Jul 10, 2011
வெள்ளிக்கிழமை என்பது...
வேலைக்கு போன பிறகு தான் புரியது 'வெள்ளிக்கிழமை' மீது இருக்கும் காதல்! ஐயோ எப்ப டா வார இறுதி வரும்னு 'வைதேகி காத்திருந்தாள்' விஜய்காந்த் மாதிரி காத்து இருப்பேன். அதுவும் சரியா, என்னைய(மற்ற பலரையும்) வெறுப்பேத்தும் வகையில் வெள்ளிக்கிழை மதியம் மீட்டிங் வைப்பார் பாஸ்! மதியம் ஆரம்பித்து மூன்று மணி நேரம் கதிகலங்க பேசுவார் பேசுவார் பேசிகொண்டே இருப்பார்.
மீட்டிங் பேசப்படும் எந்த ஒரு விஷயம் எனக்கும் என் வாழ்க்கையிலும் எந்த ஒரு நன்மையையும் கொடுக்கபோவதில்லை. இருந்தாலும் உட்கார்ந்து கேட்கனும். சில நேரத்தில் கொடுமையாய் கொடூரமாய் இருக்கும். போன மீட்டிங் போது பேசியதை மறுபடியும் பேசுவதற்கு ஒரு மீட்டிங். 'போட்டு தள்ளிடலாம்'னு வரும்!! வெள்ளிக்கிழமை அன்று இப்படி அறுத்தால்?? உச்சி முதல் பாதம் வரை வலிக்கும்! மனசு ரெம்ம்ம்ம்ம்ம்ப வலிக்கும்
அப்பரம் மீட்டிங் முடிஞ்சு கேபினுக்குள் வந்து உட்கார்ந்து ஒரு பெருமூச்சு விடுவோம் பாருங்க, மேசையில் இருக்கும் பேப்பர் எல்லாம் பறக்கும்! எங்க மறுபடியும் கூப்பிடுவாரோனு பயந்து அவசர அவசரமாய் மடிகணினியை எடுத்து drawerவில் வைத்துவிட்டு, மேசையில் கிடக்கும் walletயையும் phoneயையும் எடுத்து பையில் போட்டுகொண்டு சீனியர் ஆபிசர் கண்ணில் படாமல் விறுவிறு என்று ஓடி போய் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்றால் வரும் சந்தோஷம் இருக்குதே- யப்பா!!!!!!!!!!! கோச்சிகிட்டு போன boyfriend (அல்லது உங்க girlfriend) கிட்ட வந்து நம்மள பார்த்து smile பண்ற மாதிரி இருக்கும்.
வெள்ளிக்கிழமையே, ஐ லவ் யூ!! வேலைக்கு போன பிறகு, உன் அருமை புரியுது!
(ஞாயிற்றுகிழமை இரவு என்பது பிடிக்காத மாமியர் வீட்டுக்கு வர மாதிரி!! மறுநாள் திங்கள் ஆச்சே!!!!!!:(((((((((((
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//போட்டு தள்ளிடலாம்//
ஆமா அப்புறம் ராசா கூட டேனிஸ் விளையாடலாம்
உங்களுக்கு வெள்ளிக்கிழமையேவா..
நான் சனிக்கிழமையைதான் லவ்விகிட்டு இருக்கேன்..
வெள்ளிக்கிழமைக்கு இன்னும் ரெண்டு நாள் தாங்க இருக்கு..என்சாய்..!!
//(ஞாயிற்றுகிழமை இரவு என்பது பிடிக்காத மாமியர் வீட்டுக்கு வர மாதிரி!! மறுநாள் திங்கள் ஆச்சே!!!!!!:
//
அருமையான கமெண்ட் அனுபவித்து சிரித்தேன்
ரங்கன்: yess friday in 2 days time! thank u!
rajan::)))
hahaha had a lovely laugh :)
Hi,This is my first visit here.Like ur writings.Keep blogging.
Same feeling here too :-) Short and Sweet :-)
ஒவ்வொரு வரியிலும் காமெடி கலக்கல் :-)
Post a Comment