Sep 23, 2008

ரொம்ப நாளைக்கு அப்பரம்...



கிட்டதட்ட தூசிதட்டி போச்சு என் ப்ளாக். ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து... புரட்டாசி விரதம் ஆரம்பிச்சு ஒரு வாரம் ஆக போது. சைவமா சாப்பிட்டு சாப்பிட்டு 'போர்' அடிக்குது. என் பிறந்த நாள் எப்போதுமே புரட்டாசி மாசத்துல தான் வரும். அதனால நான் பொறந்து இத்தன வருஷத்துல பொறந்த நாள் அன்னிக்கு எனக்கு பிடிச்ச கோழி பிரியாணிய சாப்பிட்டதே இல்ல. என்ன கொடுமை சார் இது!

இந்த வருடம்(22nd birthday) அக்கா surprise birthday party organise பண்ணினாள் எனக்கு. புரட்டாசி மாதம் ஆரம்பிக்கும் 3 நாள் முன்னாடி, 14ஆம் செப்டம்பர் அன்று ஞாயிற்றுக்கிழமை, எல்லா கூட்டாளிகளையும் வரவழைத்தாள்.
நான் badminton விளையாட போயிட்டேன் தங்கச்சிகூட. எல்லாரும் ஒரு master planவோட தான் இருந்திருக்காங்க.

என் தங்கச்சிகூட நான் விளையாட சென்றபோது, வீட்டை அலங்காரம் செய்து, கேக் வாங்கி வைத்து....எல்லா ஏற்பாடும் செஞ்சுவச்சுட்டாங்க.
நான் விளையாடி முடிச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்ச போது, தோழிகள் மூன்னு பேரு டிவி
பாத்துகிட்டு இருந்தாங்க. சிலர் ரூம்ல அரட்டை அடித்து கொண்டு இருந்தாங்க.

யோவ் என் வீட்டுல என்னய்யா செய்யுறீங்க! எனக்கு தலையும் புரியல்ல.. வாலும் புரியல்ல...மயக்கமே வந்துடுச்சு! சுயநினைவுக்கு வரவே
கொஞ்சம் காலம் ஆச்சு. இதலாம் உண்மை தானே, இல்ல கனவான்னு நினைச்சு நினைச்சு, தலையே சுத்தி போச்சு. 20 பேர்கிட்ட ஒன்னா வீட்டுல பாத்தா எப்படி இருக்கும் எனக்கு!

அப்பரம் புதுசா சுடிதார் வாங்கி வச்சு இருந்தாங்க. அத போட்டு கொண்டு கேக் வெட்டினேன். அக்காவும் எங்க கிரிக்கெட் தோழி விக்கியும் ஸ்பெஷ் டான்ஸ் ஒன்னு ஆடினாங்க, நாக்க முக்க பாட்டுக்கு. highlight of the day அது தான். செம்மயா enjoy பண்ணோம்.

casurina curry cateringலிருந்து சாப்பாடு வந்துடுச்சு. அத ஒரு வெட்டு வெட்டினோம். இரவ்ய் 9 முதல் 10 வரை 'dance floor'. வீடு ஒரு மணி நேரத்துக்கு குட்டி club மாதிரி மாறிடுச்சு. அன்னிக்கு ஆடாத 4 பேரு- அப்பா, அம்மா, எங்க வீட்டு பணிப்பெண், எங்க கிரிக்கெட் assistant coach.

மத்த எல்லாரும், டான்ஸ் தெரிஞ்சவன், தெரியாதவன் ஆடினாங்களோ இல்லையோ, முடிஞ்ச வரைக்கும் on the spot jogging பண்ணோம்.

பார்ட்டி முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு கிளம்பியபோது இரவு மணி 1030. அப்பவும் 2 தோழிகள் உட்கார்ந்து இருந்தாங்க, என்ன ஆச்சுன்னு கேட்ட போது

"இன்னும் கொஞ்சம் நேரம் இருக்குறோம். 2nd session dance floor பண்ணலாம்"னு சொன்னுச்சுங்கோ!

அடங்காத non-stop hits/குத்து ராணிகள்!

11 comments:

விஜய் ஆனந்த் said...
This comment has been removed by the author.
Karthik said...

Wow...Happy Birth Day!

//ரொம்ப நாளைக்கு அப்பரம்

:)

MyFriend said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி. (கொஞ்சம் லேட்டா..)

FunScribbler said...

@கார்த்திக் மற்றும் மை ஃபிரண்ட்

வாழ்த்துகளுக்கு நன்றி!:)

பிரியமுடன்... said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா எதையாவது சொல்லவேண்டுமே!

உன் வாழ்க்கையில்
இனி வரும்
அத்தனை வருடங்களும்
ஆனந்தமாய் அமைய
ஆண்டவன் அருளட்டும்!
ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டமாய் உன் வாழ்க்கை
அமையட்டும்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியமுடன் பிரேம்!

FunScribbler said...

@பிரேம்,

வாழ்த்துகளுக்கு நன்றி!:)

Shwetha Robert said...

Belated[very belated:(] Birthday wishes Gayathriiiiiii:)))

Shwetha Robert said...

Birthday cake looks so nice:-)
and the gifts too!!!

FunScribbler said...

thanks for the wishes shwethz!

Sanjai Gandhi said...

சாரி தங்கச்சி.. உன் பிறந்தநாள்க்கு நான் வாழ்த்து சொல்லவே இல்லை..

இப்போ சொல்லிடறேன்.. கோச்சிக்காத..

“ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ”

உன் கனவுகள் லட்சியங்கள் அனைத்தும் ஈடேற வாழ்த்துகிறேன்.. :)

FunScribbler said...

@sanjai

பரவாயில்ல அண்ணா!
வாழ்த்துகளுக்கு நன்றி:)