Dec 20, 2017

சிம்பு கலந்து கொண்ட workshopல் நடந்தது என்ன?

கதவை திறந்தால், ஏசி குளிர் சுளீர் என்று முகத்தில் படர, சிம்பு உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த அறையில் switch எங்கே என தேடி அழுத்தியபோது, அரவிந்த்சாமி அறை ஓரத்தில் உட்கார்ந்து கையிலிருந்த fidget spinnerரோடு விளையாடி கொண்டிருந்தார்.



சிம்பு (பற்களை கடித்து கொண்டு, வாயை பாதிக்கு மேல் திறந்தும் திறக்காமலும்): சார், என்ன... சார்? இரு...ட்டு...லே இர்ர்ர்ர்கீ...ங்கா?

அரவிந்த்சாமி: வாங்க சிம்பு. என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?

சிம்பு: நானும் சீக்கிரம் வரும் ஆளு தான் சார்.

அரவிந்த்சாமி தொடர்ந்து fidget spinnerல் விளையாடி கொண்டிருக்கிறார் வேறு எதுவும் பேசாமல்.

சிம்பு (முணுமுணுத்தபடி, தாடியை சொரிந்தவாறு): இப்ப புரியுது ஏன் காஜோல் இவர வேண்டாம்னு பிரபுதேவாகூட போனாங்கனு.

அப்போது உள்ளே நுழைந்தார் மணிரத்னமும் சுஹாசினியும். சுஹாசினி வலது கையில் மருந்து மாத்திரைகளும், இடது கையில் வசனங்கள் அடங்கிய தாட்களும் இருந்தன. மணிரத்னம் சிம்பு மற்றும் அரவிந்த் கைகளை குலுக்கி வரவேற்றார்.

மணி: i am happy you came.

சிம்பு: சார், i am happy you casted me in this film.

மணி ஒரு செண்டிமீட்டர் புன்னகையை வீசினார்.

சிம்பு: மேடம், அது என்ன மருந்து?

சுஹாசினி: நீ எப்போ மேடைல "மணி சாரும் என் fanஆ இருப்போரோ'னு சொன்னீயோ அப்போவே எனக்கு பயம் வந்துச்சு. அதான் for precaution. மணிக்கு ஏற்கனவே உடம்ப சரியில்ல.

சிம்பு: சார் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்தோம் சார்.

மணி: ஒகே.

சிம்பு: நன்றி சார்.

மணி: யாருக்கு அனுப்புறீங்க.

சிம்பு: என் ரசிகர்களுகிட்ட சொல்லி, இத மீடியாவுல போட சொல்றேன் சார். அப்ப தான் நம்புவாங்க எனக்கு வேலை கிடைச்சுருக்குனு.

மணி: ரசிகரா?

சிம்பு: அது ஒரு 10,15 பேர் இருக்காங்க. என் தீவிர ரசிகர்கூட்டம். அவங்க இல்லாம நான் இல்ல....

கைவிரல்களையும் கைகளையும் ஆட்டி பேசி கொண்டிருக்கையில் ஜோதிகா உள்ளே வந்தார். சுஹாசினியை கட்டிபிடித்து ஹாய் சொல்லிவிட்டு மணியிடம் வணக்கம் கூறினார்.

சிம்பு: ஹாய் ஜோ எப்படி இருக்கீங்க?

ஜோ: ஹாய் சிம்பு. am fine. நீங்க எப்படி இருக்கீங்க?

சிம்பு: நாச்சியார் டெர்ல்லர் பாத்தேன். செம்மங்க.... எனக்கே போட்டியா வருவீங்கனு நினைக்கல.  பீப் சாங் மாதிரி இந்த படத்துலயும் ஒன்னு இருக்கனும்னு கேட்போங்க. மணி சார் கண்டிப்பா ஒத்துப்பாரு. ஏனா அவர் என் fanங்க.

சின்ன பையன் ஆகாயத்தில் பட்டத்தை பறக்கவிட்டு அனாந்து பார்த்து சந்தோஷம்படுவதுபோல் குதித்தான் சிம்பு. எதுவும் பேசாமல் ஜோ சுஹாசினியிடம் சென்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் வந்தார்.

சிம்பு: ஹாய் ஐஸ்.

ஐஸ்வரியா: என் பெயர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சிம்பு: கூட கொண்டு வரலயா?

ஐய்வரியா: மொக்க ஜோக்.

சிம்பு: உங்க பெயர் சொன்னா, எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வருது. but பர்ர்வால adjust பண்ணிக்கிறேன்.

மணி: ok ladies and gentlemen, எல்லாரும் செண்டர்ல உட்காருங்க.

சிம்பு: கீழயா?

சுஹாசினி: ஆமா.

சிம்பு: என்னங்க....நான் எவ்வளவு பெரிய ஸ்டார் தெரியுமா?

மற்றவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்துவிட்டு சிம்புவை பார்த்தனர்.

சிம்பு: ஓ...எல்லாரும் உட்காந்திட்டாங்களா. சரி பர்ர்வால நானும் உட்காரேன்.

மணியும் சுஹாசினியும் அனைவருக்கும் வசனத்தாளை கொடுத்தனர்.

சிம்பு: மணி சார். எங்க விஜய் சேதுபதியும் வாஃட் வசிலும்?

மணி: அவங்க இன்னிக்கு வரமாட்டாங்க.

சிம்பு: அவங்க வர்லனா எப்படி rehearsal பண்றது?
அவங்களுக்கு பதிலா VTV கணேஷம் மொட்டை ராஜேந்தரையும் போடுங்க சார்.

சுஹாசினி மணி காதில் மட்டும் விழும்படி: மணி, do you really want simbu to be in this film?

மணி ஒரு செண்டிமீட்டர் புன்னகையை வீசினார்.

மணி: ok this is scene 12. all characters are in the dense forest area in kashmir.....

அவர் சொல்லி முடிப்பதற்குள், அரவிந்த தரையில் சாய்ந்து புரண்டு, இல்லாத கொடி மேல உருண்டு கொண்டிருக்க, ஜோவும் ஐஸ்வர்யாவும் வாய் பிளந்து ஆச்சிரியம் அடைந்தனர்.

சுஹாசினி: அரவிந்த் எந்திரிங்க. காஷ்மீர்னாவே அது தானா?..... get up arvind. இது ரோஜா பார்ட் 2 இல்ல.

மணி: ok everyone listen. all characters are in the dense forest area in kashmir. you are the forest officers on a mission. you are there for a campfire night. and so this is the scene...சிம்பு நீங்க start பண்ணுங்க.

8 பக்கம் கொண்ட வசனத்தாளை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு முழித்தார் சிம்பு.

சிம்பு: எனக்கு என்ன பிரச்சனை-னா..... சார் ஒன்னுமே புரியல சார்.

சுஹாசினி: இது பாரதியார் கவித, சிம்பு. படிங்க.....

சிம்பு: காவென்று கத்திடுங் காக்கை......முட்டை 

ஜஸ்வர்யா: மேடம், என்னய கிண்டல் பண்றான் மேடம்.

சுஹாசினி: சிம்பு...ப்ளீஸ்.

சிம்பு: ஒகே ஒகே...  காவென்று கத்திடுங் காக்கை என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை.


தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார் ஜோ.

ஜஸ்வர்யா: ஏன் அலறீங்க?

ஜோ: வீட்டுல ராமாயணம் தொல்ல தாங்க முடியலனு தான் இந்த படத்த ஒத்துக்கிட்டேன். இங்கயும் புரியாத மொழில கவித அது இதுனா....... 

No comments: