Feb 1, 2010

ஜஸ்ட் சும்மா (1/2/10)

இந்த வருஷத்தின் முதல் மாதம் முடிவடைந்து விட்டது. அதுக்குள்ள ஒரு மாசம் ஓடிபோச்சான்னு நினைக்க தோணுது. இந்த ஒரு மாசத்துல நீ என்ன கிழிச்சேன்னு கேட்காதீங்க. தினம் தேதியகூட கிழிச்சபாடில்லை.
-------------------------------------------------------------------------------------------------
கோவா படம் இன்னும் சிங்கையில் ரிலீஸ் ஆகல. சென்ற வாரம் ரிலீஸ் ஆயிடும்னு ரொம்ப எதிர்பார்த்தேன். இந்த வாரம் கண்டிப்பா வெளிவர வேண்டும்!!! படம் எப்படி இருந்தாலும் பார்த்தே ஆகவேண்டும். வெங்கட் பிரபுவிற்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இங்கே ஆவலுடன் வேட்டிங்!!:)
-------------------------------------------------------------------------------------------------

நேற்று பார்த்திபனின் காபி வித் அனு நிகழ்ச்சியை பார்த்தேன் (சிங்கையில் ஒரு வாரம் கழித்து தான் போடுவான்). நடிகர் பார்த்திபன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னை அவ்வளவாக கவரவில்லை. ஆனால், ஒரு தந்தை பார்த்திபனாக உச்சத்தில் உட்கார்ந்து இருக்கிறார். ஒரு அப்பா இப்படி தான் இருக்கவேண்டும் என்று அவர் சாதித்து காட்டியிருக்கிறார். பிள்ளைகளை பற்றி பேசும்போது அவர் கண்களில் தெரிந்த மகிழ்ச்சி, ஒரு பெருமிதம், பெருமை அப்படியே தெரிந்தது. பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எது செய்தாலும் நம் பிள்ளை நம் பிள்ளை தான், அவன்/அவள் எந்த துறையில் இருந்தாலும் அது அவனுக்கு/அவளுக்கு நல்லது என்று பார்த்திபன் போல் நினைக்கும் பெற்றோர்கள் மிகவும் குறை.

அந்த வகையில், பார்த்திபன் சார், நீங்க உண்மையாகவே ஆயிரத்தில் ஒருவன் தான் சார்!
-----------------------------------------------------------------------------------------

பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் முடிவை சில பெற்றோர்களே அனுபதி கொடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒருவித பயம், பாசம் என்றே சொல்லலாம். ஆனால், கையிலேயே பட்டாம்பூச்சியை வைத்து அழகு பார்ப்பதைவிட, அதை பறக்கவிட்டு அழகு பார்ப்பதே உண்மையான மகிழ்ச்சி.

நேற்று நீயா நானா நிகழ்ச்சியை கொஞ்சம் நேரம்தான் பார்த்தேன். பார்த்த பத்து நிமிடங்களில் கோபி சொன்ன கருத்து ரொம்ப பிடிச்சு இருந்தது. பேசுவதை பற்றி சொன்னார். புரட்சிகரமான பேச்சு, சமுதாயத்தை சீர்திருத்தம் செய்யும் பேச்சு பற்றி சொன்னார். பெரிய அளவிளான பேச்சு மட்டும் அல்ல, வீட்டிலேயோ, பிள்ளைகளிடமோ, பக்கத்துவீட்டுக்காரிடமோ பேச வேண்டும். அதற்கு ஒருவர், updated speakerராக இருக்க வேண்டும்.

பலவற்றை படிக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்க வேண்டும். நாட்டு நடப்பு பற்றி அறிந்து இருக்க வேண்டும். இசை, சினிமா, விளையாட்டு ஆகியவற்றை பற்றி கொஞ்சமாவது தெரிந்து இருக்கவேண்டும்.

கோபி சொன்ன கருத்து, "பிள்ளையிடம் போய் பேச வேண்டும். டோனி கேப்டனா இருக்கறது நல்லதா, சச்சின் விளையாட்டுலேந்து ஓய்வு எடுக்கனுமா? 20-20 கிரிக்கெட்ட பத்தி நீ என்ன நினைக்குற? இப்படி பேச வேணும். ஆனா அத எல்லாம் விட்டுபுட்டு கிரிக்கெட் பார்த்து நீ என்ன செய்ய போற? என்று கேட்க கூடாது." என்றார்.

எனக்கு இந்த கருத்து தான் ரொம்ப பிடிச்சு இருந்தது. நீ இத ஏன் செய்யுற? என்ற கேள்வி, ஒரு உறவு தொடராம இருப்பதற்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. ஏன் என்றால் அந்த கேள்வி கேட்ட பிறகு, பதில் பேச தோணாது. பிடிக்காது. பேச்சு ரொம்ப முக்கியம். தொழில் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசாமல், பலவற்றை பேச வேண்டும். அதை பெற்றோர்களும் பிள்ளைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------

நேற்று இந்த ஆங்கில பாடலை கேட்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த பாடலில் பிடித்த வரிகள்

"They say time is a healer
It's more like a concealer for a scar
Cause it never really leaves us"


அருமை அருமை அருமை!! பாடிய விதமும் அதைவிட அருமை. இந்த வரிகளை பார்த்த பிறகு, எனக்கும் பொங்கியது வார்த்தைகள்.


Words hurt
Pricks your heart
cheers fallen apart

i'm miles away from the world
smiles are gone ice cold
a broken mirror, a torn kite,a crumbled paper
If you had feel like either one,
you had lived a life.
If you're feeling like all three,
you're living my life!

எப்படிங்க இருக்கு??
----------------------------------------------------------------------------------------------

6 comments:

அண்ணாமலையான் said...

மறுபடியும் பயந்துகிட்டே போட்டேனுங்க...

Karthik said...

கோவா படம் நாங்களே இன்னும் பார்க்கலைங்க. ;)

பெற்றோர்கள் பற்றி புலம்புறது புரியுது. ஆனால் பிள்ளைகள் கேரியர்ல அக்கறையே இல்லாத பெற்றோர்களும் இருக்காங்க. அது இதவிட கொடுமை. :(

பாட்டு நல்லாதான் இருக்கு. ஆனா ஆறிப்போன காயத்தை கிளறிவிடுறான்.

gils said...

avvvvvv....mango engleees paatulam poduthu!!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஆனால், ஒரு தந்தை பார்த்திபனாக உச்சத்தில் உட்கார்ந்து இருக்கிறார்//

மன்னிக்க வேண்டும். ஒரு சிறந்த தந்தையாக இருந்திருந்தால் தன் மனைவியை விவாகரத்து செய்திருப்பாரா? இது தங்கள் பிள்ளைகளின் மன நலத்தைப் பாதிக்கும் என்பதை உணராது இருப்பாரா?

Srivats said...

paatu super!

I like gopinath , the way he speaks is awesome, I bet he can speak without notes , just like taht :)

டம்பி மேவீ said...

பிடிக்காத படிப்பு .....அதை படித்து விட்டு பிடிக்காத வாழ்க்கை வாழ்வது இருக்கே ......அதை விட வேற கொடுமை வேறு ஏதும் இருக்காது ....


கருத்து சுகந்திரம் வீட்டில் இல்லாத வரைக்கும் ...... .... நாடும், வீடும் எதுவும் உருபடாது .....