Feb 14, 2007

பிப்ரவரவி 14

மற்றவர்கள் அனுப்பிய
அன்பர் தின வாழ்த்துகளிடையே
நீ அனுப்பிய காதலர் தின வாழ்த்து
அழகாய் தெரிந்தது
எனது செல்போனில்.
--------------------------------------**-----------------------------------

அது என்ன
இன்றைக்கு மட்டும்
நீயும் நானும்
அதிகமாய் நேசிக்கப்படுகிறோம்
என்றது
ரோஜா பூக்களும்
வாழ்த்து அட்டைகளும்!!
-----------------------------------**-------------------------------------

நீ காதலிப்பவனுடன் வாழ்ந்தால்
பிப்ரவரவி 14 மட்டும்தான் காதலர் தினம்
உன்னை காதலிப்பவனுடன் வாழ்ந்தால்
என்றென்றும் காதல் தினம் தான்!
------------------------------**-----------------------------------------
காகிதத்தில் முத்துமுத்தாய்
நீ எனக்கு எழுதிய
கவிதைகளைவிட
கன்னத்தில்
முத்தமாய் இட்ட
கவிதையே இனிக்கிறது!!
-------------------------------**-----------------------------------------

4 comments:

Unknown said...

பிப்ரவரி 14 னு போட்டுட்டு நாலே நாலுதானா?

மக்கள் நெறைய எழுதியிருப்பாங்கன்னு வந்தா ஏமாத்துறாங்களே!!!

FunScribbler said...

என்னப்பா ... இதுக்கே நான் கஷ்டப்பட்டுதான் எழுதினேன்... பரவாயில்ல.. அடுத்த தடவை நிறைய எழுதுறேன்..

N Suresh said...

நீங்கள் மட்டும் இது போன்ற காதல் கவிதைகள் தொடர்ந்து எழுதினால்
இயற்கையிடம் ஆணையிடுகிறேன்
உடனே வந்திடும்
தினமும்
பிப்ரவரி 14!

"கன்னத்தின் கவிதை" - நான் ரசித்தேன்

வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்து அட்டையும் ரோஜாக்களும் பேசியது...அழகான கவிதை