1) விஸ்வரூபம்
45 நிமிடங்கள் கால் கடுக்க மழையில் நின்னு டிக்கெட் வாங்கினேன் குடும்பத்துக்கு.
"குடும்பத்துக்காக நீ என்ன பண்ண?" அப்படினு இந்த உலகம் நம்மள பார்த்து கேட்டுட கூடாது பாருங்க.
இணையத்தில் வந்த செய்திகள்/விமர்சனங்கள் பார்த்தே தெரிந்துவிட்டது இந்த படம் நமக்கு அவ்வளவாக பிடிக்க போவதில்லை என்று. இருந்தாலும், சென்றேன். அந்த 'afghanistan'' portion முழுதும் டமார் டுமீர் டுப் டுப் டுப்!! ஒரு கட்டத்தில் எனக்கு பயம் வந்துச்சு! படத்தில் வந்த குண்டு நம்ம மேல பாஞ்சிடுமோனு. புரியவில்லைனு சொல்ல முடியாது. என்ன நடக்குதுனு புரியுது. ஆனா ஏன் என்று தான் புரியல- அப்படி ஒரு படம் தான் 'விஸ்வரூபம்'
எது எதுக்கோ தடை விதிச்சாங்களே!!! உண்மையா தடை விதிக்கனும்னா இதுக்கு தான் விதிக்கனும்
"எங்கள் தலைவி ஆண்ட்ரியாவுக்கு சரியான ரோல் கொடுக்காததால்!"
2) கடல்
படம் பார்க்கும்வரை: " மூங்கில் தோட்டம் மூளிக வாசம்....."
படம் பார்த்த பிறகு: "எங்கயாச்சும் மூளிக தைலம் கிடைக்குமா?"
புரியம்படி யாருமே படம் எடுப்பதில்லையா! ஏன்? ஏன்? ஏன்???????? இல்ல, எனக்கு தான் அறிவு பத்தவில்லையா?
நான் அப்படி என்ன அதிகமா ஆசைப்பட்டேன்! ஒரு நல்ல படம்! அவ்வளவு தான்!
கௌதம் கார்த்திக்- ஓடுறீங்க, குதிக்குறீங்க, தாவுறீங்க! வெரி குட்!
துளசி- சிரிக்குறீங்க. தேவையில்லாம சிரிக்குறீங்க. நிறைய சிரிக்குறீங்க. நைஸ்!
அரவிந்த் சாமி- கண்ணால நடிக்குறீங்க! அடுத்த இன்னிங்ஸ் வாங்க சார்...
அர்ஜன் - சார், நீங்க பேசமா அந்த கிச்சா அப்பளம் business பண்ணலாமே?
மணிரத்னம் சார், எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. உங்க ராவணன் பிடிக்கவில்லை. உங்க 'கடல்' பிடிக்கவில்லை. எல்லாருக்கும் ஒரு கெட்ட காலம் இருக்கும். உங்களுக்கு அப்படி தான் நினைக்குறேன். ஆனா அந்த கெட்ட காலம் முடிந்து நல்லது நடக்கும். கண்டிப்பா நீங்க நல்ல படம் எடுப்பீங்க!
ஒரு தளபதி, ஒரு அஞ்சலி, ஒரு அலைபாயுதே....
இந்த 'கடல' தாண்டி அலைபாய்ந்து வாங்க சார்!! நாங்க உங்களுக்காக கரையோரமா காத்துகொண்டு இருக்கிறோம்!
3) டேவிட்
கிராமத்திலேந்து பட்டணத்துக்கு வந்து கஷ்டப்பட்டு பொழைக்க முடியாம, 'இந்த பட்டணம் நமக்கு வேண்டாம்'னு திருப்பி விவசாயம் பார்த்து கொள்ளலாம்னு திரும்பி கிராமத்துக்கே போகும் வாலிபன் போல்...
கடல், விஸ்வரூபம் பார்த்து தலவலி வந்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் விரயமா போச்சு என்பதால் 'இனி எந்த படமும்' கொஞ்ச காலத்துக்கு வேண்டாம் என்று எண்ணி டேவிட்-டை பார்க்காமல் தவிர்த்தேன்!
16 comments:
Why this delay between posts.? Not at doing good to your fans. Really great flow in writing. So natural flow.
பாஸ் .. உங்க குடும்பத்துக்காக நீங்க உழைகிரத பார்த்த நம்ம கலைஞரே கண்ணு கலங்குவார்ங்க ..ஹா ..ஹா..
ரொம்ப எதிர்பார்ப்போட போனதுனால தான் உங்களுக்கு விஸ்வரூபம் புடிக்காம போய்டுச்சி ...
இன்னும் கடல் பாக்கல, நீங்க சொல்லுறத பார்த்தா ,நான் கடல் ல விழாம தப்பிச்சிட்டேன் னு நெனைக்கிறேன்
டேவிட் நல்லாத்தான் இருக்கு பாஸ்,
நல்ல டைம்பாஸ் ... ஒரு ரெண்டு சாங் கூட நல்லா இருக்கு, தலைவலிலாம் வராது
//"குடும்பத்துக்காக நீ என்ன பண்ண?" அப்படினு இந்த உலகம் நம்மள பார்த்து கேட்டுட கூடாது பாருங்க.
//
ஹா ஹா கலக்கலுங்கோ
//எது எதுக்கோ தடை விதிச்சாங்களே!!! உண்மையா தடை விதிக்கனும்னா இதுக்கு தான் விதிக்கனும்
"எங்கள் தலைவி ஆண்ட்ரியாவுக்கு சரியான ரோல் கொடுக்காததால்!"//
உங்கள் ஆசையை பூஜாகுமார் நிறைவேற்ற இருப்பாங்களே படத்தில் ..
anonymous: viswaroopam padam mathiri thaan namma post! late-aa thaan varum!!
:)))
anand: david film good? ok i shall watch it since you are saying it:)
prillass s: pooja kumar??? noooo we want andrea! we want andrea!
Vishwaroopam padam pidikala puriyala nnu sonna, neenga than ongaloda tharathai uyathikolla vendum,neenga kollywood tharathukku ethiparthal,onnum panna mudiyathu.Konjamavadhu Intelligence vennum.Try next time.
david film blade appram unga istam nan pathu kadupu ayiten
Late a vanthalum latest illa. Super. Looking for your stories. Long time since stories appeared in this blog.
Anonymous:
//Vishwaroopam padam pidikala puriyala nnu sonna, neenga than ongaloda tharathai uyathikolla vendum,neenga kollywood tharathukku ethiparthal,onnum panna mudiyathu.Konjamavadhu Intelligence vennum.Try next time.//
உஇசக்ஃப், புஇஎந்பஃப்அந்ரிஉல்க்ழு
ந்ர்புர்யிப்ந்ர்ஃஎஜுகொபொ.
இந்த ரெண்டு வரி புரியுதா சார்? தமிழ் எழுத்துகள் தான். ஆனா புரியல! ஏன்?
விஸ்வரூபம் கிட்டதட்ட இந்த மாதிரி தான்!
இத தான் சார் நானும் கேட்குறேன். புரியுற மாதிரி சொன்னா நாங்க ஏன் சார் வருத்தப்படுறோம்! மலை உச்சில நின்னுகிட்டு யாருக்கும் கேட்காத அளவில் 'மேல வாங்க மேல வாங்க'னு சொன்னா புரியாது! கேட்கும்படி, புரியும்படி, எங்களையும் சேர்த்து அழைச்சுகிட்டு போங்க! உயர்த்தி கொள்கிறோம்!
உங்க கமல்...இல்ல இல்ல...நம்ம கமல் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால்..
"புடிக்கலன்னு சொல்லல, புடிச்சா நல்லாயிருக்கும்னு தான் சொல்லுறோம்"
bala: really? boss, cool cool!!! no tension!
anonymous: //Late a vanthalum latest illa. Super. Looking for your stories. Long time since stories appeared in this blog.//
நானும் யோசிச்சுகிட்டு தான் இருக்கேன்...ஒரு விஸ்வரூபம் 3 எப்படி? அந்த மாதிரி கதை ஏதாச்சு பண்ணலாமானு யோசிக்குறேன்:)))
david thani thani kathiaya full moviea eduthiruntha maybe nalla irunthirukalam..but en apdi eduthirukaannu suthama puriala..no link at all between the two
//"புடிக்கலன்னு சொல்லல, புடிச்சா நல்லாயிருக்கும்னு தான் சொல்லுறோம்"///
:-)
kadal review... :-)
https://soundcloud.com/balajipatturaj/92-7-big-fms-take-it-easy-1
gils: haha did u see the hindi version? that has 3 tracks!! Grrrrrrr!
maanavan: are you a fan of rj balaji? I totally adore this guy's talent!! I have listened this particular review atleast 10 times! Too good:)
//maanavan: are you a fan of rj balaji? I totally adore this guy's talent!! I have listened this particular review atleast 10 times! Too good:)//
s.....I'm a big fan of balaji... அவரோட ஆர்.ஜே ஸ்டைல், வாய்ஸ் ரொம்ப புடிக்கும் .... :-)
டைம் இருக்கப்ப அவரோட மத்த ரிவியூ & க்ராஸ் டாக்கையும் கேட்டுப்பாருங்க செம்மயா இருக்கும்..... :-)
https://soundcloud.com/balajipatturaj
மாணவன்:
//டைம் இருக்கப்ப அவரோட மத்த ரிவியூ & க்ராஸ் டாக்கையும் கேட்டுப்பாருங்க செம்மயா இருக்கும்..... :-)
https://soundcloud.com/balajipatturaj//
பாஸ்!! எல்லாத்தையும் 10 தடவக்கு மேல கேட்டு இருப்பேன் பாஸ்! அம்புட்டு பெரிய ரசிகை நான்! சோகமா இருக்கும்போது, இவரின் நகைச்சுவை தான் மருந்து!! இவரோட best அந்த flop tuckker films தான்!!:)))
@ Balasubramaniyan annamalai
@gils
டேவிட் எனக்கு ரொம்ப புடிச்சுது பாஸ் , நான் second time கூட பார்த்தேன்
ஒவ்வொர்தருக்கும் ஒரு ஒரு Taste
இப்போலாம் சினிமா ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி ஆயிடுச்சி, நாமளா பார்த்து ஒரு அர்த்தம் பண்ணிக்கவேண்டியது தான்
Post a Comment