Oct 19, 2012

கொஞ்சம் காதல், கொஞ்சும் காதல்- சிறுகதை

ஷாரன் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தான். களைப்பாக இருந்ததால் சோபாவில் விழுந்தான் ஷாரன். மதியம் முதல் அவன் மனதில் ஓடி கொண்டிருந்த சிந்தனை அவனுக்கு இன்னும் சோர்வை தந்தது. கண் மூடி சற்று நேரம் இருந்தான். சிறிது நேரம் கழித்து, கண்விழித்து பார்த்தான்.

ரேகா எங்குமில்லை. தனது அறை கதவை திறந்து கொண்டு சென்றான். ஏசி குளிர் காற்று அவனை வரவேற்றது. ரேகா கண்ணாடி மேசையில் முன்னாடி நின்று கொண்டிருந்து ஆபிஸ் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டே கைபேசியில் பேசி கொண்டிருந்தாள்.

"yes yes. ஆமா ஆமா...அந்த file தான்..." என்றவள், ஷாரன் வந்ததை பார்த்து 'ஹாய்' என கை சைகை செய்து புன்னகையித்தாள். tieயையும் கைகடிகாரத்தையும் கழட்டி கண்ணாடி மேசையில் வைத்தவன் ரேகாவை கண்கொட்டாமல் பார்த்தான்.

ஃபோனில் பேசிகொண்டிருந்ததால், ரேகா, 'என்ன' என்பதுபோல் விழிகளால் அவனை பார்த்து கேட்டாள். வாடிய முகத்துடன் இருந்த ஷாரன் 'ஒன்னுமில்ல' என்று தலையாட்டினான். பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து கொடுத்தாள் ஷாரனிடம்.

குளிக்கும்போது கூட அதே சிந்தனை ஷாரனுக்கு. ஏதோ ஒரு சின்ன குற்ற உணர்ச்சி அவனை வாட்டியது. குளித்து முடித்து வெளியே வந்தான்.

சட்டையை மாற்ற முற்பட்டபோது, தடுத்தாள் ரேகா.கைபேசியில் பேச்சை தொடர்ந்தவாறே, "ஆமா சார்...அத மாத்திடுங்க. change that to 2nd week of november." என்றவள் ஷாரனை பார்த்து புருவங்களை சுருக்கினாள்.

அவனை உட்கார வைத்து, அவன் மேனியில் இருந்த சின்ன சின்ன தண்ணீர் துளிகளை நன்கு துடைத்தாள். "சார்...don't forget to email the team. அப்பரம் அந்த logistics பத்தியும்..." துடைத்து முடித்துவிட்டு, புன்னகையித்தாள் ரேகா. மெத்தையில் இருந்த சட்டையை எடுத்து கொடுத்தாள் ரேகா.

"ஓகே...wait wait..i will check my laptop." என்றவள் கண்ணாடி மேசை அருகே சென்றாள்.  அவளே விழி மூடாமல் பார்த்தான் ஷாரன். கண்ணாடி மேசையில் முன்னாடி நின்று கொண்டிருந்த ரேகாவை பின்னாடியிலிருந்து அணைத்தான் ஷாரன்.

அவன் செயலை எதிர்பார்க்காத ரேகா, கண்ணாடியை பார்த்து புன்னகையித்தான். அவனும் சற்று சிரித்தான். இருந்தாலும், அவன் முகத்தில் தெரிந்தது ஏதோ ஒரு வாட்டம். அவள் இன்னும் ஆபிஸ் விஷயங்களை ஃபோனில் பேச, அவன் அப்படியே அவளது தோளில் முகம் சாய்த்தான்.பத்து நிமிடங்கள் அப்படியே கிடந்தான். ரேகாவும் பேசி முடித்து ஃபோனை 'கட்' செய்தாள்.

"oh man, finally this is done. sorry ஷாரன். இந்த project details இன்னிக்கு nightக்குள்ள அனுப்பி ஆகனும்." திரும்பி நின்று அவன் முகத்தை பார்த்து சொன்னாள்.

"it's ok ma." என்றான்.

"how was your day?" என்றவள் லேப்டாப்-பை சரி செய்து பைக்குள் போட்டாள்.

அவன், "நீ சந்தோஷமா இருக்கீயா?"

அவனது கேள்வி அவளுக்கு புரியவில்லை.  சிரித்தவள்,

"புரியல. என்ன கேட்குற?"

"do you still love me?"

அவள், "என்ன டா ஆச்சு?"

ஷாரனின் வாடிய முகத்தை பார்த்தவள், அவனது கன்னங்களில் கைவைத்து,

"you don't seem normal. office-ல problem ஆ?"

அவன், "இல்ல..."

அவள், "என் வீட்டு ஆளுங்கள வர வழியில பாத்தீயா?"

அவன், "இல்ல..."

அவள், "அப்பரம்?"

அவன், "இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு magazine படிச்சேன். are you a lovable husband??னு. அதுல test இருந்துச்சு. நான் செஞ்சு பாத்தேன். 20க்கு 4 மார்க் தான் கிடைச்சது. "

அதை கேட்டதும், அவள் வாய்விட்டு சத்தம் போட்டு சிரித்தாள்.

அவள், "இதுக்கு தான் இவ்வளவு சோகத்த புழியுறீயா?"

அவன் வருத்தத்துடன், "சிரிக்காத. உண்மைய சொல்லு. I am not a good husband, right?"

"ஹாஹாஹா!! இல்ல-னு சொன்னா என்ன பண்ணுவ? ஆமா-னு சொன்னா என்ன பண்ணுவ? எதிர் கேள்வி கேட்டாள்.

"உன் வீட்டுல சண்டை போட்டு வந்துட்ட. இந்த ரெண்டு வருஷத்துல உன்னைய சரியா பாத்துகிட்டேனானு தெரியல. இன்னிக்கு தான் வலிச்சது. பயமாக இருக்கு. நான் உன்னைய விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி இருக்கு." பேசியவாறு ஷாரன், ரேகாவின் விரல்களை பிடித்தான்.

ரேகா அவன் அருகே சென்று, தனது கைகளை அவன் கழுத்து பின்னாடி போட்டு, "என்னைய....அமெரிக்காவுல மைக்கல் ஜாக்சன் கூப்டாகோ, ஜாப்பானுல ஜாக்கி ஜான் கூப்டாகோ" என்றவள்,

அவளது மூக்கால் அவனது மூக்கை உரசி,

"என் கெர்ர்ர்ர்ரகம் உன்கிட்ட வந்து மாட்டிகிட்டேன்." என்று அவனது உதட்டில் இதழ் பதித்தாள்.

முத்தம் கொடுத்த உற்சாகம் அவனது கவலைகளை போக்கியது.  வெட்கம் படர்ந்த கண்களால், அவன், "என்ன சொல்ல வந்தேனு மறந்துட்டேன்." என புன்னகையித்தான்.

"லூசு, don't feel gulity da. and ரொம்ப நல்ல பையனா மாறாத. உனக்கு அந்த role suit ஆகாது!" என்றாள் அவனது கன்னங்களில் செல்லமாய் அடித்தவாறு.

"இப்ப போய் சாப்பிடு, செல்லம்" அவனது தாடையை பிடித்து கொஞ்சினாள்.

"அப்போ... நான் நல்ல husband தானே?" என மறுபடியும் கேட்க, ரேகா

"ஐயோ ராமா! என்னைய ஏன் இந்த மாதிரி களுசட பசங்களோட கூட்டு சேர வைக்குற!!!" என்றாள்.

மறுபடியும் ஷாரன் வாய்விட்டு சிரித்தான்.

ரேகா, "நீ இப்ப போய் சாப்பிட போறீயா? இல்லையா?"

ஷாரன், "வேண்டாம்."

அவள், "ஏன் வேண்டாம்?"

ஷாரன், "ஊட்டிவிடேன்?"

அவள், "ஐயாவுக்கு, ஓவர் romance கேட்குதா? nothing doing. இப்ப டைம் 9pm. viren-jeevika ஹிந்தி சீரியல்  பாக்குற நேரம். ஷாருக் கானே வந்து ஊட்டுவிட சொன்னாலும், நோ நோ நோ!!!"

தொடர்ந்தாள், "இப்ப நீயா கிச்சன்குள்ள போற. தட்ட எடுக்குற. சாப்பிட்டு எல்லாத்தையும் கழுவி வைக்குற." என்றவள் படுக்கையில் இருந்த தலையணைகளை சரிசெய்தாள்.

அவள், "ஆமா! அந்த 4 மார்க் வாங்கினேனு சொன்னீயே? எதுக்கு அந்த 4 மார்க் கிடைச்சது?"

அவன், "பொண்டாட்டி சொல்ற மொக்கை ஜோக்கு-களுக்கு சிரிப்பவரா நீங்கள்? 4 மார்க்ஸ்!!!"

அவள், "அட பாவி!!!" என்றவள் படுக்கையில் கிடந்த தலையணைகளை ஷாரன் மீது விளையாட்டாய் வீசினாள்.

*முற்றும்*

4 comments:

மயூரேசன் said...

அட அட அட இத்தனை ரொமான்டிக்கா ஒரு கதையா?? கலக்கிட்டேள் போங்கோ :)

ANaND said...

நான் கூட அந்த மேகசின் டெஸ்ட் பண்ணிபார்தேன்... எனக்கு 2 மார்க்தான் கெடச்சுது ...

நான் பீல் பண்ணவே இல்ல ...

ஏன் தெரியுமா ..?

நான் தான் இன்னும் husband ஆகலையே

ஹீ..ஹீ..ஹீ

gils said...

ulti story mango..oray oru scena oru kutti one page storya solra azhagay thani...athula u the ejpert..

Unknown said...

Sema story