Apr 12, 2016

கலி- திரையரங்கில் என் முதல் மலையாளம் படம் அனுபவம்!

பொதுவா, மலையாள படங்களை டிவிடியில அல்லது டிவில தான் பார்ப்பேன்.
ஆனா, கலி படம் trailer வந்தபிறகு, இப்படத்தை கண்டிப்பா first day first show பார்த்தே ஆக வேணும்னு ஒரு தெறி....  வெறி ஐ மின்!

பிரேமம் பார்த்த மயக்கம் இன்னும் தெளியாம இருக்க, மலையாள படங்கள் மீது அதிகம் காதலும் மாரியாதையும் இருப்பது ஒன்னும் பெரிய ஆச்சிரியம் இல்ல.


சிங்கையில் ஏப்ரல் 9ஆம் தேதி தான் வெளியிட்டாங்க இப்படத்தை.
திரையரங்குக்குள் நுழைந்தேன்.

இப்படி ஒரே இடத்தில் இவ்வளவு மலையாள வார்த்தைகளை கேட்பேனு எதிர்ப்பார்க்கல. திரையரங்கில் கேட்ட மலையாள வார்த்தைகள் அனைத்தும் ஏதோ புரியாத மொழியில் கேட்ட symphony மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு மொழியும் அழகு, அதிலும் இம்மொழி நயன்தாரா அழகு.

என் பக்கத்தில் உட்கார்ந்த இருந்த பொண்ணு, அநேகமா அகில உலக டுல்கர் ரசிகர் மன்ற தலைவியா தான் இருக்கனும். வெறும் திரையை பார்த்தே "டுல்கர்!!!!!!! டுல்கர்!!!!" என கத்தி, விசில் அடித்தது.

*************************************************

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"- இது தான் படத்தின் கதை. இவ்வளவு தான்!

என்னது இவ்வளவு தானா?

ஆனா, திரைக்கதையும், நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும், கதகளி ஆடியிருக்கும் படம் தான் கலி!

திரைக்கதை

இயக்குனர் சமீர் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார். முதல் பாதியில் கலகலப்பு என்றால், இரண்டாம் பாதி முழுக்க விறுவிறுப்பு. காதல் காட்சிகள் ஆகட்டும், ஹீரோ வெறித்தனமா சண்டை போடும் காட்சிகள் ஆகட்டும், ஒவ்வொன்றும் யதார்த்ததின் உச்சம்.

நடிப்பு
நமக்கு பிடிச்ச பொண்ணு,
 நமக்கு  எனக்கு பிடிச்ச பையன்,

இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால், எப்படி பிடிக்காமல் போகும்?? தென்றலாய் வந்த பிரேமம் மலர், இப்படத்தில் அடுத்த கட்டத்திற்கு போய் இருக்காங்க.
சாய் பல்லவியின், நடிப்பு தென்றலையும் தாண்டி, ஒரு புயல் என்றே சொல்லலாம்.

ஒரு காட்சியில் சாய் potato chips சாப்பிடுவாங்க. அச்சத்தம் பிடிக்காததால், கோபப்பட்டு டுல்கர் தட்டை தட்டிவிடுவார். potato chips சிதறி போகும். உடனே டுல்கர் தனது தவற்றை உணர்ந்துவிடுவார். அவர் சாய், பக்கம் பார்ப்பார். அதற்கு சாய் பல்லவி ஒரு reaction கொடுப்பாங்க பாருங்க!

செம்ம ஜி! செம்ம ஜி! 

"நான் அடிச்ச தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே" என்ற வெறித்தனத்தை படம் முழுக்க தனது நடிப்பாலும், முக பாவனையாலும், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் டுல்கர். சில நேரங்களில், நம்மையே திரையில் பார்ப்பது போல் தெரியும். யதார்த்த நடிப்பு. எத்தன விஷயத்துக்கு ஆபிஸ்ல கோபப்பட்டு இருப்போம்?

இசை

இசையமைப்பாளர் கோபி, பாடல்களின் இசையை ஏதோ ஆங்கில பாடல்களிலிருந்து திருடிவிட்டதாக குற்றச்சாட்டு இருந்தாலும், படத்துக்கு பாடல்கள் பொருத்தமாய் அமைந்து விட்டன.

இரண்டு பாடல்களிலுமே அழகு அள்ளிவீசுகிறது.

அதிலும் "வார்த்தின்களே" பாடலில் தலைவி, சிவப்பு சேலையில் ஒரு ஆட்டம் ஆடுவாங்க பாருங்க.... (3.56- 4.22)


கலி பல்லவிய பார்த்து, பசங்க எல்லாம் காலி!! 

குற்றச்சாட்டு பெரிய விஷயமாக தெரியவில்லை, ஏன் என்றால் பிண்ணனி இசையில் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார். பிண்ணனி இசையில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான வாத்தியம்- செண்ட மேளம். செண்ட மேளம் சத்தம் காட்சியை அதிர வைக்கிறது. திரையரங்கு முழுதும் ஒரே நிசப்தம் இரண்டாம் பாதியில். மேள சத்தம் மட்டும் தனியே ஒரு கதை சொல்கிறது. அவ்வளவு வலு சேர்க்கிறது பிண்ணனி இசை.

ஒளிப்பதிவு

இருள். பயம். ஒளிப்பதிவு.

இது மூன்றும் நம்மை கட்டி போடுகிறது. சில படங்களில் இந்த இருட்டை காட்டுகிறேனு கண்ணுக்கு ஒன்னுமே தெரியாம படம் போகும். நம்மளே torchlight எடுத்து காட்சிகளை தேடனும்.


ஆனால், இப்படத்தில் ஒளிப்பதிவாளர் எப்படி தான் இருளை இப்படி வித்தியாசமாய் காட்டினார்னு தெரியல!

மனசு பதறுது, கை கால் உதறது.

ஒரே ஒரு விஷயம் இரண்டாம் பாதியில் நடக்கிறது. அதை மட்டுமே வைத்து கொண்டு ஒளிப்பதிவில் மாயஜாலம் செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்! பின்னிட்டீங்க ஜி!

***********************************************

உங்க mind voice: அப்ப, இனி நீ நிறைய மலையாள படங்களை திரையரங்கு போய் பார்ப்ப?

நான்: கண்டிப்பா....

பின்னே....No comments: