Mar 6, 2012

காதல் குத்து பாடல்கள்

சமீபத்தில் வெளிவந்திருக்கும் ரெண்டு காதல் குத்து பாடல்கள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டன.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வரும் 'வேணாம் மச்சான்'.

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.
அது மூடி திறக்கும்போதே உன்னை கவுக்கும் குவாட்டரு.
கடலை போல காதல் salt water-u
அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ தூக்கி போட்டு-டு

mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா
நீயும் டாவு அடிக்கும் பொண்ண கட்டுனா டவுசரு அவுரும்டா.
கண்ண கலங்க வைக்கும் figure வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி poster ஒட்டும் நண்பன் போதும்டா

bold எழுத்துகளில் இருக்கும் வரிகள் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு. கேட்கும்போதே உண்மையாக ஒரு புன்னகை வரும்! பொதுவா, எனக்கு இந்த பெண்களை தாக்கி எழுதும் கொடூரமான பாடல்கள் அவ்வளவு பிடிக்காது (தனுஷ், செல்வராகவன் படங்களில் வரும் பல பாடல்கள்). இதுவும் கொஞ்சம் தாக்கி எழுதி இருக்கும் பாடல் தான்.

ஆனால், நண்பன் தான் முக்கியம் என்று சொல்லும்போது, பாடல் அவ்வளவு வெறித்தனமாய் தெரியவில்லை. இதை பெண்களும் சேர்ந்தே ரசிக்கலாம். அந்த 'salt water-u' message பெண்களும் ஆண்களை கண்டு உஷாராக இருக்க உதவும்:)))
நரேஷ் அய்யரும், வேல்முருகனும் பாடலை நன்றாக பாடியுள்ளனர். பாடலில் ஆரம்பிக்கும் அந்த 'peppy' feel பாடலில் நடுவே சற்று குறைந்தாலும், அதுக்கு அப்பரம் வரும் வரிகளுக்காகவே பாடலை முழுதாய் கேட்கலாம். நா முத்துகுமார் சார்....பின்னிட்டீங்க போங்க!!!

இன்னொரு படத்தில் வந்த 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்' பாடல். கழுகு படத்தில் வந்திருக்கும் பாடல்.

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்.
அத காதல்னு சொல்றாங்க அனைவரும்!

யுவன் இசையில் இன்னொரு ஹிட்!

இந்த பாடலில் எனக்கு பிடிச்சது- காதலில் ரெண்டு பேருமே தப்பு செய்றாங்க என்ற வரிகள், ஹீரோவின் ஆட்டம், நடுவே வரும் சில காமெடிகள் (வீடியோவை பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்......இயக்குனர் பேரரசு, கலா மாஸ்டர்...ஹிஹிஹி....)

No comments: