ஆபிஸில் யதேர்ச்சியாய்
நீ என்னை
பார்த்து புன்னகையித்தபோது
புரிந்தது,
'யோகம் அடிக்கும்' என்ற
காலெண்டரின் வாசகம்.
நீ ஆபிஸ் வராத
நாட்களில்
நான்
சன்யாசியாய் வாழ்கிறேன்!
நீ நடத்தும் ஒவ்வொரு
'மீட்டிங்'-
உன் அழகும்
நானும் போகும்
'டேட்டிங்'
அழகு கோபபட்டால்
எப்படி இருக்கும்?
அன்று ஒரு நாள்
நீ உன் ஜீனியர்களிடம்
கோபப்பட்டபோது
கண்டு கொண்டேன்.
கண்ட நேரங்களில்
ஏற்படும் மின்சார தடை
நீயும் நானும்
ஒரே மின் தூக்கியில்
போகும்போது ஏற்பட்டதில்லை
இந்த கடவுளை
என்ன சொல்லி திட்டுவது?
அறிவில்லாத பாஸ்
தெளிவில்லாத மேனெஜர்
மூளையில்லாத டீம்
அனைத்தையும்
சகித்து கொள்கிறேன்
சகியே, நீ இருப்பதால்!
5 comments:
mango..neenga poata postgalileye..azhgaana postna ithaan..FB twitter mathiri option iruntha apdiye retweet repost pannirupen en blogla....andrea na azhaga..ila azhagunna andreava nu oru patti manrmay nadathalam...athuvum antha kannadi stl...avvvvvvvvvvvvvvv.....
Anreaa alaga erukkanga ..
gils: Saar, andrea saar:))))
ஹய்யோடா :D அக்கா கொன்னுட்டே ஹிஹிஹி
இதுதாங்க உண்மையான 'கனி'மொழி. தமிழ்வெளி -இல் அப்டேட் ஆன உடன படிச்சிட்டேன். பின்னுட்டம் தான் லேட் . லேட் -ஆ பின்னுட்டம் கொடுத்தாலும் லேட்டஸ்ட் -ஆ கொடுத்து இருக்கிறேன் .
by
mcxmeega
Post a Comment