பொங்கலுக்கு வந்த படங்களில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்றால் பிரிவோம் சந்திப்போம் எனலாம். கதை ஒன்றும் பெரிய கருத்து சொல்லும் கதை அல்ல. சாதாரண கதை தான். கல்யாணமான பெண் தனிமையில் இருந்தால் என்ன ஏற்படும் என்பதை படமாக எடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். செட்டியார் வீடுகளில் நடப்பவற்றை கதை களமாக எடுத்தது வித்தியாசமாக இருந்தது. மனிதனுக்கு உறவுகள் முக்கியம் என்பதை அழகாக எடுத்து சொல்லிய படம். முதல் பாதி கலகலப்பு. இரண்டாம் பாதி விறுவிறுப்பு என்று படத்தை சற்று யதார்த்தமாக நகர்த்தி சென்றது படத்தின் திரைக்கதை. வசனங்களும் சரி, நடிப்பும் சரி... ரொம்பவே யதார்த்தமாக காட்சியளித்தது. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தை இக்காலத்தில் எடுத்து இருப்பது இயக்குனரையும் தயாரிப்பாளரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.இருந்தாலும்... சில கேள்விகள்
*சினேகா படித்து புள்ள.. அப்படி இருக்க, தனிமையில் ரொம்பவே வாடுவதாக காட்டியது என்னால் ஏற்க முடியவில்லை. இணையம், புத்தகம் என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கே...
*தனியாக வந்தபிறகு, தோழிகளுக்கு 'போன்' செய்து பேசி இருக்கலாம்.
*கல்யாணம் ஆனபிறகு, சேரன் தன் பெரிய குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் காட்டியது நெருடலை வரவழைத்தது.
பாடல்கள் சுமார் ரகம் தான். சில இடங்களில் 'லாஜிக்' இடித்தாலும், படத்தின் ஓட்டத்தால் அது அவ்வளவாக தெரியவில்லை. சினேகாவின் நடிப்பு படு சூப்பர்!! பல இடங்களில் பாஸ்கர் மற்றும் கஞ்சா கறுப்பு அடிக்கும் ஜோக் அருமை! ஜெய்ராம் இயல்பாக நடித்து படத்துக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்.
பிரிவோம் சந்திப்போம்- படத்தை பார்ப்போம் சிந்திப்போம்!!
5 comments:
எதிர்பார்த்து..ஏமாந்தேன்...ஆமாம்..பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்காகப் பாராட்ட வேண்டும்..
ஹாய் தமிழ்,
இன்று தான் உங்கள் வலைபதிவில் என் வலைபூவிற்கு லிங்க் கொடுத்திருப்பதை கவனித்தேன்.......நன்றி தமிழ்!!
திவ்யா.
சினேகாவிற்கு பதில் நயந்தாரா போட்டிருந்தால் படம் பாத்திருப்பேன்.
ப்ச் பாக்கலை
ஏன் சிவா.. உங்களுக்கு இப்படி ஒரு ஆசை! சேரனும் நயனுமா!??
கொடுமை தாங்க முடியாது!
//
Thamizhmaagani said...
ஏன் சிவா.. உங்களுக்கு இப்படி ஒரு ஆசை! சேரனும் நயனுமா!??
கொடுமை தாங்க முடியாது!
//
ஆத்தி அவனா ஹீரோ!!!!!
கிர்ர்ர்ர்ர்ர்ர்
ஹீரோ யாரா இருந்தாலும் நயந்தாரா இருக்கப்ப ஹீரோ கண்ணுக்கு தெரியமாட்டாங்க!!
Post a Comment