ஒரு காலத்துல தினமும் 2 பதிவுகள் போட்டு கொண்டிருந்தேன். இப்ப பத்து நாளைக்கு ஒரு தடவ, ஒரு மாசத்துக்கு ஒரு தடவன்னு நிலைமை மாறிபோச்சு. காலேஜ் என்னை வாட்டி எடுக்குது! முடியல சாமி! இருந்தாலும் இத இப்பவே எஞ்ஜாய் பண்ணனும். வேலைக்கு போனா.... அதுக்கு அப்பரம் எதுவுமே பண்ண முடியாது! :)
என்ன எழுதுறது...ஒரு ஐடியாவும் வரமாட்டேங்குது. முன்பெல்லாம் எத பாத்தாலும் 'இத பத்தி ப்ளாக்ல எழுதனும்'னு தோணும். இப்ப என் சொந்த வலைப்பூவ பாத்தாகூட ஒரு மண்ணும் மண்டைக்கு வர மாட்டேங்குது. வயசாச்சுலே. அப்படி என்ன வயசுனு கேட்குறீங்களா? இப்ப தான் எல்கேஜி முடிஞ்சு யூ கே ஜி போறேன்.
இன்னும் 2 வாரத்துல இந்த காலேஜ் செம்ஸ்ட்டர் முடிஞ்சு விடும். அதுக்கு அப்பரம் இந்த 'வேட்டைக்காரி' முழு வீச்சில் வருவாள்! அது வரைக்கும் கொஞ்ச மந்தமாதா இருக்கும்னு வானிலை ஆய்வுகள் சொல்லுது!ஹிஹிஹி....
13 comments:
அட போங்க !!!
எங்கள பாத்த வேல வெட்டி இல்லாதவங்கனு நெனைச்சிங்களா?
உங்க கிட்ட பிடிச்சதே இந்த மொக்க தாங்க??
போங்கப்பா, போய் படிக்கிற வேலைய பாருங்க!
அய்யா ஜாலி இன்னும் இரண்டு வாரம் நிம்மதியா இருக்கலாம்...ஹீ ஹீ ஹீ......ஜஸ்ட் ஜாலி. விரைவில் உங்கள் பிளாகிங் பணி தொடர வாருங்கள்
yeah olunga padinga :) all the best for the exam
unga preparation pathi oru post podugna :D
ரெண்டு மாசம் தானே. சமாளிச்சுக்குறோம். நீங்க காலேஜ் முடிச்சிட்டு வாங்க. தேர்வுகளுக்கு வாழ்த்துக்கள்.
@pappu,நீங்களும் படிங்க!ஹிஹி..
வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி:)
@கில்ஸ்,நல்ல ஐடியா கொடுத்தமைக்கு நன்றிங்கோ
அப்ப வேலை வெட்டி இல்லைனா தான் ப்ளாக்கா. ஆனாலும் நல்ல சுவாரஸ்யமாக தான் எழுதுறீங்க. வாழ்த்துகள்
//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//
முதல் உங்க இடுகையை தமிலிஸ்ல இணைங்கக்கா....அப்பறமா ஓட்டு போடுறோம்...
ஆவ்வ்.. நானும் படிக்கணுமா???
come back soon gayathri...
if my memory is not wrong, last time after ur semester u came up with "daddy mummy வீட்டில் இல்லை" :) அதே மாதிரி இன்னொரு daring கதையோட பில்லா style ல ’i m back' ன்னு சொல்லிட்டு வாங்க :)
@திவ்யாபிரியா அக்கா,
//"daddy mummy வீட்டில் இல்லை" :) அதே மாதிரி இன்னொரு daring கதையோட பில்லா style ல ’i m back' ன்னு சொல்லிட்டு வாங்க :)//
ஆஹா...சூப்பர்! நல்லா ஐடியா கொடுக்குறீங்க!!:)நன்றி நன்றி
Hi Gaayu..... hw r u.... ? Gnabagamirukka..... ?
Post a Comment