1) locations சேர்க்கவும்- பொங்கலுக்கு வெள்ளை அடித்தாற்போல் ஒரு வீடு, மொட்டை மாடி, கேரளா, கரையோரம், bench, KFC, coffee cafe.
2) dialogues போடவும்- நான் அப்படியே காலி, நீ அவ்வளவு அழகு, I hate you, you don't deserve this, நான் இங்க ஏன் வந்தேன் தெரியுமா?, உனக்கு புரியல.
3) characters கிள்ளி போடுங்க- 37 வயதான பள்ளி மாணவர்கள், 47 வயதான காலேஜ் மாணவர்கள், அழகான ஹீரோயின், முகத்தை முழுதாய் shave பண்ணி மைதா மாவு கணக்கில் முகம் கொண்ட ஹீரோ,ஹீரோ கையில் பை, நடுத்தர குடும்பம் (7 காட்சிகளுக்கு அப்பரம் வசதியான பொன்நிறமான குடும்பமாக மாறனும்)
4) scenes கிளறவும்- பார்த்தவுடன் காதல், சண்டை, பிரிவு, மறுபடியும் காதல், சண்டை பிரிவு, காதல் என்ற பெயரில் ஹீரோயின் காலை தொடனும், மூக்கை தொடனும், பைக் அல்லது கார் ஓட்டனும், ஹீரோயினை கேரளா அல்லது வெளிநாடுகளில் தேடனும்.
இதை அனைத்தையும் செய்தால், உங்களுக்கு சுட சுட நீங்களே சூனியம் வைத்து கொள்ளலாம்!
***************************************************
உஷ்ஷ்ஷ்ஷ்!!! யப்பா! முடியல படத்த பார்த்தபிறகு, பக்க விளைவுகள் ஏராளம். நான் கௌதம் மேனனின் பெரிய ரசிகை. அதனால தான் அவர நம்பி, இந்த படத்துக்கு போனேன். ஆனா....ஐயோ சாமி!!!
VTV படத்தை அணு அணுவாய் ரசித்து எடுத்தவரா இப்படி ஒரு அணுகுண்டை கொடுத்து இருக்கிறாரு!! என்னமோ போங்க, உலகம் அழிய போகுதுனு சொன்னது உண்மையா போயிட போகுது.
காதல் கதை என்ற பெயரில் எதை காட்டினாலும், ரசிப்பாங்கனு நினைச்சு over confidenceல உலறல் தான் இந்த படம்னு நினைக்குறேன்.
சந்தானம் சில காட்சிகளில் இல்லாத குறையை பார்வையாளர்கள் தீர்த்து வைத்தது தான் செம்ம ப்ளஸ் இந்த படத்துக்கு!
***************************************************
நாங்கள் அடித்த சில கமெண்ட்கள்
1) ஜீவா அண்ணன்: எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. நல்ல சம்பளம், பெரிய வேலை, சனி ஞாயிறுகூட வேலை பாக்க தேவையில்ல.
நான்: இப்படி தான் எங்களுக்கும் சொன்னாங்க!
2) ஹீரோயின் benchல் உட்கார்ந்தபடி: நான் உன்ன பாக்க வந்தேன். ராதிகாவ பாக்க வந்தேன்.....something something blah blah...பாக்க வந்தேன்.....blah blah....பாக்க வந்தேன்.
நான்: ஐயோ நாங்ககூட தான் நல்ல படத்த தான் பாக்க வந்தோம்!
****************************************************
samantha அழகு. ஆனா, அவங்க குரல் 30 வினாடிக்கு மேல் கேட்க முடியல. ஏதோ hammam சோப் விளம்பர குரல் மாதிரி இருக்கு.
****************************************************
இசை: ஐயோ என்ன பெத்த ராசா, நீங்க மிகப் பெரிய மேதை தான். ஒத்துக்கிறேன். ஆனா, retirement வாங்கிக்கலாமே!! சில பாடல்கள் எல்லாம் தொடர்ந்தாற்போல் 47 நிமிஷத்துக்கு வரது பாருங்க...ஐயோ ரீலு அந்துபோச்சு டா சாமி!
யுவன் குரலில், பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா-னு பாட்டு வரும்போது...
யம்மா!!!!!!!!!! மண்டைக்குள்ள, ஏதோ 10,000 காட்டு யானை ஒரே நேரத்தில் இரும்பின மாதிரி ஒரு
*****************************************************
கௌதம் - கிழி கிழி கிழி!!!!!!!!!!!!!!
*****************************************************
இந்த படத்தை பார்க்காதவர்கள், கண்டிப்பா படத்தை பாருங்க! அப்படி பார்த்தால் தான், புரியும் உங்க பாஸ் எவ்வளவு தங்கமான மனுஷன்-னு. நம்ம வாழ்க்கைல வர துன்பம் எல்லாம் ஒன்னுமே இல்லேனு தோணும்.
நீதானே என் பொன்வசந்தம்- (கவுண்டமணி குரலில்) ஆமா ஆமா...நாங்க தான்! நாங்க தான்!
15 comments:
same blood boss :(
good ... nalla irunthuchu... sema comedy
periyar: thank you!:)
Ka.. U forgot to add some 'Uppu'
anand: ஹாஹா..அத இனிமேல் போட்டா என்ன போடலனா என்ன!! போங்க பாஸ் போங்க!!
கௌதமின் சொதப்பலை ரொம்ப வித்தியாசமாக சொல்லியிருக்கிறீங்க....
சூப்பர்
haa..haa
VTV also a worst film!
என்னை பொறுத்தவரை படம் நன்றாக உள்ளது
அதிகப்படியான விளம்பரம் எதிர் மறை விமர்சனங்களுக்கு வழி செய்து விட்டது.
கவுதம் மேனன் தமிழ் ரசிகர்களை மடையன்கள் என எண்ணி விட்டார்.
சமையலில் இன்னும் காரம் சேர்த்திருக்கலாம்.
இவ்வளவு தூரம் படத்துக்கு எல்லோரிடமும் இருந்து எதிர்மறை விமர்சனங்கள் வரும் காரணம் புரியவில்லை உண்மையை சொன்னால் ஒத்துக்கொள்ளா தன்மை!
கொடுமையிலும் கொடுமை எதுவோ?
NEPV படம் பார்ப்பது
அதனினும் கொடுமை?
காசு குடுத்து NEPV பார்ப்பது
அதனினும் கொடுமை?
first day first show பார்ப்பது... என்ன கொடுமை machi..
Avlo solreengale neenga padatha edukka vendithane ??????
Anonymous: yedutha pochu! Boss, ungala Maathiri nalla Manasu ulla producer venumey!!! :)))
just kidding boss! Relax!
I guess anyone who spends their hard-earned money to watch a film, has the liberty to criticize the movie! I was a huge fan of vtv but nepv is a huge letdown.
Anyway, namma veetu pullai fail aagum bothu, varum oru disappointment thaan gowtham melaiyum vanduchu.
Few comments are ok...
But it is really a worst review...
Kodumai... un blog lam padikkanum nu..
Post a Comment