Apr 2, 2019

குறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்


குறியீடு சினிமா.



“பின்னாடி நிக்கிற ஆயம்மா வரைக்கும் நல்ல நடிக்கிறாங்க” இந்த சின்ன பையன் ஒவ்வொரு வார்த்தையும் புலங்காகிதம் அடைஞ்சு உணர்ச்சி போங்க பேசுறாரு.

அந்த 7வது காட்சில 5வது ஷாட்ல ஒரு பச்சை கலர் துணி ஏன் காத்துல ஆடுது தெரியுமா? இப்படினு ஆரம்பிச்சு குறியீடு, metaphor, வாழ்வின் ரகிசயம், அந்த பச்சை கலர்ல global warming பத்தி சொல்றாருனு சொல்லி என்னை போன்ற வெகுஜனங்ககிட்ட, தான் எவ்வளவு பெரிய அறிவு ஜீவி என காட்டி கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கு.

அது தான் சினிமா ரசிக்கும் அளவுகோல் என்றால் நான் சாதாரணமான ரசிகையாகவே இருந்துட்டு போயிடுறேன்.

குறீயிடு சினிமாவின் இன்னொரு அபத்தம் அபாயம் ஒன்னு இருக்கு. இதுக்கு முன்னாடி வந்த எந்த படமும் உருபடி இல்லை என சொல்ல வைப்பதே.

ஒரு மண்ணும் குறீயிடு இல்லாமல் ஜெயித்த “முதல் மரியாதை” படத்துல சிவாஜி ராதாவ பாத்து,

“உனக்கு வயசு இருக்கு. பொளப்ப கெடுத்துக்காத”னு சொல்லிட்டு நடந்து போகும்போது,
நான் தேம்பி தேம்பி அழுது இருக்கேன். அப்போ எனக்கு வயசு எட்டு தான். என்ன புரிஞ்சி இருக்கும் எனக்கு? இல்ல புரியாம தான் அழுதேனு தெரியல. ஆனா, “இந்த அங்கிளும் ஆண்ட்டியும் ஒன்னு சேரனும்” அப்படினு நினைச்சுது மட்டும் ஞாபகம் இருக்கு.

Plastic bagகளை தரையில் சிதறாமல் எடுத்த படம் தான் “மேற்கு தொடரச்சி மலை”. அதுல மலை ஏறும் ஒருவர் ஒரு சின்ன கல்லை எடுத்து பையில் போட்டு நடப்பார். அதுக்கு விளக்கம் கொடுக்கும்போது, “இந்த கல்லு தான் எங்க நம்பிக்கை. உயிரோடு மல உச்சிய அடையனும்னு இந்த மரத்த வேண்டிகிட்டு இந்த கல்ல இங்க போடுவோம்”

இக்காட்சிய பார்க்கும்போது என்னை அறியாமலேயே ஒரு மாதிரி போனது மனசு.

நான் பார்த்து ரசிக்கும் சினிமா என் மனசையும் அறிவையும் பக்குவப்படுத்தனும்.

“உனக்கு இது கூட தெரியலையானு” மத்தவங்கள புண்படுத்தகூடாது.
அப்படி தான் சினிமா எடுக்கனும்னா, எடுத்துக்கோ.

அப்படி தான் சினிமாவ ரசிக்கனும்னா, ரசிச்சிக்கோ.

குறியீடு சினிமா, எங்கள மஞ்ச துணில சுத்தி ரயில் வண்டில தூக்கிபோட்ட குழந்தையாகவே வாழ்ந்து கொள்கிறோம்.

No comments: