Aug 3, 2010

காதல் அணுக்கள்

ஜன்னல் வழியே மழை சாரல் சஞ்ஜனாவின் முகத்தில் பட்டது. சோம்பல் முறித்த சஞ்ஜனா படுக்கையில் படுத்தவாறே ஜன்னல்களை மூடினாள். பக்கத்தில் இருந்த அஜிஷின் கைகடிக்காரத்தை பார்த்தாள்.

காலை மணி 10.30. வெளியே பெய்து கொண்டிருந்த மழையை ரசித்தாள். வானம் தியெட்டர் இருளில் இருந்தது. ஞாயிற்றுகிழமைக்கு ஏற்ற ஒரு சூழல்! போர்வையை இழுத்து போத்தியவாறு அஜிஷ் அவள் கழுத்தில் இதழ் பதித்தான்.

அவன் பக்கம் திரும்பி புன்னகையித்தபடி சஞ்ஜனா, "எந்திரிச்சுட்டீயா?"

"weather is awesome, சஞ்ஜு!"

"yes, just like what you did last night" குறும்பு பார்வையுடன் கண் சிமிட்டினாள்.

சிரித்தவாறு, "மேடம், இன்னும் romantic மூட்ல தான் இருக்காங்க போல இருக்கு."

"romantic mood, angry mood....எதுவா இருந்தாலும் இந்த ஒரு நாள் தான் உன்னைய பாக்க முடியுது." சஞ்ஜனா செல்ல கோபத்துடன்.

"சாரி சஞ்ஜு...... ஓவர் டைம் பாக்காம இருக்க முடியாது. சனிக்கிழமையும் வேலை பாத்தே ஆகனும். ஆசைப்பட்டு வாங்குன வீடு, கார்....இதுக்கெல்லாம் லோன் திருப்பி கட்டனுமே........"

"நானும் வேலைக்கு போனா, உனக்கு அவ்வளவு கஷ்டம் இருக்காதுல...." சஞ்ஜனாவின் கைவிரல்கள் அவன் கன்னங்களை தடவின.

"போக கூடாதுன்னு இல்லமா.... உனக்கு ஏன் வீணா stress, office pressure? அதுக்கு தான்... but உனக்கு இஷ்டம்னா போ...but if you feel stressed about work, please do tell me... எந்த காரணத்துக்கும் நீ கஷ்டப்பட கூடாது. உங்க அப்பாகிட்ட நான் promise பண்ணியிருக்கேனே." புன்னகையித்தான் அஜிஷ்.

"thank you, அஜிஷ்!! you're extremely sweeeeeeeet!" அவன் உதடுகளில் 'இச்' வைத்தாள் சஞ்ஜனா.

"என் ஆபிஸ்ல வேணும்னா வேலை கேட்டு பாக்கவா?"

"இல்லடா. நம்ம வித்யா ஆபிஸ்ல ஒரு போஸ்ட் இருக்குனு சொல்லியிருக்கா, அங்க try பண்ணி பாக்குறேன்."

"ஓ that's nice.... சரி மா எனக்கு ரொம்ப பசிக்குது. என்ன breakfast இன்னிக்கு?" அஜிஷ் தனது துணிகளை எடுக்கு முற்பட்டபோது சஞ்ஜனா அவற்றை தூக்கி தூரம் எறிந்தாள்.

"சஞ்ஜு!!!!! stop playing. எனக்கு வேலை இருக்குடா. ரிப்போர்ட் அனுப்பனும்."

"hello mr ajeesh, இப்ப தானே சொன்னேன். i don't care. you're only mine today!" சஞ்ஜனா அவனை அணைத்து கொண்டாள்.

"இல்ல சஞ்ஜு... just ஒரு 30 minutes." அவன் கெஞ்சினான் அவளது தாடையை பிடித்து.

"no!"

"ஒரு 20 minutes..."

"no!"

"ஒரு 10 minutes"

சஞ்ஜனா, "இன்னிக்கு என்ன day?"

அஜிஷ், "sunday!"

சஞ்ஜனா, "sunday means family day. so you should spend every second of the day with me."

அஜிஷ், "சரி மா, atleast breakfast சாப்பிடுவோம்."

"உனக்கு இது போதும்." என்று சஞ்ஜனா அவனது விரல்களை அவளது உதடுகள் மீது வைத்தாள்.

சிரித்தான் அஜிஷ்.

"அப்பரம் உனக்கு பசிக்கலையா?" அஜிஷ் கேட்டான்.

"எனக்கு இந்த kitkat chocolate போதும்." என்று சஞ்ஜனா அவனது 6-pack வயிற்றில் கைவைத்தாள்.

இருவரும் சிரித்தனர்.

*******

மணி 12 ஆனது.

அஜிஷ் கோழி துண்டுகளை கழுவி கொண்டிருந்தான். சஞ்ஜனா தக்காளியை நறுக்கி கொண்டிருந்தாள். வானொலியில் எந்திரன் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

"காதல் அணுக்கள்...."

"பாட்டு... செம்ம பாட்டுல. AR rahman is simply superb man." என்று தக்காளியை நறுக்கி கொண்டிருப்பதை தொடர்ந்தாள். அஜிஷ் எந்த பதிலும் சொல்லவில்லை.

"என்ன அஜிஷ்..........." என்று திரும்பி பார்த்தாள். அவன் அவளையே கவனித்து கொண்டிருந்தான்.

"what?" என்று கண்களாலே கேட்டாள் சஞ்ஜனா.

"ரொம்ப அழகா இருக்கே!" அவன் கூறினான்.

புன்னகையித்தபடி அவள், "you're crazy.... quick. get the chicken pieces here quick."

அஜிஷ் அவளை சுவர் ஓரமாய் இழுத்தான்.

"ஹேய் அஜிஷ்....என்ன பண்ணுற? look, don't play.... டைம் ஆச்சு டா!"

"இன்னிக்கு என்ன day?" அவன் கேட்டான்.

"எனக்கே வா?" என்பதுபோல் உதடுகளை சுழித்தாள்.

"சொல்லு" விடவில்லை அஜிஷ்.

"sunday" என்றவள் அவன் பிடியிலிருந்து விலக முற்பட்டாள்.

"sunday means....?" என்று வினாவினான் அஜிஷ்.

"family day." என்று முடித்தாள் சஞ்ஜனா.

"no. familyய உருவாக்குற day!" என்றபடி அவளை தூக்கினாள் சோபாவிற்கு.

20 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

romaantic...!

லேபிள் எங்க தாயி?

தொடரா? இல்லையா

மரியாதையா தொடருங்க..

FunScribbler said...

@vasanth: hahaha. சிறுகதைனு லேபிள் போட்டாச்சு!

தொடர் இல்ல!!

vinu said...

madam ore romanic mood pola enjoy kallakkunga kallukkunga

Kumaresh said...

அருமையான காதல் கதை. படிக்கும்போதே பல இடங்களில் எனது மனைவியின் நினைப்பு வந்துவிட்டது மறுக்க முடியாத உண்மை.

Anonymous said...

!!! etho oru full length moviela oru scene mattum paatha mathiri iruku!! michamelaam enganga?

Natarajan Venkatasubramanian said...

நன்றாக எழுதுகிறீர்கள்!

இது எதோ இதிகாச கதை போல் உள்ளது. எனக்கு தெரிந்த ஒரு தம்பதி கூட இப்படி பேசிக்கொள்வதில்லை. எங்கும் எதற்கும் சண்டை போடா தயாராய் இருக்கிறார்கள். :-)

viccy said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் கதை எழுதி இருக்கீங்க... கதை சூப்பர்.. தொடருங்க....

ரசிகன் said...

//அவன் உதடுகளில் 'இச்' வைத்தாள் சஞ்ஜனா.//

சென்சார் போர்ட் எங்கேப்பா....?

ரசிகன் said...

தமிழும் முழுசா இல்லாம. இங்கிலிபிசும் முழுசா இல்லாம ,ஒரு ஆங்கில குடும்பத்து கதையை தமிழ்ல எழுத முயர்சி செய்த நம்ம தமிழ பாராட்டுவோம்:))

ரசிகன் said...

//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//

தினுசு தினுசா மிரட்டராய்ங்களேப்பா....

எஸ்.கே said...

நல்லாருக்கு!

vijayroks said...

Hi ,

Ungaloda blog post ellam padichen.Ella postum fantastic a irundhadhu.Ovvoru kadhaiyum romba touchinga irundhadhu...Ungaloda kadhaiya padikkarappo ungaloda self confident velila theriyudhu...Ella stories layum characterisation was fantastic.Oru professional and experienced story writer mattum thaan ipdi ezhudha mudiyum. Unga kadhai la endha ponnayum kozhaiya/bayantha maadhiri kaamikkaradhe illa..Thts really great.I appreciate this.This shows that you are straight forward girl. Indha maadiri character ullavangala enakku rombave pidikkum. Sollapona naan unga fan aagitten!!!!...All the best ..Keep writing and keep on writing...I m waiting for your next post...and also I m in a campaign to finish reading all ur 300 posts...:)

vijayroks said...

Hi one more thing solla marandutten,
neenga cricket vilayaduveenga nu ungo post la padichen...I love cricket...All the best again coz.girls mostl cricket la interest irukaadhu..interest varradu cricketers a site adikka thaan but cricket vilayadaradhu very few....and u r 1.....good to see that......

vijayroks said...

Neraya love sories a ezhudareenga but aanjaneya bakthai nu sollikareengala eppudi??????

but all romantic stories are good...
that agni story was also very nice.and that story abt four girls(sequel) was very very nice.....I think u will be like Kala in that story right!!!

FunScribbler said...

@vijayroks: thank u so much for ur encouragement! u made my day:)

vijayroks said...

Hey its my pleasure.....unmaiya solradukku ennikume koocha pad akoodathu.....

ok next post eppo??? andha sequel next season eppo? eagerly waiting

MS said...

so moral of the story "sunday na rendu" :)

நட்புடன் ஜமால் said...

நல்ல அணுக்கள் தான் :)

priyamudanprabu said...

NICE SUNDAY...............( FOR COUPLE)

priyamudanprabu said...

ரசிகன் said...
//அவன் உதடுகளில் 'இச்' வைத்தாள் சஞ்ஜனா.//

சென்சார் போர்ட் எங்கேப்பா....?
/////////

அதானே .... சின்ன பசங்க வந்து போற இடத்துல .....