Jul 4, 2014

நீயும் நானும் வேலு நாய்க்கர்!

நாயகன் படத்துல ஒரு சூப்பர் சீன் வரும். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கமல்ஹாசனை தேடி வந்து சொந்த கதை சோக கதையல்லாம் சொல்வாங்க! அத கேட்டுட்டு கமல் சொல்வார், "சரி இதலாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க?"

அதுக்கு, பக்கத்துல நிக்கும் ஜனகராஜ், கமல் கையைப் பிடித்து, "நாய்க்கரே, இனி அப்படி தான்" என்பார்.


கிட்டதட்ட நம்ம அனைவரும் ஒரு வகையில் வேலு நாய்க்கர் தான்! என்னிக்கு, இந்த SMARTPHONE நம்மகிட்ட கதை கதையா பேச ஆரம்பிச்சுதோ அன்று முதல் ஒரு மாதிரி ரவுடியா தான் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்.

எதையோ தேடி, எதையோ தொலைத்த கதையாக வாழ்க்கை போகுது.

whatsapp messageகளுக்கு அடிமை
இதுல நமக்கு என்ன பெருமை?

இரும்பினால், ஒரு whatsapp group.தும்பினால் ஒரு whatsapp group,

என எதுக்கு எடுத்தாலும், செய்திகளை 24 மணி நேரமும் சொல்லி கொண்டே இருப்பதால், பைத்தியம் போல் இருக்கிறோம்.

இந்த smartphone வைத்து இருப்பது fast food உணவை தினமும் திண்பதுபோல். சுவையாக தெரிவது பின்னர், வாந்தி எடுக்க காரணமாக அமையும்.

மண்டை வலி, குண்டை வலி, தொண்டை வலி வருவது தான் மிச்சம். whatsapp இல்லமால் தொடர்ந்தாற்போல் நாலு நாளைக்கு நிம்மதியா இருக்க முடியல! என்னடா வாழ்க்கை இது!


'உனக்கு என்ன திடீர் அக்கறை?' என்று நீங்க கேட்பது எனக்கு கேட்குது.

'நானே பாதிக்கபட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்.'

வேலு நாய்க்கருக்கு கடைசில ஏற்பட்ட நிலைமை நமக்கும் ஏற்பட்டுவிடுமோ-னு ஒரு அச்சம். கையில் நாம் எடுத்தது, நம்மை அழிக்கும் சக்தியாகி விடுமோ-னு பயமா இருக்கு.

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மண்டை வலி, குண்டை வலி, தொண்டை வலி வருவது தான் மிச்சம்//
மண்டை வலி, தொண்டை வலி சரிங்க!
அதென்னங்க குண்டை வலி!

ANaND said...

அப்படினா... நான் தனி ஆள் இல்ல என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்குன்னு இனி சொல்லிகலாம்... அவ்வ்வ்

FunScribbler said...

johan: sorry thalae! spelling error! rectified it! thanks thalae!