Mar 13, 2013

நீ தானே என் appetiser!

'கூகல் கூகல் பண்ணி பாத்தேன் உலகத்திலே' என்று பாடல் தொலைக்காட்சியில் ஓடியது. அந்த பாடலை முணுமுணுத்தபடியே வருண் ஹால் மேசைக்கு வந்தான். தண்ணீர் குவளையில் தண்ணீர் முடிந்துவிட்டதால் சமையலறையில் இருக்கும் குளிர்சாதன பெட்டியை நோக்கி நடந்தான். அதிலிருந்து தண்ணீர் நிரப்பினான் குவளையில்.

நித்யா  ரொம்ப கஷ்டப்பட்டு பூரிகட்டையை உருட்டிகொண்டிருந்தாள். இரண்டு நிமிடங்கள் அவளையே பார்த்தான் வருண். கட்டிய கூந்தலில் இருந்து நெற்றியில் கலைந்து விழுந்த முடி, புதிதாய் சின்னதாய் கன்னத்தில் முளைத்த முக பரு, மின்னிய அவளது உதடுகள், உடம்போடு ஒட்டிய சட்டை- அனைத்தையும் ரசித்தான்.

புன்னகையித்து கொண்டே அவள் அருகே சென்ற வருண், "நித்யா, எனக்கு ஒரு கவிதை தோணுது, சொல்லவா?"

அவனை கண்டு கொள்ளாமல் பூரிகட்டை மேல் கவனத்தை செலுத்தியிருந்த நித்யா, "என்ன சொல்லு?" என்றபடி பூரி மாவை எடுத்தாள்.

வருண், " இது வரை பார்த்ததில்லை
                    ஒரு கட்டை
                    இன்னொரு கட்டையை
                     உருட்டுவதை!
"

சொல்லிவிட்டு புன்னகையித்தான்.

முறைத்தாள் நித்யா. "பூரி வேணுமா? அடி வேணுமா?"

மெதுவாய், அவளை இடுப்போடு அணைத்தபடி வருண், "வேற options இல்லையா மா?"

நித்யா, "விடு வருண்.... நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்." என்றபடி அவனை தள்ளிவிட்டு, நெற்றியில் விழுந்த முடியை விரல்களால் காதுமடல் பின்னால் சொருகினாள். மீண்டும் சமையலை தொடர்ந்தாள்.

வருண் அவள் பின்னாலிருந்து கட்டிபிடித்து, அவளது தோள்பட்டையில் தாடையை வைத்தவாறு, "ஏன் மா டென்ஷன்?"

"சரியா வர மாட்டேங்குது. பூரி மாவ சரியா தான் பிசைஞேன். ஆனா...ப்ச்ச்..." பெருமூச்சு விட்டாள் நித்யா.

வருண், "it's ok ma. நான் பூரி கேட்டேனா?"

நித்யா, "உனக்கு செய்றேனு யாரு சொன்னா? எனக்கு இன்னிக்கு பூரி சாப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு. அதான் செய்றேன்!" விடாமுயற்சியை கைவிடவில்லை அவள்.

"சரி. நான் help பண்றேன்" என்ற வருண் பூரிமாவை பிசைய ஆரம்பித்தான்.

ஓரக்கண்ணால் பார்த்த நித்யா, "என்ன பண்றே?"

வருண், "பூரிமாவ பிசையுறேன் டார்லிங்" என்றான்.

நித்யா, "அது என் விரலு."

வருண் சிரித்தபடி, "ஓ...சாரி மா. ரெண்டுமே ரொம்ப softaa இருந்துச்சா. அதான் குழம்பிட்டேன்."

நித்யா, "என்னைய விடு" என்று மறுபடியும் பின்னாடி தள்ளிவிட்டாள்.

தொடர்ந்தாள், "disturb பண்ணாம மரியாதையா போயிடு, எனக்கு கோபம் வரதுக்குள்ள." 

வருண், "அப்பரம் நான் என்ன செய்ய?"

நித்யா, "போய், டீவி பாரு. அதான் ஆயிரத்து எட்டு channel இருக்கே!"

வருண், "நான் பாக்கனும்னு நினைக்குற channel கிச்சன்ல இருக்கே!" என்றான் கண் சிமிட்டியவாறு.

நித்யாவுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் நித்யா, "வருண், மொக்கை ஜோக் அடிக்காம, பேசாம போயிடு!"

வருண், "ஐ...யாருகிட்ட!! மனசுக்குள்ள புடிச்சுருக்கு. ஆனா வெளியே தான் சிரிக்க மாட்டேங்கற"

நித்யா, "பிடிக்கல. போ டா" என்று தொடர்ந்து 'மாவே மாவே பூரி போடு' என்று மாவுடன் மன்றாடி கொண்டிருந்தாள். சுட்ட பூரி, கல் போல் இருந்ததால் மேலும் கோபமாக இருந்தாள் நித்யா.  அவள் இன்னொரு பூரியை சுட்டாள். ஆனால் அதுவும் சரியாக வரவில்லை. வருண் அவளை பார்ப்பதை பார்த்து, நித்யா, "என்ன?" என்று அவளது இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

புன்னகையுடன் வருண், " இன்னொரு கவிதை தோணுது?"

நித்யா, "எங்க அந்த பூரி கட்ட" என்று சொல்ல வருண் அலறி அடித்து கொண்டு ஹாலுக்கு ஓடினான்.

சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த நித்யா சோபாவில் விழுந்தாள் களைப்புடன்.
"சிக்சர்!!!!!!!!!!!" என்று கத்தினான் வருண் தொலைக்காட்சியில் ஓடிகொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்து. 

நித்யா, "வருண்...." என்றபோது, அவனது கைபேசி ஒலி எழுப்பியது.

வருண் கைபேசியில், "டேய்! சொல்லுடா. ஆமா...பாத்துகிட்டு இருக்கேன். சூப்பர் சிக்சர்! இந்த தடவ நம்ம தான் ஜெயிக்கிறோம்......" என்று பேசிகொண்டிருந்தவனை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள் நித்யா. அதை கவனித்த வருண் வேண்டுமென்றே அதிக நேரம் பேசினான்.

பேசி முடித்த வருண், தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தான். அவன்  பேசாமல் இருந்தது நித்யாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. உடனே, ரிமோட்-டை எடுத்து தொலைக்காட்சி பெட்டியை off செய்தாள்.

வருண், "நித்யா, என்ன பண்ணுற?" என்றவன் மறுபடியும் தொலைக்காட்சியை on செய்தான்.

தொடர்ந்தான் வருண், "உனக்கு வேணும்னா வேற channel பாரு. அதுக்கு ஏன் off பண்ணுற?"

நித்யா, அவனை முறைத்தவாறு, "நான் பாக்கனும்னு நினைக்குற channel என்னைய பாக்க மாட்டேங்குதே!" என்றாள். வருணுக்கு புருவங்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

"ஓ....பாத்துட்டா போச்சு" என்றவன் அவள் அருகே நகர்ந்து உட்கார்ந்தான்.

அவன் மீசையில் ஏதோ ஒட்டியிருக்க, அதை துடைத்தபடி நித்யா, "sorry pa, இன்னொரு நாளைக்கு பூரி செஞ்சு தரேன்."

வருண், "பரவாயில்ல விடு."

நித்யா, "டின்னருக்கு என்னடா பண்றது?"

வருண், "நான் ஆர்டர் பண்ணிட்டேன்..."

நித்யா, "எப்போ?"

வருண், "நீ கிச்சன்குள்ள போராடிகிட்டு இருந்தீயே...அப்பவே!"

கண்களால் சிரித்த நித்யா, அவனது கன்னம் அருகே செல்ல, வருண் தடுத்தான்.

"ஹாலோ! nothing doing. என்னோட கவிதைய பிடிக்கலனு சொன்னீயே! கண்டிப்பா பெரிய punishment இருக்கு." என்றான் வருண்.

புரியாதவளாய் நித்யா, "என்ன punishment?" என்றாள்.

அவள் காது அருகே சென்று ஏதோ அவன் சொல்ல, "ச்சீ..bad boy!" என்று அவனை தள்ளிவிட்டாள் நித்யா.

"இப்ப...நோ..."

"நோ... எனக்கு வேணும்..."

என்று பேசிகொண்டிருக்கும் வேளையில் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

"சாப்பாடு வந்துட்டு. யப்பா escape!!" என்றவளிடம், வருண்,

"நீ தான் appetiser. அதுக்கு அப்பரம் தான் சாப்பாடு."

"உலறாம போய் கதவ திற..." என்றாள் நித்யா புன்னகையித்தபடி.

கதவை திறந்தவுடன் இரண்டு சிறுவர்கள் வேகமாய் ஓடி வந்து தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்து கொண்டனர்.

சாப்பாடு கொண்டு வந்தவர், "சார் address தெரியாம வந்தேன். அந்த பசங்க தான் அழைச்சுகிட்டு வந்தாங்க..."

சின்ன பையன், "வருண் அங்கிள், எங்க தெருவுல கரண்டு போச்சு. நான் இங்க மேட்ச் பாத்துகிறேன். என்ன ஆர்டர் பண்ணீங்க? french fries வாசம் அடிக்குது....இங்க கொண்டு வாங்க...."

*முற்றும்*

4 comments:

Anonymous said...

poor varun

Anonymous said...

nice story...

ANaND said...

தமிழில் தலைப்பு வைக்காத தமிழ்மாங்கனியை கண்டித்து 2 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் ,,

அனைவரும் வருக ,, ஆதரவு தருக

ஆனந்த் said...

கதை நல்லா இருந்தது. கட்டை மேட்டர் சூப்பர். எப்பவும் போல் இயல்பான
Flow. தொடர்கதை எதிர்பார்த்து, சிறுகதையில் நிறைவு.