Monday, February 3, 2014

ஜஸ்ட் சும்மா (3/2/14)

கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு ஒரு பதிவு என்ற வகையில் தான் எழுது முடிகிறது. முடிகிறது என்பதைவிட சோம்பேறித்தனம் எனலாம். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து ஏதேனும் எழுதலாம் என்று உட்கார்ந்து மூட் இல்ல. மறுநாள் வேலையை நினைத்தாலே குபீர் பயம் வருது.

*********************************************************************
எந்த புதுபடமும் இப்போதைக்கு பாக்க கூடாது, என் குறும்படம் வரும் வரை (ஆமாங்க....feb 13th release:)))))))))) என்று உறுதியோடு இருந்தால், அம்மா 'வீரம்' படம் பார்த்தே ஆக வேண்டும் என்றார்.

தாயின் அன்பு கட்டளையை மீறினால் சோறு கிடைக்காது!!

எனக்கு தன்மானத்தைவிட சோறு தான் முக்கியம்.

படத்தை பத்தி....சரி...விடுங்க தம்பி போகட்டும் அது!!!

**********************************************************************

மறுபடியும் CCL வந்துருச்சு! நானும் யோசிச்சேன். நல்ல படங்களை செய்வதைவிட்டு விட்டு இவங்க எல்லாம் ஏன் இத பண்றாங்கன்னு??

சரி, சின்ன புள்ளைங்க விளையாடிட்டு போகட்டும்னு பார்த்தேன். ஆனா, காமெடியில் கலக்குவது எப்படி என்பதை இவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது தான் தெரிந்தது!!!

நேற்று நடந்த chennai rhinos vs karnataka bulldozers ஆட்டம்.
முதல் ஓவரில், கிட்டதட்ட 25 no ball/wide கொடுத்து பச்சை தமிழன் சிவா கலக்கியது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு.

அப்பரம் பரத்- ஒரு ஓவரை கிட்டதட்ட 45 நிமிடங்களாய் கஷ்டப்பட்டு முடித்தார்.

man of the match பட்டம் ஏன் ஜித்தன் ரமேஷுக்கு கொடுக்கவில்லை??- என்ன ஒரு straight boundary தெரியுமா அது!!


அவர் bowling செய்தார்!!

ச்சே.,, நம்ம பசங்கள நம்மளே கிண்டல் பண்ண கூடாது.......... ரெண்டு மூனு flop-tucker  படங்களின் நாயகர்கள் தான் இவர்கள். இருந்தாலும் நமக்கு பரிட்சையமான முகங்கள்.

மும்பை அணியாம்!!!- என்ன எல்லாம் junior artisteகள வச்சு விளையாடுறாங்க!!!

*********************************************************************************

சிம்புவின் பிறந்த நாள் அன்று அவர் வெளியிட்ட பாடல்.

வெறித்தனமான ஆண்ட்ரீயா ரசிகர் மன்றம் சார்பாக இப்பாடலை வன்மையாக கண்டிக்கிறோம்.

*******************************************************************************

1 comment:

ANaND said...

எனக்கு தன்மானத்தைவிட சோறு தான் முக்கியம்./////////:

என் இனமய்யா நீர் ...! 😁😁😁