும் அதிகமாய் பேசினாள்.

ராஜ்க்கு ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. ஆனால் அதை அவன் கேட்கவில்லை, "இதே உலகத்துல தானே லீலா, நீயும் இருக்க, சச்சின் 10வது centuryய எந்த stadiumத்துல அடிச்சானு சொல்லு?"

எல்லாருக்கும் எல்லாமும் தெரிவதில்லை!!!

ஊருக்கு போகும் கடைசி பஸ்ஸை கஷ்டப்பட்டு பிடிப்பதுபோல் கஷ்டப்பட்டு ஓரளவுக்கு எல்லாவற்றையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றான். லீலா குழந்தையின் diapersயை மாற்றி கொண்டிருந்தாள். அவள் கொடுத்த பணத்தில் மீதியுள்ள பணத்தை அவள் கையில் வைத்தாள்.

"ரொம்ப பசியா இருந்துச்சு...வரும் வழியில ஒரு samosa வாங்கி சாப்பிட்டேன்," என்றவன் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தான். லீலா சற்று முறைப்புடன் பணத்தை வாங்கி கொண்டாள்.

சமையல் அறைக்குள் சென்றவள் மறுபடியும் ஹாலுக்கு வந்தாள், "ராஜ், இந்த shaving cream விக்குறவங்க வந்தாங்க. உனக்கு ஒன்னு வாங்குனேன்." என்றவள் அவனது கையில் அதனை கொடுத்தாள்.

"என்ன லீலா இது?"

"ஏன்? இந்த brand தானே நீ use பண்ணுவ?"

"ஆமா. ஆனா அதுல rythmsனு போட்டு இருக்கும்?"

"ok..."

"சரி பரவாயில்ல விடு. இதுவும் எப்படி தான் இருக்குனு use பண்ணி பாக்குறேன். thanks லீலா!" புன்னகையித்தான் ராஜ்.

*முற்றும்*

Oct 10, 2011

ஜஸ்ட் சும்மா (10/10/11)

http://enpoems.blogspot.com/2011/07/16711.html

போன தடவ எழுதியிருந்தேன் கதை போட்டி ஒன்றில் கலந்து கொண்டதாக!! என் கதைக்கு பரிசு( முதல் மூன்று நிலையில் வரவில்லை) இருப்பினும் 'honourable mention award' கொடுக்க போறாங்க!! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாம் புகழும் இத்தன நாட்களாக நான் எழுதுவதை ரசித்து படித்து, கருத்து சொன்ன உங்களுக்கே சேரும்!! நன்றிங்கோ!!:)))

____________________________________________________________________

புரட்டாசி விரதம் ஒருவழியாக முடிய போகுது! ஒரு மாசம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டமா இருந்துச்சு. கனவுல நண்டு வந்து என்னைய கூப்பிடுது பா!!:)))

___________________________________________________________________

7am அறிவு பாடல்களை கேட்டேன். ம்ம்ம்....ஒன்னும் நல்லா இல்லையே!!
மயக்கம் என்ன பாடல்களை கேட்டேன். ஏதோ பரவாயில்லை. 'காதல் என் காதல்' பாடல்.... ஐயோ என்ன ராகம் என்றே தெரியல!!!:((((((((((((((((

வேலாயுதம் பாடல்களை கேட்டேன் - ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. படம் trailerல பார்த்தேன் - நிறைய (காமெடி) சொல்றதுக்கு இருக்கு. இன்னொரு பதிவுல சொல்றேன்!
___________________________________________________________________

அப்பரம் நேத்து தேதி என்ன?

9.10.11 (அதிசயமா இருக்குல!!) - பேஸ்புக்கிலிருந்து சுட்டது!!!

___________________________________________________________________