Mar 17, 2011

I hate you!

Friday 1am.

"நெப்போலியன் ஒரு மாவீரன். ஆனா, 'அத' அடிச்சா போதை தலைக்கு ஏறிவிடும். காலையில் எழுந்திருக்க முடியாம செய்துவிடும்." தன் நண்பர்கள் உளறுவதை கேட்டான் ராகுல்.

Friday 745am.

தலை வெடித்துவிடுவது போல் இருந்தது. குடித்து பல வருடங்கள் ஆனதால், 'touch' விட்டுபோச்சு! எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் புரண்டான் ராகுல்.

அவசர அவசரமாய் ஆபிஸுக்கு கிளம்பினாள் ராஜி. ராகுல் பார்ட்டிக்கு சென்றுவிட்டு இரவு....அதிகாலை இரண்டு மணிக்கு தான் வந்தான். ராஜிக்கு கோபம். படு கோபம்!

"ஐ எம் சாரி." அவளின் முகத்தை பார்க்க மனமில்லாமல் ராகுல். ராஜி பதில் பேசவில்லை.

"where is this white dupatta? வச்ச இடத்துல இருக்க மாட்டேங்குது." தேடலை தொடர்ந்தாள் ராஜி. அவளின் கோபம் உச்சத்தில் இருப்பதை அறிந்து கொண்டான் ராகுல். எதுவும் பேசாமல் அவள் தேடி கொண்டிருந்த துப்பட்டாவை எடுத்து கொடுத்தான்.

"ஐ எம் really சாரி, ராஜி." தலையை தேய்த்து கொண்டே கூறினான்.

documentsகளையும் fileகளையும் தன் லெப்டாப் பையில் வைத்தாள் ராஜி. chargeலில் இருந்த தனது கைபேசியை handbagல் போட்டாள். மேசையில் இருந்த cereal packetயை அவிழ்த்து ஒரு கிண்ணத்தில் கொட்டினாள். microwave ovenல் சுட வைத்த பாலை கலந்தாள் கிண்ணத்தில். ராகுலின் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. பூனைபோல் பாவமாய் நின்றான் கதவு அருகில்.

"என் தப்பு தான்...." என்றபடி ராஜியின் அருகில் உட்கார்ந்தான் ராகுல்.

cereals சாப்பிட்டபடி, "இல்ல ராகுல், எல்லாம் என் தப்பு."

முழித்தான் ராகுல்.

"உன்னைய லவ் பண்ணேன்ல அது என் தப்பு. கல்யாணத்துக்கு அப்பரம் நீ தண்ணி அடிக்க மாட்டேன் என்கிட்ட promise பண்ணினத நம்புனேன்ல அதுவும் என் தப்பு. it's ok ராகுல்.... நீ தண்ணி அடி. தம் அடி....என்ன வேணும் ஆனாலும் செய். just leave me alone." ராஜியின் சினம் வெளிப்பட்டது.

"அப்படி இல்ல ராஜி...." அவளது கையை தொட்டான்.

வெடுக்கென்று கையை எடுத்தாள் ராஜி.

"உனக்காக எவ்வளவு நேரம் wait பண்ணேன் தெரியுமா? நீ friends கூட வெளியே போக வேண்டாம்னு சொல்லல. atleast எத்தன மணிக்கு வருவேன்னு சொன்னா... i could have slept peacefully right? நைட் 2 மணி ஆகியும் வரலைன்னா, நான் என்னென்னு நினைக்குறது?" பட பட படவென்று கொட்டி தீர்த்தாள்.

அவள் பக்கம் உள்ள நியாயமும் ராகுலுக்கு புரிந்தது.

"phoneல battery இல்ல." ராகுல் பாவமாய்.

"all guys say this same DAMN excuse!" கிண்ணத்தை சமையலறையில் வைப்பதற்காக சென்றாள். பின்னாடியே நாய்குட்டி போல் தொடர்ந்தான் ராகுல்.

"உன் ஃபோன்ல charge போச்சு சரி. உன் friends ஃபோன்ன கேட்டு ஒரு sms பண்ணியிருக்கலாமே?" கேள்வியால் மடுக்கினாள் ராஜி.

ராகுல், "அது இல்ல....எல்லாருமே கொஞ்சம் பிஸியா..."

"தண்ணி அடிச்சுகிட்டு இருந்தீங்க! " வாக்கியத்தை முடித்தாள் ராஜி.

"தண்ணி அடிச்சுகிட்டு இருந்தோம்னு localலா பேசாத. சும்மா ஒரு ஜாலிக்காக..." இழுத்தான் ராகுல்.

"then why the HELL did you promise me that you won't drink after marriage?" கையில் இருந்த செய்தித்தாளை சோபாவில் கோபத்தில் எறிந்தாள்.

தொடர்ந்தாள், " ok fine. friends மீட் பண்ணியிருந்த. everyone compelled you to drink. fine! then why did you have to lie to me that you didn't drink? am I that stupid to believe all your nonsensical ridiculous excuses? என்கிட்ட நீ பொய் சொன்னேலஅது தான்.... i can't and I won't forgive you for that!" சரமாரியாய் சாடினாள் ராஜி.

friday 815am.

"why I am wasting time on people who don't love me as much I love them?" சத்தமாய் முணுமுணுத்தாள், ராகுலுக்கு கேட்கும்படி. ஆபிஸுக்கு கிளம்பினாள்.

அவள் காரில் செல்வதை பார்த்தான் வீட்டின் ஜன்னல் வழி. படுக்கையில் விழந்தான் மறுபடியும். ஆபிஸுக்கு போக மனமில்லை. ராஜியின் கோபம் அவனை ஏதோ செய்தது. இனி எந்த தண்ணி பார்ட்டிகளுக்கும் போக கூடாதுன்னு முடிவு செய்தான். ஆயிரம் யோசனைகள் அவனுக்குள் ஓட, கைபேசி sms alert செய்தது.

From: ராஜி செல்லம்

body ache painkillers and panadol tablets are on the table. please do take them. I still love you, idiot!:))))))) hugssssss. I am sorry.

8 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice.,

gils said...

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv...............................nachu ending :)

sulthanonline said...

அந்த பினிசிங் sms சூப்பர்பா

Pranavam Ravikumar said...

Great!

விக்னேஷ்வரி said...

இந்தப் பொண்ணுங்களே இப்படித் தாம்ப்பா. சரியான சொதப்பல்ஸ்..

அப்படியே தமிழ்ல கதை எழுத முயற்சிக்கலாமே சிஸ்...

FunScribbler said...

@விக்கி அக்கா: ஹாஹா!

//இந்தப் பொண்ணுங்களே இப்படித் தாம்ப்பா. சரியான சொதப்பல்ஸ்..//

ஆமா அக்கா! இந்த பொண்ணுங்களே இப்படி தான்:)

//அப்படியே தமிழ்ல கதை எழுத முயற்சிக்கலாமே சிஸ்...//

சரியா சொன்னீங்க! ஆங்கிலம் சொல்லி கொடுப்பதாலோ என்னவோ அதிகமாய் ஆங்கிலம் வருகிறது எழுதுகையில். அப்பரம்... இந்த இங்கீலீஷ்ல எழுதினால் தான் ஸ்டைலா இருக்கும்னு வேற இந்த பாழாபோன மனசு சொல்லுது! (கவுதம் மேனன்னு நினைப்பு இந்த மனசுக்கு!:)))

viccy said...

ஆஹா இவ்ளோ சீக்கரமாவா பொண்ணுங்க சமாதானமாவாங்க.... anyways நல்ல ரொமான்ஸ் கதை...

எவனோ ஒருவன் said...

Short and Cute :-)