கரண் ஜோஹர் தயாரிப்பில் அயன் முகர்ஜி (புதிய இயக்குனர், 25 வயசு தான்) இயக்கிய 'wake up sid' என்னும் இந்தி படத்தை பார்த்தேன். மற்ற விமர்சனங்களை படித்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப எதிர்பார்த்தேன். ஆனால் ஓரளவுக்கு தான் என்னை மகிழ்வித்தது.
நமது டைரியை படிப்பதுபோல் ஒரு உணர்வு கண்டிப்பா வரும் படத்தை பார்த்தால். பாடல்கள் சுமார் ரகம். 'இக்குதாரா' என்னும் பாடல் எனக்கு பிடித்து இருந்தது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே செல்வது கொஞ்சம் போர் அடித்தது. இந்த மாதிரி படங்களில் நகைச்சுவை வசனங்கள் பட்டையை கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், இப்படத்தில் அது அதிகமாய் இல்லை.
படத்தில் எனக்கு பிடித்தவை
1) ஹீரோயின் கொன்கோனா ஷர்மா. அவங்கள எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும். இப்படத்தில் தனது வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார்.
2) கல்லூரி பரிட்சையில் கோட்டைவிட்டு வீடு திரும்பும் மகனிடம் அப்பா கத்துவது( ஏதோ எப்பவோ என் வாழ்க்கையில நடந்து சம்பவம் மாதிரியே இருந்துச்சு...ஹிஹிஹி)
3) மும்பை நகரத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என தூண்டிய விதம்.
திரைக்கதையில் வேகம், காட்சிகளில் ஆழம், பாடல்களில் இன்னும் விறுவிறுப்பை சேர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். என்றாலும், கரண் ஜோஹர்க்காகவே தான் இப்படத்தை பார்த்தேன். பைசா வசூல் என கேள்விப்பட்டேன். எனக்கு மகிழ்ச்சியே.
wake up sid- என் வீட்டு அலாரத்திற்கு பிடிக்கவில்லை!
13 comments:
First :))))
//மும்பை நகரத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என தூண்டிய விதம்.//
Ippa dhaana?? Mumbaikku poganumngara aasa ungalukku romba naalavae irukkunnu illa nenachen ;)
Padam naan innum pakkala but getting ok review let see :)
ஏதோ எப்பவோ என் வாழ்க்கையில நடந்து சம்பவம் மாதிரியே இருந்துச்சு...ஹிஹிஹி//
apadiyaaa...
கொட்டைவிட்டு/////
கோட்டைவிட்டு?
உங்களுக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வராதா?
கடவுளே இவங்க கையில தமிழ் படுற பாடுக்கு அதுக்கு உயிர் இருந்தா குமரி முனையில குதிச்சிருக்கும்!
இந்த தடவையாவது என் பெயரை சரியா சொல்லுறீங்களான்னு பாக்குறேன்.
அவராவது கோட்டைவிட்டு என்பதுக்கு கொட்டைவிட்டு என்று தான் போட்டு இருந்தார் நானாக இருந்தால் கொட்டாவிவிட்டு என்று போட்டு இருப்பேன்.....
today only i visited your blog..
மதியம் 2 மணிக்கு படிக்க ஆரம்பித்து தொடரந்து போய்க் கொண்ட இருக்கு ... உங்களை போல மேதையின் (உண்மை தானுங்க ) blog கேய் தான் இவளுவு நாள் தேடி கொண்டு இருந்தேன் ... இன்று முதல் நான் உங்கள் ரசிகன் ....தலைவி
@ஜி3, அக்கா ஒரு டிக்கெட் sponsor பண்ணீங்கன்னா, நல்லா இருக்கும்:)
@pappu, see i got ur name correctly. yea quite true that my tamil dappa dance aaduthu!ஆதலால், கொஞ்ச நாளைக்கு இமயமலைக்கு போலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?
@hems chander, thanks alot for ur words and encouragement. it made my day!!:)
கொன்கனா சென் ஒரே மாதிரி கேரக்டர் ச்சூஸ் பண்றாங்கனு நினைக்கிறேன்..எனிவே நல்ல விமர்சனம்..:))
இதெல்லாம் கல்லாட்ட. செல்லாது, செல்லாது. தமிழில எழுதனும். இமயமலையிலயா? பாபாஜி கிட்ட ட்யூஷனா? அவர் என்ன ஆண்டவனே வந்தாலும் தமிழோட தலையெழுத்து கஷ்டம்தான்!
//கடவுளே இவங்க கையில தமிழ் படுற பாடுக்கு அதுக்கு உயிர் இருந்தா குமரி முனையில குதிச்சிருக்கும்!//
ROTFL :D :D hey wake up sid nallarukunu all telling..aana neenga summarnga mathiri soliteengalay :(
நீங்க இவ்ளோ சொன்னதுக்கப்புறம் எனக்கும் படம் பார்க்கப் பிடிக்கவில்லை. இந்தப் படத்த சாய்ஸ்ல விட்டுடலாம்.
@karthik, but konkona still pulls it off with a splendid performance. she is toooo gd man!
@gils, exactly man!! i went to watch it since my fren recommended. however i didn't like it yea. maybe i expected a lot from karan johar's production!
@viki akka,aiyo akka watch the film. cos i guess i am the only one who has been saying that the film is not gd. most of them liked it. maybe u will like it!:)
Post a Comment