Feb 11, 2017

சிங்கப்பூரில் தைப்பூசம் 2017.


 வருஷம் வருஷம் பிரமாண்டமாய் நடக்கும் விழா. பல ஆயிரம் தமிழ் மக்களும் சில சீனர்களும் காவேடி தூக்கி, வழிபாடு செய்யும் விழா. இதை பார்க்கவே வெளிநாட்டினர் வந்து குவியும் விழா.

சின்ன பிள்ளையா இருக்கும்போது, மாலையில் காவெடி பார்க்க போவது வழக்கம். நாற்காலி அல்லது செய்திதாளை விரித்து கிட்டதட்ட பிக்கினிக் போல தான் காவெடி பார்க்க போவோம். அந்த வழக்கம் கல்லூரி முடிந்த பிறகு, போச்சு. கடந்த 10 ஆண்டிகளுக்கு மேல் ஆச்சு. ஆனா, வருஷம் வருஷம் பால் குடம் தூக்கிட்டு போவோம். (நான் பால் கூஜா தூக்குவேன். நம்ம பக்தில கொஞ்சம் வீக் தான்!)

தைப்பூசம் அன்று, விடுமுறை கிடையாது, மலேசியா போல். ஆக, லீவு எடுக்க வேண்டும் ஆபிசில். லீவு எடுப்பது பெரும்பாடு. கிட்டதட்ட அம்மன் பட ரம்யாகிருஷணன் போல் டான்ஸ் எல்லாம் ஆடி காட்ட வேண்டியிருந்தது. எப்படியோ லீவு கொடுத்துவிட்டார்கள் கடைசியில். 'யப்பா சாமி, ரொம்ப நன்றி!' -என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

 வார நாளில் ஒரு நாள் லீவு கிடைப்பதே முருகன் ஆசி கொடுத்துவிட்டார் என்று தான் அர்த்தம். இதுவே பெரிய சாதனை தான். வியாழக்கிழமை விடியற்காலையில், பால் கூஜா தூக்கி சென்றேன். பெருமாள் கோயிலிருந்து, கிட்டதட்ட 3.6கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தேங் ரோட் முருகன் கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும். இதற்காக, ஒதுக்கப்பட்ட ரோடு உண்டு. வழி முழுதும், போலீஸ் பாதுகாப்பு, மற்ற தொண்டூரிழயர்களும் உண்டு. களைப்பு தெரியாமல் இருக்க, மோர், காபி, சாப்பாடு என அனைத்து ஏற்பாடுகளும் இருந்தன.

எப்போதும் போல கூட்டம். முருகன் கோயிலை அடைவதற்கு ஒரு 500 மீட்டர் இருக்கும் தருவாயில், வழி இரண்டாக பிரிந்தது. குடும்பம், பெரியவர்களுக்காக ஒரு தனி வழியும் மற்றவர்களுக்கு தனி வழியும். ஒவ்வொரு பகுதியிலும் கிட்டதட்ட 5 நிமிடங்கள் நிற்க வேண்டும். எப்படி பார்த்தாலும், இட்டதட்ட 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும். பக்தியில் கொண்டாடியவர்கள் ஒரு புரம் இருந்தாலு, "ஐயோ மணி ஆச்சே, நான் வேலைக்கு லீவு எடுக்கல, 6 மணிக்குள்ளே கிளம்பியாகுனுமே" என்று திண்டாடியவர்கள் ஒரு புரம்.

'நல்ல வேள!' நான் லீவு எடுத்து வைத்திருந்தேன். இல்லை என்றால் எனக்கும் 'குமரனுக்கு குன்றத்திலே கொண்டாட்டம்' தான். வேண்டுதலை நிம்மதியாக செய்திருக்க முடியாது. சமந்தா-சைத்தன்யா நல்லா இருக்கனும், அமெரிக்கா நல்ல இருக்கனும், தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் கிடைக்கனும் என பல side வேண்டுதல்கள் உட்பட முக்கியமான வேண்டுதல் ஒன்னு இருக்கு அதையும் சொல்லி, பாலை ஊற்றிவிட்டு வெளியே வந்தேன்.

வந்து நல்லா தூங்கிவிட்டேன். பால் குடம், பால் காவெடி முடிந்து, பெரிய காவெடிகளை காலை 7 மணி முதல் ஆரம்பித்தார்கள். சரி என்ன தான் நடக்குது என்று பார்க்க ஒரு காலை 10 மணி அளவில் சென்று பார்த்தேன்.

 ஆங்காங்கே, இசைக்காக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. களைப்பு தெரியாமல் இருக்கு, இசை ரொம்ப முக்கியம்.

பிறகு, மாலையிலும் இன்னொரு முறை காவேடி பார்க்க சென்றேன், கல்லூரி தோழியுடன். ஆக மொத்தமாக, மூன்று முறை நடந்து இருக்கேன். செஞ்ச பாவங்களையும், செய்ய போக பாவங்களையும் இப்படியாவது தீர்ப்போமே!