தனுஜா தனது லெப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். காலை மணி 10 ஆனது. "என்ன ஆச்சு...இன்னும் அவன் ஃபோன் பண்ணல...." தனக்குள் முணுமுணுத்து கொண்டாள். microsoft excelலில் டைப் செய்தவற்றை save செய்துவிட்டு ஃபோன் செய்தாள் விஷ்ணுவுக்கு.
அப்போது தான் விஷ்ணு விமானத்தைவிட்டு இறங்கி பெட்டிகளை எடுக்க சென்றான். அவனது கைபேசி அலறியது.
"ஹாய் விஷ்ணு? எங்க இருக்க?"
"ஹாய் தனஜா... என் வருகைக்காக வழி மீது விழி வைத்து காத்துகொண்டிருக்கிறாயா?" என்றான் விஷ்ணு.
தனுஜா சிரித்து கொண்டே, "என்ன ஆச்சு உனக்கு. flightல local சரக்கு ஏதாச்சு குடிச்சியாக்கும்?"
"அடி பாவி!!"
"ஏன் ஃப்ளைட் லேட்?" என்று வினாவினாள் தனுஜா.
"ஒன்னுமில்ல டா, ஏதோ engine problem it seems. bombayலே 2 மணி நேரம் லேட்டா ஆகிட்டான். சரி நான் கொஞ்சம் நேரத்துல வந்துடுவேன்... alrite."
விஷ்ணுவிற்கு வேலை பம்பாயில். ஆக, இரண்டு அல்லது மூன்று மாதத்தில் ஒரு முறை தான் சென்னைக்கு வர முடியும். அப்போதுகூட ஒருசில நாட்களே விடுமுறை கிடைக்கும். ஒரு நாள் லீவு கிடைத்தாலும் பறந்துவந்துவிடுவான் தன் ஆசை மனைவி தனுஜாவை பார்க்க.
பெட்டிகளை மேசையில் வைத்துவிட்டு, சோபாவில் விழுந்தான் அசதியால்.
"how's everything there? how is work going?"அவன் பக்கத்தில் அமர்ந்தபடியே கேட்டாள் தனுஜா.
விஷ்ணு, "ம்ம்...ஏதோ போகுது? அதே வேலை...அதே ஆபிஸ்...அதே traffic jam.." சலித்து கொண்டான். பெட்டியில் இருக்கும் துணிகளை எடுத்து வெளியே வைத்தாள் தனுஜா.
"ஹாஹா....ஏன் இப்படி சலிச்சுக்குற? அங்க தான் நிறைய ஷில்பா ஷெட்டி, ராணி முகர்ஜி, பிரியங்கா சோப்ரான்னு பொண்ணுங்க இருப்பாங்களே...உனக்கு பொழுது நல்லா போகுமே?" தனுஜா விளையாட்டாய் கூறினாள்.
அவனும் சிரித்துகொண்டே, "என்ன தான் சாப்பாத்தி, நாண் இருந்தாலும், என் வீட்டு இட்லிக்கு ஈடாகுமா?" தனுஜாவின் இடுப்பை கிள்ளினான். முறைத்தாள்.
அவனது கையை தள்ளிவிட்டாள் தனுஜா. துவைப்பதற்காக துணிகளை அள்ளிகொண்டு செல்ல முற்பட்டபோது, விஷ்ணு அவளது கைகளை பற்றினான். துணிகள் தரையில் விழ, தனுஜா அவன் மேல் விழுந்தாள் சோபாவில்.
"விஷ்ணு, என்னது...விடு... இன்னிக்கு நிறைய வேலை இருக்குடா எனக்கு." என்றாள் தனுஜா அவனது பிடியில் இருந்து தப்பிக்க முற்பட்டு கொண்டே.
கண்களில் குறும்பு பார்வையுடன் அவன், " all programs cancel!"
பிடிக்கவில்லை என்று அவனது கைகளை விலக்கினாலும், தனுஜாவிற்கு அவன் செய்தது பிடித்து இருந்தது மனத்திற்குள்.
அவள், "ம்ம்ம்...ஏதோ பழமொழி சொல்வாங்களே...காஞ்ச மாடு கம்பைக் கண்டால் பாயுமாம்....அந்த மாதிரில இருக்கு..."
அவன்," காள மாட்டுக்கு பசிக்குது, பசு மாட்டுக்கு பசிக்கலையா?" மயக்கவைக்கும் குரலில்.
"ச்சீ..you shameless flirt."சிரித்துகொண்டே கீழே விழுந்த துணிகளை அள்ளி கொண்டு வாஷிங் மிஷினில் போட்டாள். பின்னாடியே தொடர்ந்து சென்றான் விஷ்ணு. தண்ணீர் குழாயை அழுத்தினாள்; detergent powderயை போட்டாள். பின்னாடியிலிருந்து அவளை இறுக்க கட்டிபிடித்து, "i really miss you da!" விஷ்ணு அவளது காதுமடலை கடித்தான்.
"நீ என்னைய மிஸ் பண்ணவே இல்லையா?" தொடர்ந்தான் விஷ்ணு.
"ஏன் இல்ல? அன்னிக்கு ஒரு நாள்....." என்று முடிப்பதற்குள் விஷ்ணு குஷியாகி,
"அப்பரம் என்ன ஆச்சு?"
தனுஜா, " அன்னிக்கு ஒரு நாள் toilet tubelight கெட்டு போச்சு. மாட்ட முடியல எனக்கு. அப்ப தான் உன்னைய மிஸ் பண்ணேன்...நீ இருந்திருந்தா சரியா போட்டு இருந்திருப்பே இல்ல..." வேண்டும் என்றே கிண்டல் அடித்தாள்.
"அடி பாவி.... இவ்வளவு தானா. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு புருஷன் மேல் அக்கறை இல்ல! what a pity? what a pity?"செல்ல கோபத்துடன் நெற்றியில் அடித்துகொண்டான்.
"என்னப்பா பண்றது? we are all busy career woman. ஆபிஸ்ல ஏகப்பட்ட வேலை. வீட்டுக்கு வந்தா...வீட்ட பாத்துக்கனும். இருக்குறது 24 மணி நேரம் தான். இதுக்கு நடுவுல டீவி பாக்கனும், ஃபிரண்ட்ஸ் கூட வெளியே போகனும். spa, manicure, pedicure, waxing, threading....exercise, yoga... இவ்வளவு இருக்கு. இதுல எங்க டைம் இருக்கு புருஷன பத்தி யோசிக்க?" நக்கல் அடித்தாள் தனுஜா. குளிர்சாதன பெட்டியை திறந்து காய்கறிகளை எடுத்தாள்.
அமைதியான குரலில், "உண்மையாவே ஒரு ஃவீலிங்ஸும் இல்லையா?"
அவள் மறுபடியும், "என்னா ஃவீலிங்ஸ்??" வடிவேலு பாணியில் சொல்ல, விஷ்ணு விழுந்து விழுந்து சிரித்தான்.
சமையலறையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து மேசையில் இருந்த கேரட்டை கடித்தபடியே, "ம்ம்ம்....ஒரு சிங்கம் இங்க புலம்பிகிட்டு இருக்கு. நீ கண்டுக்கவே மாட்டேங்குற?"
சுற்றும்முற்றும் பார்த்து, "சிங்கமா? எங்க? எங்க?" தேடினாள் தனுஜா.
"நான் தான் டி அது!"
"என் அம்மா என்னைய ஏமாத்திட்டாங்களே! என்னைய ஒரு மனுஷனுக்கு கட்டிவைக்க சொன்னா...மிருகத்துக்கு இல்ல கட்டிவச்சுட்டாங்க!" சிரித்தாள் தனுஜா.
"ஓவர் குசும்பா போச்சு உனக்கு." விஷ்ணு, தனுஜாவை இழுத்து தன் மடியில் உட்கார வைத்துகொண்டான்.
"i really miss you and your jokes da." விஷ்ணு தனுஜாவின் கண்களை பார்த்து கூறினான்.
புன்னகையித்தபடி தனுஜா, "அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ங்கற?"
"இன்னிக்கு 'சம்திங் சம்திங்' கிடையாதா?" கிறுங்கடிக்க வைக்கும் குரலில் விஷ்ணு.
"ஓய்....nothing doing!" வெடுக்கென்று எழுந்தாள்.
"கொஞ்சம் விட்டா போதுமே... நான் கடவுள் ஆர்யா மாதிரி தலகீழ நின்னாலும் முடியாது!!! நைட்டுக்குள்ள headofficeக்கு ரீப்போர்ட் அனுப்பனும். and somemore ..today...... curtain மாத்தனும். சோபா துடைக்கனும். rooms vaacum பண்ணனும். photo frames arrange பண்ணனும்....." என்று அன்று செய்துமுடிக்க வேண்டியவற்றை கூறினாள் தனுஜா.
"alrite alrite....ஒன்னு செய்வோம். இன்னிக்கு we'll reverse our roles. இன்னிக்கு முழுக்க நான் தனுஜா மாதிரி இருக்கேன். எல்லாத்தையும் நான் செய்றேன். நீ விஷ்ணு மாதிரி இரு. விஷ்ணு என்னென்ன செய்வானோ அத செய். யாரு அவங்க ரோல கரெக்ட்டா செய்றாங்களோ, அவங்க சொல்றபடி தோத்தவங்க செய்யனும். alrite? sounds fun man......" விஷ்ணுவின் கண்கள் விரிந்தன.
"நீ என்ன செய்வ வீட்டுல இருந்தா? நாள் முழுக்க டீவி பார்ப்ப? இது ஒரு பெரிய வேலையா?" தனுஜா சொல்ல அதற்கு விஷ்ணு,
"ஹாலோ!! சும்மா இருக்குறதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு தெரியுமா? நீ ஒரு நாள் இருந்து பாரு...அப்பரம் தெரியும் என் கஷ்டம்." சிரித்தான்.
அவன் தொடர்ந்தான், "அது மட்டுமா செய்வேன்....அப்பெப்ப வந்து உன்னைய disturb பண்ணுவேன்ல....அந்த மாதிரியும் செய்யனும்."
"அதானே பாத்தேன்.... நீ திருந்த மாட்ட?" தனுஜா பொய் கோபத்துடன்.
"time starts now....." சொல்லிகொண்டே, சமையல் வேலைகளை ஆரம்பித்தான் விஷ்ணு. பெருமூச்சுவிட்டவாறு தனுஜா ஹால்லுக்கு வந்தாள். தனது ஆபிஸ் ரீப்போர்ட்டை செய்ய தொடங்கினாள் . லேப்டாப்பில் பாடல்களை ஒலிக்க செய்தாள். "டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா..." என்ற இந்தியன் படப்பாடல் ஒலிக்க, சமையலறையிலிருந்த விஷ்ணுவை எட்டி பார்த்தாள்.
***
3 ஆண்டுகளுக்கு முன்பு......
"ஹாலோ, மிஸ்ட்டர் விஷ்ணு உங்களுக்கு அளவு ஜாக்கெட் கொடுத்தா...அத வச்சு சரியா தைக்க தெரியாதா? நீங்களாம் எதுக்கு கடை வச்சு இருக்கீங்க? what the hell man...and i need this blouse tonight for a wedding function!!" சரமாரியாக பொழிந்தாள் தனுஜா.
பகுதி 2)
13 comments:
நல்ல நடை
:))))
வேற என்னமாவது டிஸ்கஸ் பண்ணலாம் கமெண்ட்ல. சும்மா நல்லாருக்குன்னு எழுதி போர் அடிக்குது. என்னய மாதிரி அப்பப்ப மொக்கையா எழுதினா கூட அபபடி எழுது இப்படி எழுதுன்னு சொல்லலாம். நீங்க நல்லா வேற எழுதுறீங்க! :(
//அன்னிக்கு ஒரு நாள் toilet tubelight கெட்டு போச்சு. மாட்ட முடியல எனக்கு. அப்ப தான் உன்னைய மிஸ் பண்ணேன்...நீ இருந்திருந்தா சரியா போட்டு இருந்திருப்பே இல்ல..." வேண்டும் என்றே கிண்டல் அடித்தாள்.//
ithu ultimate :)) loved it...semma postnga..unga kathialam apdiye moochu vidama gada gadanu padikara mathiri oru epect varuthu..avlo fast flow :) loved every bit of it..adutha parta seekrama postavum
Aaha.. Adutha love storya :))) Romance rombavae pongudhu nakkalum saethae :D
Seekiram next part please :D
எனக்கும் நல்லா இருக்குனு சொல்லி போரடிக்குது. :(
:)))
Excellent flow....
தேறிவிட்டீர்கள். நல்ல முன்னேற்ரம். நடையில். முழு கதையும் படிக்கும்படி ஈர்த்துவிட்டீர்கள். கடைசியில் ஒரு கிக். இடுப்பை இட்லிக்கு இணையாக வர்ணித்த உங்களின் ரசனை பிடித்திருக்கிறது. சூப்பர் கலக்குங்கோ.
//அவனும் சிரித்துகொண்டே, "என்ன தான் சாப்பாத்தி, நாண் இருந்தாலும், என் வீட்டு இட்லிக்கு ஈடாகுமா?" தனுஜாவின் இடுப்பை கிள்ளினான். முறைத்தாள்.//
ஹ ஹ ஹா கல கலன்னு இருக்குங்கோ..
அடுத்த எபிசோடும் காதலா சூப்பர் நல்லா சுவாரஸ்யமா இருக்கு.....
@யாசவி, நன்றி:)
@பாப்பு,நான் எப்படி எழுதினாலும் நல்லா இருக்குன்னு சொல்றீயே தம்பி! நீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்!! அவ்வ்வ்வ்
@கில்ஸ்
//pdiye moochu vidama gada gadanu padikara mathiri oru epect varuthu//
ஐயோ பாத்துங்க! மூச்ச அப்பெப்பவாது விட்டுக்குங்க!ஹிஹி
@ஜி3 அக்கா,
//Romance rombavae pongudhu nakkalum saethae//
என்ன பண்றது!! ஹாஹா...அதுவா வருது!
@கார்த்திக், பாப்புவும் நீயும் கட்சி அமைக்க போறீங்களா?
@விசா, நன்றி சார்:)
@வசந்த், நன்றி நன்றி:)
Ungalukku romance supera varudhu, oops ezudha varudhu :) kalakala erukku, idli iduppu, i kku ina pottu kalakkal! :)
@sri
//Ungalukku romance supera varudhu, oops ezudha varudhu :)//
ATHU!
anyway oru anjenaya bakthai naan! purinjitho!:)
//@கார்த்திக், பாப்புவும் நீயும் கட்சி அமைக்க போறீங்களா?
ஜனகனமன.. ஜனங்களை நினை.. கனவுகள் வெல்ல.. காரியம் துணை..
தமிழ்நாடு விளங்கும். :))
Post a Comment