Jul 25, 2007

துள்ளல்-கொடுமைகளை வாரி தந்த வள்ளல்!

துள்ளல்

சிவாஜி படம் அளவுக்கு என்னொரு படம் வருமா என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் வேளையில் 'என் படம் வந்து ஒரு கலக்கு கலக்கு போகுது' என்று துள்ளல் பட இயக்குனர் வரிந்து கட்டி கொண்டு வந்துவிட்டார். இயக்குனர் பரவின்காந்த் தான் இப்படத்தில் ஹீரோ (அட கொடுமை இங்கேருந்து ஆரம்பம் ஆச்சு...)

இவர் படம் ஓரளவுக்கு நல்ல பொழுது போக்கா அமையும். ரட்சகன், ஜோடி போன்ற படங்கள் ஓரளவுக்கு பார்க்ககூடிய படம் என்பதால் நம்பி போய் இந்த படத்தை பார்த்தேன். மனசு நொந்துபோயிட்டேன் சாமி!! முக்கி முக்கி மூணு மணி நேரம் படத்த பார்த்து ரத்த வாந்தி, மயக்கம், பேதி எல்லாம் ஒரே சமயத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது படத்தை பார்த்து முடித்தவுடன்.

எந்த ஒரு மேக்-கப் போடாமல் ஹீரோ படகிழவனாய் காட்சியளிப்பது இப்படத்தில் ஒரு முக்கிய அம்சம். இப்போது வரும் ஹீரோயின்களுக்கு நடிப்பு வரவே வராது என்பதை தெள்ளதெளிவாக காட்டுகிறது இப்படம். பாடல், இசை, என்று ஒன்றை மனதில் வைக்காமல் வாய்க்கும் கைக்கும் வந்தபடி பாடல்கள் அமைந்தது இப்படத்தின் இன்னொரு அம்சம். விவேக் காமெடி வர வர ரொம்ப தவறான பாதையில் போகிறது என்பதை அழகாய் சுட்டிகாட்டியது இப்படம். கதை, திரைக்கதை என்பதை முற்றிலும் மறந்து சும்மா கேமிராவை தூக்கி கொண்டு எதையோ படம் ஆக்கிவைத்துள்ளனர். இது தமிழ் சினிமாவிற்கு ஒரு சாபகேடு!

விவேக் அடிக்கும் இரட்டை அர்த்த வசனங்கள், ஹீரோ சொல்லும் வசனங்கள் ஸ் ஜே சூர்யாவிற்கே தலைவலியை கொடுக்கும்!
தமிழ்நாட்டிற்கு ஒரு ஸ் ஜே சூர்யா போதாது என்று இப்ப களத்தில் குதித்துவிட்டார் பிரவின்காந்த். குரல்கூட அப்படியே ஸ் ஜே சூர்யா சாயல்! என்ன கொடுமை சார் இது...

ரொம்ப நாளாச்சே ஒரு படம் பார்க்கலாம் என்று தோழி சொன்னதால், வந்த வினை இது. படம் பார்த்த பிறகு, தோழிக்கு அத்திரமும் அழுகையும் சேர்ந்தே வந்தது. அவள் எனக்கு செய்த கொடுமை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் இப்படி ஒரு படம் எடுத்த இயக்குனரை தமிழ் சினிமா மன்னிக்குமா?

ஒரே கடுகடுப்பில் இருந்த எனக்கும் என் தோழிக்கும் ஒரு தொலைபேசி வந்தது. எங்களது ஒரு நண்பன் அழைத்தான் ," ஏ மச்சி, இன்னிக்கு நான் செம்ம கடுப்புல இருக்கேன். எனக்கே என் மேலே கோபம் கோபமா வருது."
என்னடா இது நாம் தான் இப்படி உள்ளோம் என்றால் அவனுக்குமா என்று நினைத்து கொண்டு " என்ன ஆச்சு.. கூல் கூல்" என்று சொன்னேன்.

அதற்கு அவன் ," ஏ என்னத்த சொல்ல... இன்னிக்கு ஒரு படம் பார்த்தேன். இதுக்கு அப்பரம் என் வாழ்க்கையில் தமிழ் படமே பார்க்க போறது இல்லனு முடிவு பண்ணிட்டேன்."

"என்ன படம்? ஏன்?" என்றேன் நான்.

"இப்பதான் லா, அந்த மன்சூர் அலிகான் அறுவ படம் 'என்னை பார்த்தால் யோகம் வரும்' படத்த பார்த்தேன்.... இனி ஜென்மத்துக்கு தமிழ் படம் இல்ல."


ஹாஹா... அட கொடுமை கொடுமையினு கோயிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை தலைய விரிச்சு டப்பாங்குத்து ஆடுது, சாமியோ!!

(துள்ளல்- கொடுமைகளை வாரி தந்த வள்ளல்)

2 comments:

TBCD said...

யோவ் உங்கள எல்லாம்.. இதுவும் ஒரு படம் அதுக்கு ஒரு ரிவ்யு..அதுக்கு ஒரு பதிவு...டீ.வி. ல தான் விளம்பரம் போடுறான்ல...அப்புறம் ஏன்யா போறீங்க.. மொதல் வாரம் கலக்சன்க்காக, இன்னொரு படம் எடுத்துருவாங்க

FunScribbler said...

அதான் tbcd-2 தெரியாம போயிட்டோம். நமக்கு நடந்த கஷ்டம் வேற யாருக்கும் நடக்க கூடாதுனுதான் இந்த பதிவு! இது விமர்சனம் இல்லய்யா... எச்சரிக்கை யோவ்!