Feb 22, 2016

தள்ளி போகாதே!


காதல் ஒரு முரண்பாடு.
2 அந்நியர்கள் காதலில் விழுவது,
ஒரு முரண்பாடு.
காதலுக்கு கண் இல்லை
உன்னை பார்த்த முதல்
மனதில் அலைபாயும்
தொல்லை.

ஒரு மந்திர புன்னகை
உன்னை பார்க்கும் போதெல்லாம்
வயிற்றில் பட்டாம்பூச்சிகள்.
இந்த விசித்திரமான உணர்வு.
நான் உன்னை பற்றி எழுத உட்கார்ந்தேன்.
 என் மனதில் ஒரு ப்ளாஷ் மின்னல்.

மற்ற  ஜோடி போன்ற, முதல் 4 ஆண்டுகள்
ஆனந்த பூங்காற்று.
பின்னர் புயல் போல் பிரிவு.
வேலை என் வாழ்க்கையில் ஆதிக்கம் செய்ய.
உன்னோடு நேரம் செலவழிக்க இயலவில்லை.
உன் நினைவுகளெல்லாம் ஒரு கானல் நீர் போல் தோன்றியது!
வடுக்கள் இருந்த போதிலும்
நீ அழகு டா.
தளும்புகள் இருந்தாலும்
நீ அழகன் டா!


நான் நம்பிக்கை இழந்து போது
நீ இருந்தாய் என் கண்ணீருக்கு கைகுட்டையாய்.

உண்மையான காதல் என்ன,
 எனக்கு காட்டினாய்.
என் இதயம் நொறுங்கிய போது,
உன் மௌனம்
என் தாலாட்டு. 
என் குமறல்களை
ரசித்தாய்
அமைதியாய் கேட்டு.

இன்னும் அந்த துரதிருஷ்டவசமான இரவு, நினைவில்.
உன் மூச்சு நின்று போது,
உனக்கு ஒரு அங்குலம்கூட நகர முடியவில்லை.
என் இதயம் துடிப்பது நின்றது.
நான் மீண்டும் உன்னை பார்க்க  மாட்டேன் நினைத்தேன்.
 நீ அந்த இரவை வென்றாய்.
மறுபடியும் வந்தாய்.


என்னை தினமும் வீட்டுக்கு
அழைத்து சென்றாய்
இன்று என்னை தனியே
விட்டு செல்கிறாய்!
சந்தனமாய் இருந்த நீ
இன்று
சாம்பலாய் போனாய்!
 என்றென்றும் என் நினைவில்.

காதலித்த கார்,
காதலித்து பார்!

**********************************************************************************

சிங்கப்பூரில் ஒரு காரை 10 வருடங்கள் தான் வைத்து இருக்க முடியும். அதற்கு அப்பரம் ஒப்படைக்க வேண்டும் கார் நிறுவனரிடம். அவங்க இயந்திரம் படத்தில் ரோபோ ரஜினி போல்
அண்ணாமலை படத்தில் வரும் மனோரமா வீடு போல்
நொறுக்கி தள்ளிவிடுவார்கள்.

ஒரு காரின் ஆயுள் காலம் 10 வருடம்.
2006ல் வாங்கிய கார், இப்போது இல்லை என்று நினைக்கும்போது......

3 comments:

Avargal Unmaigal said...

அருமை....பாராட்டுக்கள்

Nagendra Bharathi said...

அருமை

Anonymous said...

Car vangi COE kattunaa thaan madam nanga ellam nalla roadula poga mudiyum. Adikadi vangunga and mathunga. Help singapore Economy. ;)