சந்தியா தன் மேல் இன்னும் கோபமாக இருப்பாள் என்பதை அறிந்த ரூபன் தன் கைபேசியை எடுத்து அவளுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினான்.
ரூபன்: இன்னும் கோபமா? ஐ எம் சாரி, சந்தியா! நான் என்ன செய்ய? நான் தான் ரொம்ப short-temperனு உனக்கு தெரியுமே?
விறுவிறு என்று டைப் செய்து அனுப்பிவிட்டு, தனது கவனத்தை தன் மடிக்கணினி மேல் செலுத்தினான். அலுவலக வேலைகள் ஒரு புரம் இருக்க, அவனது நினைப்பு எல்லாம் சந்தியாவை சுற்றி தான் இருந்தது. சந்தியாவிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது, அவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. மறுபடியும் ஒரு குறுந்தகவலை அனுப்ப கைபேசியை எடுத்த போது, சந்தியாவிடமிருந்து குறுந்தகவல் வந்தது.
சந்தியா: யாரோ இன்னிக்கு ஆபிஸ் போகும்போது சொன்னாங்க, அவங்க மூஞ்சிலே முழிக்க வேண்டாம்னு.
ரூபன்: சாரி, சாரி, சாரி, சாரி!! என் தப்பு தான். நான் தான் கோபத்துல அப்படி உளறிகொட்டிடேன். ஐ எம் சாரி மா!
சந்தியா: அதே வார்த்தைய நான் சொல்லி இருந்தேனா, உன்னால தாங்கி இருக்க முடியுமா? உன்கிட்ட நிறைய தடவ சொல்லி இருக்கேன், please control your anger! அது உனக்கே தெரியும். you've hurt me alot, ruben!
ரூபன்: என்ன மா இப்படிலாம் சொல்ற? அது தான் சாரி சொல்லிட்டேன்ல. நீ சொன்ன மாதிரி நான் என்னைய மாத்திக்க முயற்சி பண்ணுறேன்! கொஞ்சம் டைம் கொடுத்து பாரேன்.
சந்தியா: ஏதாச்சு பண்ணு போ! என்கிட்ட மட்டும் இனி பேசவே பேசாத.
ரூபன்: சந்தியா, இப்படி சொன்னா எப்படி? என்னைய வேணும்னா நாலு கெட்ட வார்த்தைல திட்டிக்கோ, ஆனா உன்கிட்ட பேசாம இருக்ககூடாதுனு மட்டும் சொல்லாத!
சந்தியா: just don't talk to me!
ரூபன்: சரி, சரி, என்ன பண்ணா உன் கோபம் குறையும்? அப்படியே...இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா?
சந்தியா: shameless!!
ரூபன்: hahaha... அழகான மனைவிகிட்ட 'shame'வோட நடந்துக்குற husband எங்கயாச்சு இருக்காங்களா என்ன?
சந்தியா: நீ திருந்தவே மாட்டீயா? stop smsing!
ரூபன்: ஐயோ இன்னும் கோபமா? ஓ... ஒரே ஒரு உம்மா தான் தரேனு கோபமா? உனக்கு எவ்வளவு வேணும்னு சொல்லு, கொடுத்துடுறேன். but என்கிட்டு தீர்ந்து போனுச்சுன்னு, அப்பரம் நீ தான் தரனும். deal?
சந்தியா பதில் அனுப்பாமல் இருந்தாள். ரூபன் தொடர்ந்து தனது கணினி வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தான். மறுபடியும் குறுந்தகவல் அனுப்பினான்.
ரூபன்: darling, என்ன பதிலே காணும்? எத்தன வேணும்னு list போடுறீயா?....இல்ல எங்க வேணும்னு list போடுறீயா?
சந்தியா: you are crazy:))))))))))))))))))))))))
அவள் 'smiley icon'னுடன் குறுந்தகவல் அனுப்பியது அவனுக்கு நிம்மதியைத் தந்தது.
ரூபன்: ஐப்பா! finally!! கோபம் போச்சா??
சந்தியா: but please da, இனி கோபம் படாதே! உன் healthக்கு தான் பாதிப்பு வரும். ok??
ரூபன்: ம்ம்...புரியது. thanks, sweetheart:)) சரி, list எங்க?
சந்தியா: list ready:))))
ரூபன் தனது கைபேசியையும் மடிக்கணினியையும் ஹாலில் இருக்கும் சோபாவில் போட்டுவிட்டு, அறையில் இருக்கும் சந்தியாவை பார்க்க சென்றான்.
*முற்றும்*
14 comments:
சூப்பர்! :-)
தமிழ்மணம் ஒக்கே!
இன்ட்லில இணைக்கல?
இப்போ ஒக்கே! :-)
Simply Superb...... !!!!
சூப்பர்ப்..!
சூப்பர் பாஸ்....... கலக்குறீங்க...!
super boss
உள்ள வந்து தலைப்பை பார்த்ததும் ..அப்படியே ஷாக் ஆய்டேன் ...
நல்ல ரோமன்டிகல் குடும்ப கதை ...
hahahhaa tamil mango super super :P
Ennama ezudharaya super da
சூப்பரப்பு..!! கலக்கிட்டீங்க..!!
நைஸ் ஸ்டோரி...!!
//ரூபன் தனது கைபேசியையும் மடிக்கணினியையும் ஹாலில் இருக்கும் சோபாவில் போட்டுவிட்டு, அறையில் இருக்கும் சந்தியாவை பார்க்க சென்றான்.//
பக்கத்துரூமுக்கே சாட்டிங்கா?... வெளங்கிரும். நேரா போய் சாரி கேட்டாத்தான் என்னவாம்?.எல்லாம் நம்ம தமிழு போல கப்பியுட்டரே கதிங்கரவங்க நிலமை:)) கதை சூப்பர்:)
yet another romantic story.!!
awesome sunday read. love it.
உங்களை விட காதல் கதைகள் யாரும் அருமையா எழுத முடியாதுன்னு தோனுது :-) Too Good.
comments போட்ட எல்லாருக்கும் நன்றி!!:)))
குடும்ப கதை...
காதல் கனியும் குடும்பக் கதை
அருமை
Post a Comment