director: "ATM productions வழங்கும் ஆத்தா, பயணம்" இது தான் சார் ஓபனிங்.
producer: யோவ்! கதைய முதல சொல்லுய்யா!
director: சார், இது ஒரு கிராமத்த கதை சார்! ஒரு பெரிய....
producer: wait wait...உன் பேர் என்ன சொன்ன?
director: பாரதி கௌதம்.
producer: ஹாஹாஹா...என்னய்யா பேரு இது?
dir: பாரதிராஜா மாதிரி கிராமத்த படத்த கௌதம் மேனன் மாதிரி ரொம்ப ஸ்டைலீஷா எடுக்கனும்னு ஆசை. அதான்...இந்த பேர வச்சுகிட்டேன்!
prod: சரி கதைய சொல்லு!
dir: சார் ஓபினிங் சீன்....ஒரு பெரிய மாட்டுவண்டி, யாருமில்லாத railway station வெளியே நிக்குது. தண்டவாளத்த long shotல காட்டுறோம். அங்க இருக்கற clockஎ close upல காட்டுறோம். பயங்கரமா காத்து அடிக்குது சார்! மரத்துலேந்து இலை எல்லாம் கீழே விழுது சார்.
prod: எனக்கு தூக்கம் வரதுய்யா! catchingங்கா ஒன்னு இல்லையா!??
dir: சார், அதுக்கு தான் சார் வரேன். எப்போதுமே lateஏ வர train அன்னிக்கு மட்டும் சீக்கிரம் வந்துடுச்சு சார்.
prod: இது ரொம்ப புதுசா இருக்கே...வெரி குட்...மேல சொல்லு.
dir: எல்லாரும் நினைப்பாங்க. நேரம் சரியா இருக்குனு. ஆனா, எல்லாருக்கும் அது bad time!- அப்படின்னு பின்னாடி narration voice போடுவோம் சார். அந்த trainலேந்து ஒரு வயசான பாட்டி கண்ணு ஆபிரேஷன் முடிஞ்சு வறாங்க. கூடவே அவங்க பேத்தியும் இருக்கா.
prod: தமன்னா callsheet என்கிட்ட இருக்கு. அவங்கள இந்த ரோல போட்டுடுவோம்.
dir: இல்ல சார். பாட்டியும் பேத்தியும் ஒரு ஆளு தான் சார் பண்ணனும். double action sir.
prod: தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்.... நீ கதைய மேல சொல்லு.
dir: கண்ணாடி போட்ட ஒரு mechanic அதே ரயில வந்து இருங்குறாரு.
prod: அது என்னய்யா கண்ணாடி போட்ட மெக்கானிக்?
dir: பாரதிராஜா படத்துல கண்ணாடி போட்ட ஹீரோ வர மாதிரி நம்ம படத்துலயும் ஹீரோ கண்ணாடி போடுறாரு சார்...
prod: characters மட்டுமே சொல்லிகிட்டு இருக்க...கதைக்கு போய்யா! கதை இருக்கா இல்லையா?
dir: சார் வரேன் சார். இன்னும் நிறைய characters இருக்கு. ஒரு சின்ன பொண்ணு, 16 வயசு பொண்ணு சினிமால நடிக்கனும்னு ஆசைப்பட்டு ஓடி வறா அதே ரயில.
prod: கிராமத்துக்கு ஏய்யா வறா?
dir: ரயில் மாறி ஏறிட்டா சார்! (கண் கலங்குகிறார்)
prod: அப்பரம் என்ன ஆகுது? அந்த 16 வயசு பொண்ணா யார போடலாம்?
dir: நமீதா.
prod: நமீதாவா? நீ சொல்ற கதையவிட இது இன்னும் shockingஆ இருக்கே!
dir: கவலைப்படாதீங்க சார். ரெண்டே மாசம் 35 கிலோ குறைப்பாங்க. 16 வயசா மாறுவாங்க! நான் guarantee சார் அதுக்கு!
prod: சரி கதையில அப்பரம் என்ன ஆகுது.....
dir: புதுசா கல்யாணம் ஆனா ஜோடி, அமெரிக்கா return ஒரு பையன் - இத்தன பேரும் அந்த stationல நிக்குறாங்க. shot freeze!
எழுத்து-இயக்கம்: உங்கள் பாரதி கௌதம்
அப்படினு போடுறோம் சார்!
prod: title credits எல்லாம் editor பாத்து பாரு. அந்த மாட்டுவண்டி எதுக்கு வெளியே நிக்குது?
dir: பின்னிட்டீங்க சார்! ஒரு audienceஆ இந்த படத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க. i like it sir. அந்த மாட்டுவண்டில தான் இவங்க எல்லாருமே கிராமத்துக்குள்ள போறாங்க. அந்த மாட்டுவண்டிய ஓட்டுறது அந்த கிராமத்துக்கே தெய்வம் மாதிரி.
prod: ஆமா அந்த ரோலுக்கு யார....
dir: சார் என் friend நவீன்குமார் பண்ணனும் சார். 'அந்த பக்கம் போகாதீங்க இந்த பக்கம் வாங்க' அப்படினு ஒரு ஹிட் படம் எடுத்தாரே அவரு சார்.
prod: ஓ ஆமா ஆமா!
dir: இந்த powerful role அவர் தான் பண்ணனும். என் படத்துல அவர் கண்டிப்பா நடிச்சே ஆகனும்.
prod: அவர் எடுத்த முந்தைய படத்துல கூட நீ நடிச்ச தானே?
dir: ஆமா சார். இப்படி மாத்தி மாத்தி நடிச்சு கொடுக்குறது தானே சார் இப்ப trend!
prod: (தலையில் அடித்து கொண்டார்) அப்பரம் அந்த மாட்டுவண்டிக்கு என்ன ஆகுது?
dir: திடீரென்னு மழை பெய்யுது. வண்டி வழில breakdown ஆவுது?
prod: மாட்டுவண்டி breakdownஆ? டேய் லாஜிக்கே இல்லையடா இதுல!??
dir: சார், வண்டில problem சார். அத சரி பண்ண மெக்கேனிக் கீழே இறங்கி வேலை பாக்குறாரு. அந்த வேலை பாக்குற ஸ்டைல பாத்து தமன்னாவுக்கு காதல் வரது?
prod: பாட்டி தமன்னாவுக்கா? பேத்தி தமன்னாவுக்கா?
dir: சார், பேத்திக்கு தான் சார் காதல் வரது!
prod: இப்படிலாம்கூட காதல் வருமா?
dir: சார் இது ஒரு வித்தியாசமான காதல் சார்! தமிழ் சினிமாவுல இப்படி ஒரு காதல் காட்சிய audience பாத்து இருக்க மாட்டாங்க!
prod: சரி சொல்லு....
dir: இங்க ஒரு பஞ் டயலாக் சார்! மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, "தம்பி, ஏன் உருட்டுறீங்க?"
அதுக்கு மெக்கேனிக் பஞ் டயலாக் சொல்றாரு,
"உருட்டுறதுல நான் பூனை மாதிரி.
மிரட்டுறதுல நான் யானை மாதிரி."
அப்படியே மெக்கேனிக் கண்கள close upல காட்டுறோம். கண்ணு சிவந்து போகுது சார்.
prod: யோ, பாட்டி சொன்னதுக்கு எதுக்கு டா பஞ் டயலாக்?
dir: சார், audience விரும்புவான் சார். நீங்க பாருங்க? இது தான் 2011 வருஷத்துல ஹிட் பஞ் டயலாக்கா வர போகுது. இந்த ஒரு பஞ் தான் படத்த 100 நாள் ஓட வைக்க போகுது.
prod: (producer தன் கோபத்தை அடக்கி கொள்கிறார்)
dir: repair பண்ணி முடிச்ச பிறகு வண்டி கிளம்புது.... போற வழில மின்னல், இடி, மழை... ஒரே இருட்டு! நாலு பேரு காட்டுக்குள்ளேந்து வராங்க. முஞ்சிய மூடி இருக்காங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது. கையில எல்லாருமே gun வச்சு இருக்காங்க. வண்டில இருக்குற எல்லாரையும் close upல காட்டுறோம். அப்படியே அடுத்த ஷாட்.... முஞ்சிய மூடி இருக்குற நாலு பேருல ஒருத்தர் மட்டும் name tag போட்டு இருக்காரு.... name tagஎ close upல காட்டுறோம்.
"அக்ரம் கான் - son of wasim khan"
இங்க தான் interval block!
எப்படி சார் கதை?
prod: எந்த தீவிரவாதிய்யா name tag போட்டு இருப்பான்?
dir: சார், நம்ம ஒரு வித்தியசாமன படம் எடுக்கறதயே நீங்க அப்பெப்ப மறந்துடுறீங்க!!
prod: சரி 2nd halfல கதை?
dir: இந்த கிராமத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம்? the mystery unfolds.......
prod: ஆமா? அப்பவே கேட்கனும்னு இருந்தேன். அந்த மெக்கேனிக் ரோலுக்கு.... யார போடலாம்னு...
dir: கார்த்தி தான் இதுக்கு சரியான மேச்.
prod: யோவ்... அவருக்கும் தமன்னாவுக்கும் ஏதோ கிசுகிசு....
dir: இருக்கட்டும் சார். நம்ம படத்துக்கு அப்பரம் அவங்க ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு தான் சார் பெருமை.
prod: யோ, அப்படிலாம் ஒன்னும் நடக்ககூடாதுய்யா! இன்னும் ரெண்டு படத்துக்கு தமன்னா கால்ஷீட் வாங்கி வச்சுருக்கேன்ய்யா!
dir: சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict! 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்!
prod: என்னய்யா நீ வேற......? சரி இந்த படத்துக்கு location எங்க?
dir: america. chicago பக்கத்துல இருக்குற ஒரு கிராமம்.
prod: என்னது? அமெரிக்காவா? யோ.... இந்த கதைக்கு எதுக்கு டா அமெரிக்கா.
dir: சார், போன படத்துல எச்சி துப்புற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சியவே நாங்க switzerlandல தான் shoot பண்ணுனோம்.
prod: (கையில் வைத்திருந்த பேப்பரை மேசையில் வீசினார்.) நான் கொலவெறியா போறதுக்குள்ள ஓடி போயிடு! நீ எல்லாம் ஒரு director??? உன்கிட்ட கதை கேட்டேன் பாரு...என்னைய.....
dir: சார் சார்.... கோபம் படாதீங்க சார்! என் குருநாதரின் 'நடுநிசி நாய்கள்' படம்
மாறி 'பரதேசி பன்னிகள்' அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்.... அந்த கதைய கேக்குறீங்களா சார்?
producer: எடு அந்த வெளக்கமாத்த!!!!!!!
7 comments:
nice one... i really liked it.. that too "தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்" ;-))) ultimate...
rotfl :D:D:D:D mango in full form :D:D paaradesi pannigal :D:D:D:D
:) :)
பரதேசி பன்னிகள்' அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்....
intha kathaya adutha postla podavum please!!!!!
//சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict! 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்!//
ha.....ha.....ha....!
Hello madam,
எனக்கொரு டவுட். உங்க வேலையை யாராவது அப்பாவி தலையில கட்டிட்டீங்களா? டெய்லி பதிவு போடறீங்க. இது நீங்க தானே காயூ. ரொம்ப நாளைக்கப்புறம் செம ஜாலியான பதிவு.
Hahha...... படிக்க படிக்க 1000 வாலா பட்டாசு........கலக்குங்க......
சேட்டை பண்ணியிருக்கீங்க பாஸ்...
ரசிச்சுப் படிச்சேன்... நல்லாவே சிரிச்சேன்....
வாழ்த்துக்கள் நண்பா... :-)
Post a Comment