Jun 8, 2013

short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

முந்தைய பகுதிகள்


தயாரிப்பாளர் குறும்படங்களை பார்த்து கொண்டிருந்தார் youtubeல். அந்த நேரம், இயக்குனர் பாரதிகௌதம் அறைக்குள் நுழைந்தார்.

த: என்னய்யா பாரதி! ரொம்ப நாளாச்சு! உன்னோட படம் சூப்பர் hitனு கேள்விப்பட்டேன்.

இ: வணக்கம் சார்! ஒரு நாளுக்கு மேல ஓடினாலே அது hit படம்தான் சார்!!

த:உன் படம் ஒரு நாளுக்கு மேல ஓடிருச்சா? அப்பரம் உன்னைய கையில பிடிக்க முடியாது...

இ: ஐயோ போங்க சார்! என்னைய ரொம்ப புகழாதீங்க. நீங்க என்ன சார்! திருட்டு டிவிடி பார்த்துகிட்டு இருக்கீங்க.

த: திருட்டு டிவிடியா?? யோவ்! இதலாம் short films! youtube பக்கமெல்லாம் போரதில்லையா?

இ: திருட்டு டிவிடி ஆளுங்கவிட இந்த short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

த: தலவலியா? ஏன்டா?

இ: நாங்கெல்லாம் கஷ்டப்பட்டு 10 வருஷமா உழைச்சு. assistantடா வேலை பார்த்து அதுக்கு அப்பரம் தான் படம் பண்ணுறோம். இதங்க சும்மா ஒரு கேமிராவ வச்சுகிட்டு youtubeல release பண்ணிடுதுங்க! அதயெல்லாம் பார்த்துட்டு ஆஹா ஓஹோனு வேற பாராட்டு! அப்பரம் 10 வருஷமா உழைச்ச எங்களுக்கு என்ன மரியாதை சார்??

த: என்னய்யா? புகையுற வாசம் வருது! ஹாஹாஹா...உனக்கு ஏய்யா பொறாமை? நல்ல கதையா இருந்தா சொல்லு, நம்ம படம் பண்ணுவோம்!

இ: அதுக்கு தான் சார் வந்துருக்கேன்!

த: படம் பெயர் என்ன?

இ: குட்டி கரடி

த: அப்பிபுடுவேன் அப்பி! எதுக்கு என்னைய திட்டுற?

இ: ஐயோ சார்! படம் பெயர் 'குட்டி கரடி'

த: ஹீரோ சிம்புவா?

இ: இல்ல சார்! நம்ம சசிகுமார்.

த: சரி கதைய சொல்லு.

இ: ஒரு ஊர்ல நாலு பேரு. அவங்க நாலு பேரும் ரொம்ப நல்ல friends. ஆனா...

த: அதுல ஒருத்தன் 2nd halfல கெட்டவனா மாறுவான். சசிகுமார்கிட்ட சண்டை போடுவான். "நண்பனோட கத்தி பேசினாலும், நம்ம கத்தி பேசகூடாது!" அப்படினு ஒரு பஞ்ச் வசனம். இதானே உன் கதை?

இ: சார்!!!!!! எனக்கு முன்னால யாரு சார் என் கதை உங்ககிட்ட சொன்னது? சார், உண்மைய சொல்லுங்க! இல்ல...என் கதைய நீங்களே திருட்டிட்டீங்களா?

த: யோவ்! இந்த கதைய வேற திருடுவாங்களா? எல்லாம் பார்த்த கதை தானே!

இ: இதுல ஒரு வித்தியாசம் இருக்கு.

த: என்ன வித்தியாசம்? படத்துல லட்சுமி மேனன் இல்லையா?

இ: லட்சுமி மேனன் இல்லாம ஒரு கதையா? போங்க சார்! அதுக்கு நான் பிச்சையெடுக்க போலாம்!

த: உன்னைய வச்சு படம் பண்ணா, நான் தான் பிச்சையெடுக்க போகனும்.

இ: சார்!!! என்ன சார் நீங்க! வித்தியாசத்த கேளுங்க!

த: சொல்லு.

இ: ஊரு சுத்துற சசிகுமாருக்கு அம்மாவ நடிக்க போறது லட்சுமி மேனன்!

த: (இதயம் வெடிக்கும் சத்தம்! நெஞ்சை பிடித்து கொண்டார்)

இ: சார்!!!

த: உன்னைய என்ன பண்ணா  சரியாகும்??

இ: சார்! முழுசா கேளுங்க. சசிகுமாருக்கு ரெண்டு ரோல். அப்பா சசிகுமாருக்கு ஜோடி லட்சுமி மேனன். நல்லா இருக்கும் சார்!!

த: சரி இந்த படத்துக்கு budget?

இ: தெரியல சார். கதை 2nd halfல south africa போகுது. சோ....கிட்டதட்ட 30 கோடி ஆகும் சார். போன படம் எனக்கு ஹிட் சார்! அதனால இந்த படத்துக்கு என் சம்பளம் கொஞ்சம் அதிகமாகும்!

த: எதுக்கு கதை south africa போகுது?

இ: ஹீரோ ஒரு போலிஸா training எடுக்க போறாரு. கதைய நல்லா கேளுங்க. ஹீரோவுக்கு ஒரு கெட்ட friend இருப்பாரு. ரெண்டு பேருக்குமே சண்டை வரும். அந்த கெட்ட ஃபரண்ட் கடத்தல் கும்பல இருப்பாரு. அவர காப்பாத்தவும் நட்பை காப்பாத்தவும்,ஹீரோ ஒரு போலிஸா மாறுவாரு.

த: (மேசையில் இருக்கும் தண்ணீரை அருந்துகிறார்)

இ: படத்தோட highlight இந்த ஒரு வசனம் தான் சார்! அங்க உள்ள south africa கும்பல்கிட்ட ஹீரோ ஒரு பஞ்ச் விடுவார். வசனத்த கேளுங்க சார்....

south africa கும்பல்: why did you commme here?
hero:  I know Friendship is Friendship because my friendship is not a TITANIC SHIP!!

சார்! எழுதி வச்சுங்க சார்! இந்த வசனத்தக்கு விசில் பறக்கும் சார்!!!

த: எனக்கு மண்டை வெடிக்குற மாறி இருக்கு. அருவாள், சத்தம், ரத்தம், south africa இதலாம் இல்லாம ஒரு கதை சொல்லுய்யா!

இ: அருவா இல்லாம ஒரு கதையா? நான் ஒன்னும் அந்த fortu slim பசங்க இல்ல சார்!!

த: fortu slim பசங்களா? ஹாஹா..யோவ்! அது short filmsயா!!

இ: அருவாள் தூக்கினா தான் தமிழ் சினிமாவுல நிலைச்சு நிக்க முடியும்! நீங்களே யோசிச்சு பாருங்க....
தளபதி ரஜினி
தேவர் மகன் கமல்
திருப்பாச்சி விஜய்
ரெட் அஜித்
புதுபேட்டை தனுஷ்
சிலம்பாட்டம் சிம்பு
சாமி விக்ரம்
இவங்க எல்லாருமே அருவாள் தூக்கினதுனால தான் இத்தன காலமா இருக்காங்க!!

த: சரி விடு! ரொம்ப emotional ஆகாத! simpleலா ஒரு கதை.

இ: (யோசித்தார் இயக்குனர். ரொம்ப யோசித்தார்...) சார் எனக்கு ஒரு ஐடியா. என்னைய விட என் மனைவி தான் ரொம்ப நல்லா சமைப்பாங்க.

த: என்னது????

இ: ஐயோ சாரி சார். உணர்ச்சிவசப்பட்டுடேன். என்னைய விடு என் மனைவி தான் ரொம்ப நல்லா கதை சொல்லுவாங்க.

த: அப்படியா? சொல்லவே இல்ல. ஃபோன போடு தங்கச்சிக்கு.

இ: (ஃபோன் போட்டு தயாரிப்பாளரிடம் கொடுக்கிறார்)

த: ஹாலோ தங்கச்சி! எப்படி இருக்க?

பாரதி கௌதம் மனைவி(ம): ஹாலோ அண்ணா! நான் நல்லா இருக்கேன். நீங்க?

த: ஏதோ போயிகிட்டு இருக்கு. பாரதி, உன்கிட்ட கதை இருக்குனு சொன்னான். கதைய கொஞ்சம் ஒன் லைன் மட்டும் சொல்லேன்.

ம: படம் பெயர் 'நாலு'

த: நாலு??? நம்பர் நாலு?

ம: ஆமா அண்ணா!

த: எதுக்கு நாலு?
ம: கடைசியா நம்ம சுடுகாடுக்கு தூக்கிட்டு போக, எத்தன பேரு தேவை?

த: நாலு.

ம: வீட்டுக்கு லேட்டா வந்தா, அம்மா எத்தன பேர் கேவலமா பேசுவாங்கனு சொல்லி திட்டுவாங்க?

த: நாலு.

ம: மூன்றுக்கு அப்பரம்?

த: நாலு.


ம: இப்ப தெரியுதா அண்ணா, 'நாலு' ரொம்ப முக்கியமான நம்பர்னு.

த: (கதிகலங்கி போனார்) யம்மா தங்கச்சி....ஆ..ஆ...நான் கொஞ்ச நேரம் கழிச்சு ஃபோன் பண்ணுறேன். (ஃபோனை கீழே வைத்தார்.)

இ: என்ன சார்? என் மனைவி கதை புடிச்சு இருந்துச்சா?

த: யோவ்! உன் குடும்பமே இப்படி தானா?

இ: சார் கலைகுடும்பம் சார்!

த: கொலை குடும்பம்-னு சொல்லு!

இ: சார் விடுங்க சார்!!! எந்த producerருமே இல்லேனா நாங்களே ஒரு படத்த எடுக்கலாம்னு இருக்கோம்.

த: அப்படியா? படம் பெயரு?

இ: திருமதி இங்கிலீஷ்!

த: (மறுபடியும் இதயம் வெடித்தது!!!!)

*முற்றும்*

4 comments:

ANaND said...

விழுந்து போரண்டு சிரிச்சேன் ...

Anonymous said...

Hi,
Sirithu,sirithu kangali thanneer vanthu vittathu. Indru thaan muthal muraiyaga ungal blog vanthullaen. Ithuvarai niraya blogs visit panni niraya vaasithirukkiraen. Anaal muthal muraiyaga comment poda vendum endru thondriyathu ungalathu intha pathivai padiththa pinbu thaan. Niraya pirachanaikal, mana kulappangalil iruntha naan santhosamaga sirithu puthunarchiyaga unarkiraen.
nandri.
rams.

Thamizhmaangani said...

rams: boss!!! thanks alot for your comment! it really made my day. AAL IZZ WELL!!! ithuvum kandanthu pogum!

Anonymous said...

Hi!
Romba nalla interesting a iruku pa... sirippa control pannave mudiyala nandraga sirithen...intha madiri comedy health ku romba nallathu ...