May 12, 2011

'தமிழ்' இன்னிக்கு ராத்திரி செத்து போயிடும்!

என்ன தான் தமிழ் தமிழ் என்று உயிரை கொடுத்து கத்தினாலும் சிலர் அதை கொலை செய்தே தீர்வேன் என்று இருக்கான். கோ படத்தில் வரும் 'அக நக' பாடலில் உள்ள rap வரியை பாருங்க

விண்ணிலும் மண்ணிலும் உள்ள
நட்சத்திரங்களோடு ஒன்னா
சேர்ந்து இணைந்து பினைந்து
பிச்சி பின்னி பேத்து எடுக்கலாம்!

என்னது பேத்து எடுக்கலாமா??? இதை கேட்டு பிறகு அழுவதா சிரிப்பதானு கூட தெரியல. தமிழை தமிழாக பயன்படுத்துங்கய்யா! அதுக்குனு சுத்த தமிழ்ல பாடல்கள எழுதனும் சொல்லவில்லை.... atleast சொத்தப்பாம எழுதலாம்ல! தமிழ்ல ஆங்கிலத்தை கலக்க வேண்டாம் என்று பலர் போர் கொடி தூக்கினாலும், எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆங்கிலத்தை கலந்து சொல்லுங்க ஆனா எந்தவிதத்திலுமே இரண்டுக்குமே பாதிப்பு வராத அளவு பாடல்களை எழுதுங்க!

ஏன் இரண்டையும் கலந்து சொல்லுங்கனு சொல்றேனா.... மசாலா தோசைய அப்படியே சாப்பிடுவதற்கும், கூட சாம்பார், சட்னி, பொடி வச்சு சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்குல! அதே வித்தியாசம் நாம் பேசும் மொழியில் இருந்தால் தப்பு இல்லையே! இந்த இரண்டு மொழியையும் அழகாக கலந்துவர் ஒருவர் என்றால் அது கௌதம் மேனன் எனலாம்!

அந்த மாதிரி அழகான வெளிபாடு இருந்தால் இரண்டையும் கலப்பதில் தப்பு இல்ல! ஆனா, இந்த பேத்து எடுக்குறேன்! சேர்த்து பின்னுறேன் அப்படினு மொக்கையா பாட்டு எழுதினா தமிழ் மெல்ல செத்துவிடும்!

சரி இது ஒரு வகையில போக, நம்ம little superstar ஆக இருந்த சிம்பு இப்ப promotion பெற்று young superstar ஆக மாரி, அவர் எழுதிய புத்தம் புது பாடலை கேளுங்க....
ஸ்ருதி, பல்லவி... அப்பரம் அவங்க அக்கா தங்கச்சினு இப்படி ஒரு பாட்டுக்கு தேவையான எதுவுமே இல்லாமல் வந்த பாடல்தான் 'லவ் பண்ணலாமா வேண்டாமா!'

சிம்புவுக்கு மட்டும் தான் பாடல் எழுத தெரியுமா! நானும் எழுதியிருக்கேன்.

"சிம்பு பாட்டு கேட்கலாமா வேணாமா?
கேட்டா என்ன ஆகும்?
பொறந்த குழந்தை திரும்பி
...அவங்க அம்மா வயத்துக்குள்ள போயிடுமே!
கேட்கலாமா? வேணாமா?
வேணாமா கேட்கலாமா?
பாட்டு கேட்கலாமா?வேணாமா? வேணாமா? கேட்கலாமா"

எப்படி??

அது சரி, இப்படிலாம் பாட்டு வந்தா தமிழ் மெல்ல சாகாது! இன்னிக்கு ராத்திரியே செத்து போயிடும்:))))))))

(நேயர் விருப்பம்: கோ படத்தில் வரும் என்னமோ ஏதோ பாடலில் வரும் 'குவ்வியமில்லா ஒரு காட்சி பேழை' என்று வருகிறதே, குவ்வியமில்லா என்றால் என்ன? யாரேனும் சொல்லுங்களேன். பேழை என்றால்?)

10 comments:

ANaND said...

ஹாய் .... நான் தான் பர்ஸ்ட் துண்டு போட்டேன் ...

சிம்பு பாட்ட கேட்டா தமிழ் ராத்திரி வரைக்கும் வெயிட் பண்ணாது னு நெனைக்கிறேன் ..

பேழைனா பெட்டி னு தெரியும் ..

குவியமில்லா காட்சிபேழை னா லென்ஸ் இல்லாத கமெரா னு ஹீரோயின் ந சொல்லுராங்கிலோ ...

என்னமோ போங்க சுத்த தமிழ்ல பாட்டு எழுதுனா இப்படி தான்

Thamizhmaangani said...

//என்னமோ போங்க சுத்த தமிழ்ல பாட்டு எழுதுனா இப்படி தான்//

உண்மை தான் ஆனந்த்.:))))

annamalai said...

Kuviyammilla yendral, focus illaatha... Camera.la oru photo focus illai.na blurred.a irukum.la antha maathiri.. Don't knw abt Pezhai..

annamalai said...

Kuviyammilla yendral, focus illaatha... Camera.la oru photo focus illai.na blurred.a irukum.la antha maathiri.. Don't knw abt Pezhai..

Karthik said...

சிஸ், என்ன இது அபச்சாரமா ஒரு தலைப்பு! "என்னமோ ஏதோ"ன்னு ஓடி வரேன். ;)

Karthik said...

சிஸ், என்ன இது அபச்சாரமா ஒரு தலைப்பு! "என்னமோ ஏதோ"ன்னு ஓடி வரேன். ;)

Srivats said...

Tamil english kalandhu pesradha pathina unga karuthu supero super :)

Nalla post, enakku kandippa andha varthaikku artham theriyaadhu saami :)

Srivats said...

kandupidichitten

Adhu photo camera, kuviyama erukum kuvviyama erukkadhunnu nenaikaren

kuviyam - lense

Sathish said...

NANBAA....vidyaasamaana blog ungaludaiyathu...

Praveen Kumar said...

பேழை means Gallery... காட்சி பேழை... A collage or photo gallery without focus.

பேழை has another meaning as box. So focus less camera...