Nov 22, 2010

GUZAARISH- எல்லாருக்கும் பிடிக்காது

சஞ்சய் படம் என்றாலே கொஞ்சம் சர்ச்சை இருக்கும். நிறைய தில் வேணும் சில காட்சிகளை எடுக்க. சென்சார் போர்ட் ஆட்களை சமாளிக்க வேணும். ஏன் நான் அப்படி சொல்றேனா.... இந்த படத்தில் அப்படி ரெண்டு மூனு காட்சி வருது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்க.

கதை- euthanasia பற்றி. வாழ்க்கையை தானே முடித்துகொள்வது என்று அர்த்தம். தற்கொலை என்று அதை என்னொரு விதமாகவும் சொல்லலாம். ஆனால், இது சட்டரீதியாக அனுபதி கேட்பது. நிறைய 'நச்' வசனங்கள் இப்படத்தில்.

மொத்த படத்திற்கு பலம் ஹ்ர்த்திக் ரோஷனின் நடிப்பு- யோவ், இத்தன நாளா எங்கய்யா ஒலிச்சு வச்சு இருந்த இந்த மாதிரி நடிப்ப???

பிரமாதம்!!!! பல இடங்களில் என்னை அறியாமலேயே சத்தமாக கைதட்டினேன்.
கண்டிப்பா அடுத்த வருஷம், விருது உண்டு உமக்கு!

படம்- எல்லாருக்கும் பிடிக்காது! கொஞ்சம் art film மாதிரி இருக்கும். இரண்டாம் பாதி முதல் பாதியைவிட மெதுவாய் செல்கிறது.

இருப்பினும், நல்ல நடிப்பிற்கும் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்திற்கும் இப்படத்தை பார்க்கலாம். நிச்சயமாக பார்க்கலாம்:)

5 comments:

விக்னேஷ்வரி said...

பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்ல சேர்த்துக்கறேன் காயத்ரி.

ஹ்ரித்திக் நல்ல நடிகர் தானேங்க.

Hariharan said...

மிக அருமையான படம், நிச்சயம் நிறைய விருதுகள் இந்த படத்திற்கு உண்டு ... Hrithik க்கு விருது கண்டிப்பாக உண்டு , மிக பிரமாதமான , உணர்ச்சியுடன் கூடிய நடிப்பு ....

ஆமினா said...

நல்ல கதை!

ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஆஹோ ஓஹோ கதை. ரித்திக்கு கண்டிப்பாக இது புதிய திருப்பத்தை உண்டாக்கும்.

குமரன் said...

3 மணி நேரம் படம் பொறுமையா பார்த்துட்டு, 2 பத்தியில விமர்சனம் எழுதினா..ஓட்டெல்லாம் போடமுடியாது. கொஞ்சமாச்சும், பொறுமையா எழுதினா தான் ஓட்டு.

Karthik said...

I didn't like the movie much sis. But yeah Hrithik was awesome. :-)