Jan 24, 2010

ஆயிரத்தில் ஆயா

காமெடி போஸ்ட் எழுதுவதற்கு சரக்கு(அட தப்பா நினைக்காதீங்க...) எதுவுமே இல்லன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போது தான் செல்வாராகவன், கார்த்தி, ரீமா ஞாபகம் வந்துச்சு. உடனே கிளம்பி போனேன்...அப்படின்னு நினைக்காதீங்க! அவங்க இப்போ வேலவெட்டி இல்லாம தான் இருக்காங்க...ஆக மெதுவாக தான் கிளம்பி போனேன்.

செல்வா வீட்டு ஹாலில் நிறைய வரலாறு குறிப்பு புத்தகங்கள், ஆங்கில பட டிவிடிகள் மேசையில் கிடந்தது. செல்வா, கார்த்தி, ரீமா உட்கார்ந்து இருந்தாங்க.
நான் உள்ளே நுழைந்தேன்.

நான்: வணக்கம் கார்த்தி, ஹாய் செல்வா, ஹாலோ ரீமா.
(மூவரும் சிரித்தனர். சிரிப்பதுபோல் முறைத்தனர். )

நான்: என் வலைப்பூவுக்கு ஒரு காமெடி போஸ்ட் தேவை. அதான் உங்கள பாக்க வந்தேன்.

செல்வா: எங்கள பார்த்தா எப்படி இருக்கு? (கண்ணாடியை சரிசெய்து கொண்டார்)

நான் ஒரு முறை அவரை மேலும் கீழும் பார்த்தேன்.

நான்: ஆயிரத்தில் ஒருவன் மாதிரி தெரியுறீங்க சார். (ஐஸ் வைத்தேன்...படத்தின் தலைப்பை சொன்னதும் சாந்தம் ஆனார்)

நான்: ஆமா....சார்...நீங்க ஏன் இந்த படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன்னு தலைப்பு வச்சீங்க? அது அர்த்தம் என்ன?

கார்த்தி: நானும் நிறைய தடவ கேட்டேன். அவர் எம் ஜி ஆர் ரசிகர்...அதான் அப்படி வச்சேன்னு சொன்னாரு.

நான்: ஓ...நான்கூட நினைச்சுட்டேன்...இந்த படம் ஆயிரத்தில் ஒருத்தனுக்கு மட்டும் தான் புரியும்னு!

கார்த்தி: ஏங்க..இப்படி எடுக்குமுடுக்கா கேட்டா நாங்க என்ன பண்றது?

நான்: சரி அடுத்த கேள்வி உங்களுக்கு கார்த்தி.... அது என்ன படத்துல ஆவூன்னா...பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன் உங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றீங்க. சரி ரீமாவுக்கு பதிலா ஒரு கிழவி அங்க நின்னு இருந்தா...ஏன் ரீமாவே மேக்-கப் போடாம அங்க நின்னு இருந்தா... அப்படி தான் சொல்லியிருப்பீங்களா?

கார்த்தி: இது முழுக்க முழுக்க செல்வாவோட கற்பனை! அவர் தான் இதுக்கு பதில் சொல்லனும்...

நான்: இப்படி எஸ்கேப் ஆனா எப்படி சார்?

(நான் ரீமாவை கிண்டல் பண்ணியது கொஞ்சம் நேரம் கழிச்சு தான் அவருக்கு புரிஞ்சுது...அவர் பாய்ந்தார்...)

ரீமா: hey what are you thinking of me man? u *&($&$^$##&***.

நான்: இந்தா தாயீ.... லண்டன்ல பொறந்து வாஷிங்டன்ல வாய் கொப்புளிச்ச மாதிரி இங்கிலீஷ் பேசினா...நான் ஒன்னும் பயப்புட மாட்டேன்!

ரீமா: i'll shoot you!
நான்: தீபாவளி துப்பாக்கி உங்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா? எனக்கும் தான் கிடைக்கும்.

(என் டம்மி துப்பாக்கிய தூக்கி காட்டியதும் பயந்துட்டார்)

ரீமா: ok ok cool yea...what were u asking me?

நான்: தமிழ் தமிழ்...

ரீமா: (ஆங்கிலம் கலந்த தமிழில்) இந்த படத்துல ஏண்டா நடிச்சேன்னு நினைச்சேன் ஆரம்புத்துலே... அப்பரம் விளங்கிச்சு செல்வா என்ன எதிர்பார்க்குறார்ன்னு.

நான்: படம் பார்க்க போன நாங்களும் அப்படி தான்...ஏண்டா படத்துக்கு வந்தோம்னு ஆச்சு!

கார்த்தி: ஏன் படம் பிடிக்கலையா?

நான்: அட என்ன ஒரு படம். என் வாழ்க்கையவே திருப்பி போட்ட படம்!

செல்வா: (சந்தோஷம் அடைந்தார்) அப்படியா? ஏன்?

நான்: இந்த படத்த பார்த்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னேன் முதல் நாள் முதல் ஷோவுக்கு. குடும்பத்தோட பார்க்க போனோம். அடுத்த நாள் காலையில எனக்கு டிபன் கட். மதியம் சாப்பாடு இல்ல! என்னைய கொலவெறியோட பாக்குறாங்க என் குடும்பம். இப்படி என் வாழ்க்கை திசைதிருப்பி போனதற்கு காரணம் இந்த படம் தான்!

செல்வா: உங்களுக்கு புரியலைன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது? வரலாறு புரிஞ்சா இது புரியும். (குதித்தார்)

நான்: வரலாறு மட்டும் போதுமா? இல்ல...தமிழும் தெரிஞ்சு இருக்கனுமா? ரெண்டாவது பகுதில எனக்கு தமிழ் படத்துக்கே தமிழ் subtitles தேவைப்பட்டுச்சு!

கார்த்தி: கொஞ்சம் சுத்த தமிழா போச்சு.

நான்: தமிழ் சுத்தமா இருந்து என்ன பயன்? படம் சுத்தமா இல்லையே?

கார்த்தி:(தலையை தொங்க போட்டார்)

நான்: சரி பருத்திவீரன் படத்துல ஒரு மாதிரியா நடிச்சீங்க. சரி ஏத்துகிட்டோம். அதே மாதிரி மறுபடியும் இந்த படத்துல நடிச்சு போர் அடிக்க வச்சுட்டீங்களே. இந்த சாக்லெட் பாய், அமெரிக்கா மாப்பிள்ள, பொண்ணு பின்னாடி ஓடுற பையன், காலேஜ் பசங்க ரோல்.... இந்த மாதிரி எல்லாம் நடிக்க வராதா?

கார்த்தி: அப்பா சொல்லியிருக்கார்.....

நான்: என்னென்னு? அழுக்கு ரோல தான் நடிக்கனும்னா...

கார்த்தி: அது இல்லங்க...

செல்வா: முதல அவருக்கு நல்ல கோட் சூட் போட்ட கதாபாத்திரம் தான் கொடுத்தோம்... அவரு தான் செண்டிமெண்ட் காரணத்துக்காக...அதெல்லாம் கழட்டி போட்டு கருப்பு மண்ண எடுத்து தேச்சிகிட்டாரு.

நான்: ஓ...அப்படி போகுதா கதை....செல்வா சார் உங்ககிட்ட இன்னொரு கேள்வி.. இத படத்துல பார்த்திபன் சார காமெடி பண்ண வைக்கனும்னு எப்படி தோணிச்சு?

செல்வா: யோவ்...அவர் பண்ணது ராஜா ரோல். காமெடி ரோல் கிடையாது.

நான்: ஹாஹாஹா...எது அதுவா? ஆடிகிட்டே ஒரு சீன்ல வருவாரே...அது காமெடி கிடையாதா உங்க ஊர்ல??? ஹாஹாஹா...ஐயோ ஐயோ... தியெட்டர்ல அந்த சீனுக்கு என்ன மாதிரி ஒரு சிரிப்பு வெடி வெடிச்சுது தெரியுமா? ஹாஹா...போங்க சார்...நீங்க தான் செம்ம காமெடியா பேசுறீங்க (எனக்கு சிரிப்பு தாங்க முடியல)

(ரீமாவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் தமிழில் பேசியதால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள கார்த்தியிடம் சென்றார்.)

செல்வா: அந்த காலத்துல ராஜா இப்படி தான் இருந்தாரு!!

நான்: அப்போ எல்லாம் ராஜாவும் பெரிய டான்சர்னு சொல்லுங்க...(எனக்கு பார்த்திபன் ஆடிய சீன் கண்ணு முன்னால வர...மீண்டும் சிரித்தேன்.)

செல்வா: தமிழ் சினிமாவ அடுத்த லெவுலுக்கு எடுத்துகிட்டு போக இந்த மாதிரி படம் தேவை.

நான்: ஆமா சார். சரியா சொன்னீங்க. சன் டிவில இங்கிலீஷ் படத்த தான் தமிழ்ல டப் பண்ணி போட்டுகிட்டு இருந்தான். இந்த மாதிரி படம் வந்துச்சுனா, அவன் தமிழ் படத்தையே தமிழ்ல டப் பண்ணி போடனும்! இத எவ்வளவு பெரிய முன்னேற்றம்!! அடுத்த லெவுல் தாங்கோ!!

ரீமா: where is andrea?

(செல்வா பதில் சொல்லவில்லை)

நான்: செல்வா சார் எங்க அவங்க?

செல்வா: வீணா எங்கிட்ட கேள்விகேட்டு என்னைய மாட்டிவிடாதீங்க! நான் ஏதாச்சு சொல்ல போக...செல்வாவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ...அப்படி ஏதாச்சு கிசுகிசு எழுதுவீங்க... எதுக்கு வீண்பேச்சு...

நான்: ஆஹா... சூப்பரா ஐடியாவ அள்ளிவீசுறீங்க! அடுத்த கிசுகிசு அது தான்.

கார்த்தி: இண்டர்வியூ முடிஞ்சுதா?

நான்: இதே மாதிரி படத்துல நடிச்சீங்கன்னா, உங்க கதை தான் சார் முடிஞ்சு போகும்.

கார்த்தி: அடுத்த படத்துல ரொம்ப யூத்வுல்லா வறேன்.

நான்: எனக்கு நம்பிக்கை இல்ல சார்.

கார்த்தி: அட நம்புங்கப்பா!

நான்: இன்னொரு முக்கியமான கேள்வி செல்வா சார்.... அடுத்த படம் என்ன?

செல்வா: இப்போதைக்கு ஒரு passport size photo கூட எடுக்க போறது இல்ல. எத எடுத்தாலும், உங்கள மாதிரி ஆளுங்க ஏதாச்சு குறை சொல்லிகிட்டு இருப்பீங்க!

நான்: அட நீங்க இந்த மாதிரி கண்டிப்பா எடுக்கனும். அப்பரம் இல்லேன்னு ப்ளாக் எழுதுற எங்கள மாதிரி ஆளுங்க புழைப்பு என்ன ஆகுறது? ரீமா...உங்க அடுத்த படம்?

ரீமா: ஹாலிவுட்ல இரண்டு மூனு படம் பேசிகிட்டு இருக்காங்க....

நான்: இது உலக நடிப்புடா சாமி! கார்த்தி நீங்க...?

கார்த்தி: செஞ்ச பாவங்கள கழிக்க இமயமலைக்கு போக போறேன்...

நான்: ஹாஹா...ஒரே ஒரு கேள்வி. நீங்க திடீரென்னு கலரா மாறிடுறீங்க...அப்பரம் கருப்பா இருக்கீங்க படத்துல...சோப்பு போட்டு குளிப்பீங்களா இல்ல தங்க பிஸ்கேட் போட்டு குளிப்பீங்களா?

கார்த்தி: ஐயோ...எனக்கும் அதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல. அண்ணன் பிரச்சனை அது. அது தங்கம்கூட இல்லங்க...நாய் பிஸ்கேட் அடிக்கி வச்சு இருந்தோம்...அத போய் தங்கம் பிஸ்கேட்னு சொல்லிட்டாங்க இந்த இன்கம்டெக்ஸ் ஆபிசர்.....

நான்: நிசமாவா? இந்த உலகம் இன்னுமா நம்பிகிட்டு இருக்கு!!

11 comments:

gils said...

ROTFL :D :D mango..chaancela...kumudham reporter rangeku kelvi kanaigalai thoduthurkeenga :D

ரங்கன் said...

exceptional post.hilarious..!!

LOL..!!

நல்லாதான் இருக்கு..ஆயிரத்தில் ஆயா!!

அண்ணாமலையான் said...

ஆயாக்கு என் அனுதாபங்கள்...

Cable Sankar said...

:)

சிம்பா said...

அப்போ ஆண்ட்ரியாவுக்கும் செல்வாவுக்கும் கசமுசா உண்மை தான? ;)

குப்பன்.யாஹூ said...

wow superb post.

Srivats said...

ROFTL after a long time, super appu :)

டம்பி மேவீ said...

" (என் டம்மி துப்பாக்கிய தூக்கி காட்டியதும் பயந்துட்டார்)"

நீங்க என்னை சொல்லலையே .........

டம்பி மேவீ said...

நன்றாக சிரித்தேன் .....


ஆயிரத்தில் ஒருவன் ல நமீதா நடிச்சு இருந்த .....படம் ஓஓஹோ ன்னு ஓடிருக்கும் ...(தியடரை விட்டா என்றெல்லாம் கேட்ட கூடாது)

மோகன் குமார் said...

செமயா வாரியிருக்கீங்க

Tamil Comedy said...

.ஒரு பெண்ணை காதலிக்கற விஷயத்தை அவகிட்டே சொன்னா அவளுக்கு தாங்குற சக்தி இருக்க வேண்டும்…

அப்புறம்?

அந்த விஷயத்தை அவ அண்ணன்கிடே சொன்னா,

நமக்கு தாங்கற சக்தி இருக்க வேண்டும்..!