Feb 11, 2010

மன்னிப்பாயா

இது அமுதாவிற்கு பிடிச்ச கடற்கரை. அதிகம் கூட்டம் இருக்காது. சுற்றுலா பயணிகள் சிலர் பேர் வருவார்கள். மற்றபடி பெரிய அளவில் கூட்டம் இல்லாத ஒரு அழகான இடம். அழகான பெண்களுக்கு அழகான இடம் பிடிப்பது ஒன்றும் அதிசயமில்லை.

ரோஷன் மணலில் விளையாடி கொண்டிருந்தான். நானும் அமுதாவும் ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்து இருந்தோம். அவள் என் தோளில் சாய்ந்து கொண்டாள். கொஞ்சம் காலமாகவே நான் அதிகம் பேசுவதை குறைத்து கொண்டேன். யார் மேலையும் கோபம் இல்லை. கோபம் எல்லாம் எனக்கு என் மேலே தான்.

மடியில் வைத்திருந்த என் கையை அவள் பிடித்தாள். அவள் கைவிரல்களும் எனதும் சங்கமம் ஆயின. சாய்ந்தபடியே அவள், " ராம், ஏன் ரொம்ப அமைதியா இருக்க?"

நான், "ம்ம்..ஒன்னுமில்லமா.."

அவளது விரல்கள் என் விரல்களோடு விளையாடி கொண்டிருந்தன. நான் அதை கவனித்தேன்.ரசித்தேன். என் பார்வை மட்டும் மேகம்,கடல், அலைகள், மணல், ரோஷன் என மாறி மாறி சென்றன. கொஞ்ச நேரம் கழித்து அமுதா,

"do you want something?"

நான், "இல்லமா..i am fine. do you want anything?"

சாய்ந்து கொண்டிருந்த அமுதா எழுந்தாள். என் முகத்தை திருப்பினாள் அவள் முகத்திற்கு நேராக.

"yes" என்றாள்.

"what மா?" சாந்தமாய் கேட்டேன்.

"kiss me" என்றாள் உதட்டோரம் ஒரு சின்ன சினுங்கலுடன்.

"what!!!" இம்முறை what என்பது ஆச்சிரியக்குரியுடன் போனது. அவள் கண்களை பார்த்தேன். ஆண்களை வெட்கப்பட வைக்கும் சக்தி/திறமை பெண்களின் கண்களுக்கு உண்டு.

"வேணுமா? வேண்டாமா?" கேள்விபதில் புதிர் போட்டி நடத்தினாள் என் கூச்சத்துடன்.

"அமு... this is a public place மா." சுற்றும்முற்றும் பார்த்தேன்.

அவளது ஆள்காட்டி விரல் என் உதடுகள் மேல் படர்ந்தபடி, "this is not a public place. this belongs only to me." என பதில் அளித்தாள். வெட்கம் கலந்த புன்னகையுடன் நான் அவளது முகத்தை பார்த்தேன்.

தூரத்தில் ரோஷன் மணலுடன் விளையாடிய படி இருந்தான். எங்களை கவனிக்கவில்லை. அமுதாவின் உதடுகளுக்கும் எனது உதடுகளுக்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. சிறிது நேரம் உதடுகள் டென்னிஸ் ஆட்டம் ஆடின.

நினைவுகள் பின்னோக்கி சென்றன.நான் செய்த துரோகம், தவறு, முட்டாள்தனம் நினைவில் மிதந்தன. நிச்சயக்கப்பட்ட திருமணம். திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களில் வேலையிலிருந்து நீக்கம். மன உளைச்சல். போதைக்கு அடிமை. போதை பொருள் விற்றல். குடும்பத்தை சரியாக கவனிக்காமல் போக, பல பண பிரச்சனையிலும், ரவுடி கும்பலிலும் மாட்டிகொண்டேன். அமுதா கர்பமாக இருக்க, நான் சிறையில் இருந்தேன். ஏமாற்றம், துரோகம், என்னையே நம்பி வந்தவளை ஏமாற்றிவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் உலுகியது.

சிறையில் கற்றுகொண்டவை ஏராளம். தியானம், மனதை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ளுதல் என்று என்னை புதிதாய் பிறக்க செய்தது என் 5 வருட சிறை வாழ்க்கை. வெளியே வந்ததும் என்னை ஏற்றுபாளா என்று தெரியவில்லை. ஒற்றை பெற்றோராக ரோஷனை வளர்த்த விதம், தன் நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக வர அவளின் உழைப்பு என அனைத்தையும் கண்டு வியந்தேன்.

"அப்பா, am so happy to see you back." என்று ரோஷன் என்னை பார்த்து முதன் முதலாக சொன்ன போது யாரோ என்னை சாட்டையால் அடித்ததுபோல் உணர்ந்தேன். முதல் குழந்தை. முதல் பிரசவம். அப்போது அமுதா பக்கத்தில் நான் இல்லை என்பது என்னை மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. நான் வெளியூர் போய் வந்ததாக ரோஷனிடம் சொல்லிவைத்திருந்தாள் அமுதா.

பழையதை பற்றி எதுவும் கிண்டவில்லை. நான் என்னமோ பக்கத்து தெருவிற்கு போயிட்டு வந்ததுபோல் ரொம்ப சாதாரணமாக பழகினாள் என்னிடம். நான் வெளியே வந்த முதல் நாள், அன்று இரவு அமுதா என்னிடம்,

"ராம், நீ எத பத்தியும் நினைக்காத. கெட்ட கனவு நினைச்சு எல்லாத்தையும் மறுந்துடு.நானும் மறுந்துடுறேன். மறந்துட்டேன். புதுசா ஆரம்பிப்போம்." நம்பிக்கை தந்தாள்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அழுகை வந்தது. ஏன்? அதுவும் புரியவில்லை. அதற்கு பிறகு, முடிவு எடுத்தேன். வாழ்க்கை இனி அமுதாவிற்கும் ரோஷனுக்கும் மட்டுமே சொந்தம். அவர்கள் தான் என் உலகம். ஒரு வேலையில் சேர முயற்சி செய்தேன். சிறை கைதிக்கு என்ன தருவார்கள்? இது வரைக்கும் 124 வேலை இடங்களில் கேட்டு பார்த்துவிட்டேன். ஒன்றும் கைகூடவில்லை. அமுதாவின் கம்பெனியில் வேலை பார்க்க கூப்பிட்டாள் அமுதா. நான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்னால் அவளுக்கு கஷ்டம் எதுவும் வேண்டாமே.

நான் இனி ஒரு வேஸ்ட் என்று அமுதாவின் அப்பா அவளிடம் பலமுறை சொல்லியிருக்கிறார், அமுதாவிற்கும் எனக்கும் விவாகரம் செய்ய முயற்சி செய்தியிருக்கிறார். ஆனால், ஒருபோதும் என்னை விட்டுகொடுத்தது இல்லை அமுதா. இதனாலேயே அடிக்கடி சண்டை அவர்கள் இருவருக்கும். அமுதாவின் இத்தனை அன்பை பெற நான் என்ன செய்து இருக்கிறேன்? என்ன செய்ய போகிறேன்?

விளையாட்டு திடலில் இருந்து விலக மனமில்லாத குழந்தைபோல் மெதுவாய் அவளின் இதழ்கள் என் இதழ்களிலிருந்து பிரிந்து சென்றன. எச்சில் முழுங்கினேன் நான். எங்களுக்கு பின்னால்,அவ்வழியே சென்ற வயதான வெள்ளைக்கார தம்பதியினர், "that was a good one!" சத்தம்போட்டு கூறினர் எங்களை பார்த்து. பின்னாடி திரும்பி பதிலுக்கு அமுதா,

"thanks dude! have a great day with your lady too!" சிரித்தாள்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெட்கம் என் உறுப்புகளில் ஊடுருவியது. மறுபடியும் அமுதா என்னை பார்த்தாள். நான் அவளது கண்களை பார்ப்பதை தவிர்த்தேன். தவிர்ப்பதுபோல் நடித்தேன். சற்று முன் நடந்ததை எண்ணி புன்னகையித்தேன். கவனித்துவிட்டாள் அமுதா. அவளது வலது கையை என் கன்னத்தில் வைத்து,

"நீ எப்போதுமே இப்படியே சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கனும். அடிக்கடி ஒரு முகத்துல ஒரு சோகம் தெரியுது டா. அப்படி உன்னய பாக்கும்போது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு டா. எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு...ம்ம்..சரியா.." கன்னத்தை தடவி விட்டாள்.

அச்சமயம், ரோஷன் தூரத்தில் இருந்து சத்தம்போட்டு கூப்பிட்டான், "அம்மா, இங்க வாங்களேன். i need your help to build this castle."

அமுதா, "i'll back sweety." என் காது அருகே மெதுவாய் சொல்லிவிட்டு சென்றாள்.

இப்படி அளவுக்கு அதிகமான காதலை என் மேல் கொட்ட நான் தகுதியானவனா? எதையும் எதிர்பார்க்காமல் வருவதற்கு பெயரோ காதல்?

அமுதாவும் ரோஷானும் மணலுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருப்பதை கண்கொட்டாமல் பார்த்தேன்.

ரோஷன், வளரும் குழந்தை.
அமுதா, வளர்ந்த குழந்தை.

(happy valentine's day wishes to all)

16 comments:

அண்ணாமலையான் said...

இது காதல் வாரமா?

gils said...

!!!! WOOOWWW!!! short film paatha effect..semma screenplay...

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு.., வாழ்த்துக்கள்

Karthik said...

nice one sis.. :)

have a graet valentine's day!!

Prabhu said...

"do you want something?"////

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்!

23-C said...

ukaanthu yosipeengala!!!

good one...

ajay said...

story sema feel.. "this is a public place மா" valakama idhelam ponunga dhana soluvanga??? anyway pasanga solra madri irundhalum nalla dhan iruku...

Kumaresh said...

தோழி

நான் எப்பொழுதுமே பதிவுகளை படித்துவிட்டு செல்பவன். பின்னூட்டம் இடும் வழக்கமில்லை. இந்த பதிவு என்னை என்னமோ செய்துவிட்டது. ஒரு இரண்டு நிமிட வாசிப்பில் நான் சற்று அசந்து,என் மனைவியின் காதலை உணர்ந்தேன். தங்களுக்கு என் வாழ்த்து என்று கூறுவதைவிட நன்றி என்று சொல்லவே தோன்றுகிறது.

நன்றி தோழி. மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

FunScribbler said...

@ அனைவருக்கும் என் நன்றிகள்:)
@கில்ஸ், குறும்படமா? அந்த அளவுக்கா இருக்கு. நன்றிப்பா..

@பப்பு, குசும்பு!!
@23-சி, நின்னுகிட்டு யோசிப்போம்:)
@அஜய், நன்றிங்கோ!
@குமரேஷ், நன்றி தோழா! அண்ணிக்கு ஒரு ஹாய் சொல்லிடுங்க:)

kanagu said...

romba super ah irukkunga... chance eh illa :) :)

belated Valentine's day wishes :) :)

FunScribbler said...

@kanagu, thanks!!:)

shakthi said...

Hi gayathri, really superb. Romba naalaiku appuram oru nalla kathai padicha thirupthi. Ithe ithe than nanga ethir parkarom. Manusula ethana kastam irunthalum, intha mathiri unga kathaigala padikum bothu aaruthala iruku. Thanks

Ethirparpugalodu,
shakthi.

லோகு said...

really touching one

FunScribbler said...

@shakti &logu, thanks so much people! ur comments are really encouraging me to become a better writer! keep reading! have a gr8 day:))

ivingobi said...

ஹாய் காயு..... ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து... டைமிங் ப்ராப்ளம் தான்...... இனி மிஷ் பண்ண மாட்டேன்.....
இந்த கதை படிச்சதும் கண்களில் கண்ணீர் வந்தது ஏன் என்று தெரியவில்லை....... அந்த கண்ணீர் தான் இந்த கதைக்கு நான் கொடுக்கும் மரியாதை.......

FunScribbler said...

@gobi anna, why this much of feelings of india?? anyway thanks alot for ur continous support:))