Feb 28, 2010

நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும்.என்ன அடிச்சது அந்தக் காதல்

முதல் தடவ 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் trailerயை பார்த்தபோது, இந்த வரிகள்(போஸ்ட்டின் தலைப்பு) என்னை ரொம்ப கவர்ந்திடுச்சு. படம் கொஞ்சம் கொஞ்சம் வாரணம் ஆயிரம் சாயலில் இருக்கே என்று நினைத்து இது ஒன்னும் தேராதுனு நினைச்சேன்.

படத்த நேத்திக்கு பார்த்தேன்.

"என்னை போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும்."

உண்மையில் என்னை தாக்கியது, என்னை தலைகீழாய் திருப்பியது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை புன்னகையித்தபடியே இருந்தேன். படம், அவ்வளவு அழகு! கௌதம், கௌதம், கௌதம்..... எனக்கு என்ன சொல்றதுனு தெரியல்ல. காதல் சொட்ட சொட்ட ஒரு படத்த கொடுத்து இருக்கீங்க- உங்க மனைவி ரொம்ப லக்கி!!:)

கௌதம் அவர்களின் சொந்த வாழ்க்கை பயணம் தான் இப்படம். அவர் கடந்த காலத்தை பற்றி நிறைய நேர்முக பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆக, அவரால் காட்சிகளை அவ்வளவு இயல்பாய் திரைக்கு கொண்டு வந்து உள்ளார்.

இசை, பாடல்கள், நடிப்பு, இயல்பான வசனங்கள்- அனைத்தும் படத்தின் வெற்றிக்கு வழி வகுத்து உள்ளன.

திரிஷாவுக்கு சிம்புக்கும் சண்டை ஏற்பட, மறுநாள் திரிஷா எதுவுமே நடக்காததுபோல் போவார் ஒரு புன்னகையுடன், அப்போ ஒரு வசனம் வரும் (narration)

"அவ சிரிப்பு கவிதையா இருந்துச்சு. எனக்கு கோபமா வந்துச்சு"

கௌதம்...எப்படிய்யா இப்படிலாம்... அட போங்க! எனக்கு பாராட்ட இன்னொரு புது மொழி வேண்டும்!

விண்ணைத் தாண்டி வருவாயா- என்னை தாண்டி போனுச்சு, என்னைய தாக்கிட்டு போச்சு!

8 comments:

Prabhu said...

சேம் ஃபீல்... இப்படி காதல் மட்டு சொட்டச் சொட்ட யாரும் எடுப்பதில்லை.... ச்சே.. ஃபீலு..

gils said...

hifi mango :))) atlast someone romantic enuff to like the movie!! :D thot romance has gone out of bloggies..entha posta pathalum criticising the movie as if it had been taken for the oscars :D i loved the movie and particularly enjoyed the scenes u've mentioned :D

ajay said...

didnt say anything about rahman?? :( film was romantic enough and the feel stays for next two or three days... potu thakiruchu...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விமர்சனம் அருமை

Cable சங்கர் said...

:)

விக்னேஷ்வரி said...

காதல் சொட்ட சொட்ட ஒரு படத்த கொடுத்து இருக்கீங்க- உங்க மனைவி ரொம்ப லக்கி!!:) //
இப்படியெல்லாம் அவசரப்படக் கூடாது தமிழ்மாங்கனி. ஒரு வேளை இந்தக் காதல் அவர் மனைவியின் மீதில்லாமல் காதலியின் மேலிருந்திருந்தால் ;)

"அவ சிரிப்பு கவிதையா இருந்துச்சு. எனக்கு கோபமா வந்துச்சு"//
நானும் ரசித்தேன்.

என்னைய தாக்கிட்டு போச்சு! //
அடிக்கள்ளி, யாரந்த கள்ளன்? ;)

FunScribbler said...

@விக்னேஷ்வரி அக்கா,

//அடிக்கள்ளி, யாரந்த கள்ளன்? ;)//
நான் ஒரு ஆஞ்ஜநயா பக்தை என்பதை நீங்க அடிக்கடி மறந்துடுறீங்க!:)

சிம்பா said...

Yeh It's a Musical Love story.. Almost green every where...

நமது மனதையும் சேர்த்து பசுமையாக்கிவிடுகிறது என்பதே உண்மை... :)

//நான் ஒரு ஆஞ்ஜநயா பக்தை என்பதை நீங்க அடிக்கடி மறந்துடுறீங்க!:)//

ABT ல மலையை தூக்கிட்டு பரப்பாரே அவரா?