Feb 4, 2008

டும் டும் டும்
மற்றவர்கள் அனுப்பும்
குறுஞ்செய்திகள்
சாதாரண ரிங்டோனாக
ஒலிக்கும்
என் செல்போனில்,
நீ அனுப்பும்
காதல் செய்தி மட்டும்
'டும் டும் டும்'
என்று ஒலிக்கிறது!!


வியாழக்கிழமை வருதாம்
காதலர் தினம்!
ச்சே இரண்டு நாள்
கழித்து சனிக்கிழமை
வந்திருக்கலாம்!
வேண்டாம் வேண்டாம்,
அன்று ஆப்பீஸ் லீவு!
அப்பரம் அம்மாவிடம்
'ஆப்பீஸ் மீட்டிங்' என்று
பொய் சொல்லிவிட்டு
எப்படி உன்னை பார்க்க
வருவதாம்?


'ஐ லவ் யூ' என்று ஆங்கிலத்தில்
சொல்வதைவிட
'நான் உன்ன காதலிக்கிறேன்' என்று தமிழில்
சொல்லும் போது
இன்னும்
இனிக்கிறது
நம் காதல்!


உன்னை தவிர
வேறு எதை பற்றியும்
எழுத மறுக்கிறது
என்
கவிதைகள்!


என் கவிதைகள் மீது
எனக்கே பொறாமை.
நான் உன்னை
நேசிப்பதைவிட
அதிகமாக நேசிக்கின்றன
என் கவிதைகள்!


இரவு இரண்டு மணிக்கு
பாடத்தை படிக்கும்போது
சொக்கும் தூக்கம்
உன்னை பற்றி
கவிதை எழுதும்போது
ஓடி விடுகிறதே,
ஏன்?

அம்மா ஊட்டிவிடும்
சாக்லேட் குக்கீஸ்
வெளியூரிலிருந்து
அப்பா அனுப்பும்
ரோல்லேக்ஸ் கடிகாரம்
என்ஜீனியர் அக்கா வாங்கி வந்த
லேப்டொப்
டாக்டர் அண்ணா வாங்கி தந்த
ஹோண்டா ஸ்கூட்டீ
இவற்றில் கிடைக்காத சந்தோஷம்
நீ வாங்கி தந்த ஒற்றை ரூபாய்
ஸ்டிக்கர் பொட்டில்
கிடைத்தது எனக்கு!!


நீ இவ்வளவு
அழகாய் பிறந்த
ரகசியத்தை
அத்தையிடம் கேட்டு
தெரிந்து கொள்ளவேண்டும்
நம் குழந்தையும்
அழகாய் பிறக்கவேண்டாமா?


என்னை ராணி போல்
பார்த்து கொள்ளும்
ராஜாவாக இல்லாமல்
என்னை குழந்தை போல்
பார்த்து கொள்ளும்
ஒரு அம்மாவாய்
நீ வருவாயா?

21 comments:

Anonymous said...

//மற்றவர்கள் அனுப்பும்
குறுஞ்செய்திகள்
சாதாரண ரிங்டோனாக
ஒலிக்கும்
என் செல்போனில்,
நீ அனுப்பும்
காதல் செய்தி மட்டும்
'டும் டும் டும்'
என்று ஒலிக்கிறது!!
//

அடடா என்ன ஒரு feelings.

Anonymous said...

/வியாழக்கிழமை வருதாம்
காதலர் தினம்!
ச்சே இரண்டு நாள்
கழித்து சனிக்கிழமை
வந்திருக்கலாம்!
வேண்டாம் வேண்டாம்,
அன்று ஆப்பீஸ் லீவு!
அப்பரம் அம்மாவிடம்
'ஆப்பீஸ் மீட்டிங்' என்று
பொய் சொல்லிவிட்டு
எப்படி உன்னை பார்க்க
வருவதாம்?
//

அட என்ன அப்பாவி புள்ளையாக இருக்கீங்க.boss's mum passed away ன்னு அடிச்சு விட தெரியாத என்ன ;)

Anonymous said...

//இரவு இரண்டு மணிக்கு
பாடத்தை படிக்கும்போது
சொக்கும் தூக்கம்
உன்னை பற்றி
கவிதை எழுதும்போது
ஓடி விடுகிறதே,
ஏன்?
//

அம்மாக்கிட்ட உங்களை மாட்டி விடனும்

Anonymous said...

/நீ இவ்வளவு
அழகாய் பிறந்த
ரகசியத்தை
அத்தையிடம் கேட்டு
தெரிந்து கொள்ளவேண்டும்
நம் குழந்தையும்
அழகாய் பிறக்கவேண்டாமா?
//
அத்தை அடிக்கமால் விட்டால் சரி ;)

Anonymous said...

/நீ இவ்வளவு
அழகாய் பிறந்த
ரகசியத்தை
அத்தையிடம் கேட்டு
தெரிந்து கொள்ளவேண்டும்
நம் குழந்தையும்
அழகாய் பிறக்கவேண்டாமா?
//
அத்தை அடிக்கமால் விட்டால் சரி ;)

Dreamzz said...

வாவ்! கவிதைகள் சூப்பரு!

Dreamzz said...

//அட என்ன அப்பாவி புள்ளையாக இருக்கீங்க.boss's mum passed away ன்னு அடிச்சு விட தெரியாத என்ன ;)//
துர்கா, உன் கள்ளதனத்தை இங்கயும் கத்து குடுக்காத!

Thamizhmaagani said...

நன்றி dreamzz!

மங்களூர் சிவா said...

//
"டும் டும் டும்"
//

பேர் அமர்க்களமா இருக்கே இது என்ன எங்களுக்கு நீ குடுக்குற க்ளூவா!!

வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

//
நீ அனுப்பும்
காதல் செய்தி மட்டும்
'டும் டும் டும்'
என்று ஒலிக்கிறது!!
//
'தட தட'னு வராத வரைக்கும் நல்லது

மங்களூர் சிவா said...

/வியாழக்கிழமை வருதாம்
காதலர் தினம்!
ச்சே இரண்டு நாள்
கழித்து சனிக்கிழமை
வந்திருக்கலாம்!
வேண்டாம் வேண்டாம்,
அன்று ஆப்பீஸ் லீவு!
அப்பரம் அம்மாவிடம்
'ஆப்பீஸ் மீட்டிங்' என்று
பொய் சொல்லிவிட்டு
எப்படி உன்னை பார்க்க
வருவதாம்?
//

இப்பிடியும் ஒண்ணு ரெண்டு நல்ல புள்ளைங்க இருக்கறதாலதான் சிங்கப்பூர்ல இன்னும் மழை பெய்யுதாம்!!

சிங்கை டெலிவிசன்ல சொன்னாங்க!!

மங்களூர் சிவா said...

//
அம்மா ஊட்டிவிடும்
சாக்லேட் குக்கீஸ்
வெளியூரிலிருந்து
அப்பா அனுப்பும்
ரோல்லேக்ஸ் கடிகாரம்
என்ஜீனியர் அக்கா வாங்கி வந்த
லேப்டொப்
டாக்டர் அண்ணா வாங்கி தந்த
ஹோண்டா ஸ்கூட்டீ
இவற்றில் கிடைக்காத சந்தோஷம்
நீ வாங்கி தந்த ஒற்றை ரூபாய்
ஸ்டிக்கர் பொட்டில்
கிடைத்தது எனக்கு!!
//

நாதாரிப்பய ஒத்த ரூவாய்க்கு ஸ்டிக்கர் பொட்டுதான் வாங்கிகுடுத்தானா!!

(ஜோக்கு சிரிக்கணும் அழப்பிடாது)

Thamizhmaagani said...

சிவா..

//பேர் அமர்க்களமா இருக்கே இது என்ன எங்களுக்கு நீ குடுக்குற க்ளூவா!!//

என்னது?? நோ நோ... அதுக்கு இன்னும் ரொம்ப வருஷம் இருக்கு!

Thamizhmaagani said...

//ஜோக்கு சிரிக்கணும் அழப்பிடாது)//

சரி, சிரிச்சுட்டோம்!

மங்களூர் சிவா said...

//
என்னை ராணி போல்
பார்த்து கொள்ளும்
ராஜாவாக இல்லாமல்
என்னை குழந்தை போல்
பார்த்து கொள்ளும்
ஒரு அம்மாவாய்
நீ வருவாயா?
//

அது என்ன 'அம்மா'
அப்பா என்ன பாவம் செஞ்சார்??????

* * * * * *
என்னை ராணி போல்
பார்த்து கொள்ளும்
ராஜாவாக இல்லாமல்
தன் உயிரை போல்
பார்த்து கொள்ளும்
ஒரு அப்பாவாய்
நீ வருவாயா?
* * * * * *

அப்பிடின்னு எழுதப்பிடாதா????

மங்களூர் சிவா said...

//
Thamizhmaagani said...
சிவா..

//பேர் அமர்க்களமா இருக்கே இது என்ன எங்களுக்கு நீ குடுக்குற க்ளூவா!!//

என்னது?? நோ நோ... அதுக்கு இன்னும் ரொம்ப வருஷம் இருக்கு!
//

ஹை ஹை ஹை

எங்க ஊர்ல எல்லாம் ரெண்டு செமஸ்டர்ல காடின்யூவா அரியர் வெச்சா கல்யாணம் கட்டி வெச்சிருவோம் !!

தில்லாலங்கடி பொண்ணுங்க அதுக்காகவே அரியர் வைப்பாளுங்க

ஆம்பளை பசங்கதான் பாவம் :(

அய்யனார் said...

கொடும...

இதெல்லாம் முடியல தத்துவத்தில சேர்த்திடலாமா??

Thamizhmaagani said...

//எங்க ஊர்ல எல்லாம் ரெண்டு செமஸ்டர்ல காடின்யூவா அரியர் வெச்சா கல்யாணம் கட்டி வெச்சிருவோம் !!//

haaha...அப்படியா சிவா.. இது நல்ல method மாதிரி இருக்கே..

நவீன் ப்ரகாஷ் said...

//என்னை ராணி போல்
பார்த்து கொள்ளும்
ராஜாவாக இல்லாமல்
என்னை குழந்தை போல்
பார்த்து கொள்ளும்
ஒரு அம்மாவாய்
நீ வருவாயா?//

மிக ரசித்தேன் தமிழ் !:)))

சேதுக்கரசி said...

//'டும் டும் டும்'
என்று ஒலிக்கிறது!!//

வீட்ல போட்டுக்குடுத்துடவா??

சேதுக்கரசி said...

//'ஐ லவ் யூ' என்று ஆங்கிலத்தில்
சொல்வதைவிட
'நான் உன்ன காதலிக்கிறேன்' என்று தமிழில்
சொல்லும் போது
இன்னும்
இனிக்கிறது
நம் காதல்!//

இந்தத் தமிழார்வத்துக்கு ஒரு ஓஓஓ!!!