கோ படம் நேத்துக்கு பார்த்தேன். என்னோட expectations ரொம்ப அதிகமா போயிட்டுனு நினைக்குறேன். facebookல எல்லாரும் படம் நல்லா இருக்குனு சொன்னதுனால நம்பி போனேன், பாதி படத்துல தூங்கிட்டேன்.
தேவர் மகன், முதல்வன், சிவாஜி ஆகிய படங்களில் வராத காட்சிகளை எடுத்து கோர்வையாய் போட்டு, norwayல 4 பாட்டுகள shoot பண்ணி வச்ச கலவை மாதிரி இருந்துச்சு. நடிப்பு பரவாயில்லை. ஆனா அந்த heroine...யப்பா!!!! புருவத்தை வளர்த்தாங்களா? இல்ல செஞ்சு ஒட்டுனாங்களானு தெரியல!!
heroine ரெண்டு பேருக்குமே டுப்பிங் நல்லாவே இல்ல.:(( சாரி, கே வி சார்!
இது அக்மார்க் கே வி சார் படம்னு தெரியுது, flashback என்ற பாணியில், ஒருவர் நடந்த கதையை narrate செய்வது தூக்கத்தை கிளப்பியது. அப்பரம், chemical, bombing... (ayan படத்திலும் இப்படி தான்) என்று பிடிக்காத chemistry பாடத்தை புரியாமல் பார்ப்பது போல் இருந்தது.
அயன் படத்துக்கு, 100க்கு 100 கொடுத்தேன். இப்படம்.....கோ....அச் ச்ச சோ!!!
(கொசுறு: மாப்பிள்ளை படம் பார்க்க போனேன். 3 மணி நேரம் மாப்பிள்ளை படம் பார்த்ததற்கு பதிலாய் எங்கயாச்சும் மாப்பிள்ளையாவது பார்த்து இருக்கலாம். ஹிஹிஹி.....)
8 comments:
தனுஷ் படம் எல்லாம் பாக்கற அப்பாவியா நீ(ங்க) காயூ? அவ்வ்வ்வ்வ்வ். சில பேர் படங்களை அல்ல, பல பேர் படங்களை தியேட்டரில் என்ன, திருட்டு வீசிடியில் கூட பாக்கறதில்லைன்னு சபதம் எடுத்து இருக்கேன். ஹி ஹி.
@காயூம்மா,
Auntie, பொண்ணுக்கு திருமண ஆசை வந்துடுச்சு போல. கொஞ்சம் கவனியுங்க. ஹி ஹி
//Auntie, பொண்ணுக்கு திருமண ஆசை வந்துடுச்சு போல. கொஞ்சம் கவனியுங்க. ஹி ஹி//
hahaha அனாமிகா, அந்த கொடுமையல்லாம் அவங்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு! நம்ம யாரு...எதுக்கும் அசைய மாட்டோம்ல!:)) (அது ஒரு பெரிய கதை..இன்னொரு போஸ்ட்ல விவரமா சொல்றேன்:))
ஹி ஹி. சாருக்கான் ஸ்டைல சொல்ல வேணும் என்றால், உலகத்தில இருக்கிற எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி தான் போல. ஹி ஹி.
/இன்னொரு போஸ்ட்ல விவரமா சொல்றேன்//
இப்படி சொல்லிட்டு காணாமல் போகாதேப்பா. சீக்கிரம் போட்டுடுங்க சரியா?
உங்க ரேஞ்சுக்கு மாப்பிள்ளை தேட எல்லாம் முடியாது. செய்யனும். அவ்வ்வ்வ்வ்வ்வ். (உயிரல ஆசை இருந்தா மீ த எஸ்கேப்னு சொல்லிட்டு ஓடிடு அனா. )
என்னோட மைன்ட்வொய்ஸ் தான். அப்பாவி தங்கமணி தெரியுமா? அவங்க வியாதிதான் இது. போய் படிச்சுப் பாருங்க.
மாப்பிள்ளை படம் பார்க்க போனேன். 3 மணி நேரம் மாப்பிள்ளை படம் பார்த்ததற்கு பதிலாய் எங்கயாச்சும் மாப்பிள்ளையாவது பார்த்து இருக்கலாம். //
ஐ லைக் திஸ் ஆட்டிட்யூட் காயத்ரி. :)
@அனாமிகா
//உலகத்தில இருக்கிற எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி தான் போல. //
உண்மையிலும் உண்மை!:)
//இப்படி சொல்லிட்டு காணாமல் போகாதேப்பா. சீக்கிரம் போட்டுடுங்க சரியா?//
எனக்கும் தினமும் ஒரு போஸ்ட் போடனும்னு தான் ஆசை! எங்க விடுது இந்த 'வேலை' என்னும் கொடுமை:))
//உங்க ரேஞ்சுக்கு மாப்பிள்ளை தேட எல்லாம் முடியாது. செய்யனும். //
ஹாஹாஹா...என்னங்க..அளவு ஜாக்கெட் கொடுத்து blouse தையிக்க சொல்ற மாதிரி இருக்கு:)
@விக்கி அக்கா
hello akka!!!!!!!!!!! எப்படி இருக்கீங்க:)
//ஐ லைக் திஸ் ஆட்டிட்யூட் காயத்ரி. :)//
:)))))
எங்கள் தலைவி பியா வை பற்றி ஒரு வரி கூட எழுதாத மாங்கனியை வன்மையாக கண்டிக்கிறேன் ....
Post a Comment