Feb 22, 2012

அஸ்கு லஸ்கு (சிறுகதை)

சோபாவில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருந்தனர் சுபாஷும் அவன் குழந்தை ஆதிஷும். ஆதீஷ், சுபாஷ் மடியில் தலை வைத்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தது.

சுபாஷ், " ஆதி... தூக்கம் வந்தா, உன் ரூமுக்கு போவோமா?"

ஆதிஷ், "அப்பா, please பா... கொஞ்சம் நேரம் டீவி பாக்கனும்" என்றவன் கொஞ்ச நேரத்தில் தொலைக்காட்சி பார்த்து கொண்டே தூங்கிவிட்டான். அவனைத் தூக்கி கொண்டு படுக்கையில் போட்டுவிட்டு airconயை அழ்த்திவிட்டு அறைகதவை சாத்தினான். அப்போது வீட்டுக்குள் நுழைந்தாள் சமீரா.

"வந்துட்டீயா மா." என்றான் சுபாஷ்.

"வந்தபிறகு வந்துட்டீயானா என்ன அர்த்தம்?" சலித்து கொண்டே தனது ஆபிஸ் பைகளை மேசையில் வைத்தாள். ஆபிஸில் என்னவோ நடந்திருக்கும் என்று புரிந்தது சுபாஷுக்கு. அவள் செம்ம கோபத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தான். அவளது கைபேசி அலறியது.

"சார், அத நான் அப்பவே அனுப்பிட்டேன். schedule என்கிட்ட இல்ல. ராம்கிட்ட இருக்கு. அவர்கிட்ட கேளுங்க. எல்லாத்தையும் ஏன் என் தல மேலேயே போடுறீங்க...அதான் எல்லாருக்கும் deployment பத்தி clearer சொல்லிட்டாங்களே. ச்சே... " கடுப்பில் பேசிவிட்டு கைபேசியை தூக்கி போட்டாள் மேசையில். நாற்காலியில் தலை சாய்த்து, கண் மூடி படுத்து இருந்தாள். நாற்காலி பின்னாடி நின்ற சுபாஷ், சமீராவின் தலையை சற்று massage செய்தான்.

"வேண்டாம்.....விடு" என்றவள் சுபாஷின் கையை விலக்கினாள்.

அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். கண் மூடி இருந்த சமீராவை கொஞ்சம் நேரம் பார்த்தான்.

"ஆதிஷ்?" என்றாள்.

"தூங்கிட்டான்." என்றான்.

சுபாஷ், "சாப்டீயா?"

பதில் வரவில்லை. அப்படியே இருந்தாள்.

சுபாஷ், "சாப்டுறீயா?"

மௌனமாக இருந்தாள்.

"சரி, உனக்கு காபி எடுத்துட்டு வரேன்," என்றவன் எழுந்து சமையலறைக்கு சென்றான். எழுந்தவனின் கையை பிடித்து அவனை நிறுத்தினாள்.

"என்ன மா? என்ன ஆச்சு?" என்றான். சுபாஷை இறுக்க கட்டிபிடித்து கொண்டாள் சமீரா. அவன் நெஞ்சில் முகம் சாய்த்திருந்த சமீரா,

"புது சோப்பா?"

சிரித்தவன், "இல்ல. natural smell." முகம் சாய்த்திருந்த சமீரா தலை நிமிர்ந்து அவனை பார்த்து,

"idiot" என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவன் நெஞ்சில் முகம் சாய்த்து கொண்டாள்.

"are you ok?" என்று கேட்டான்.

"ம்ம்..." என்றாலும் அவளது குரலில் ஒரு சோகம் படர்ந்தது.

"no you are not ok. சொல்லு என்ன ஆச்சு?" என இன்னும் இறுக்கி கட்டிபிடித்து கொண்டவனிடம் சமீரா,

"தெரியலடா, இப்பலாம் ரொம்ப tension ஆயிடுறேன். ரொம்ப கோபம் வருது." என்றவள் அலுவலகத்தில் நடந்தவற்றை கொட்டி தீர்த்தாள்.

"புரியுது மா. சில managerகள் அப்படி தான் போட்டு வாட்டி எடுப்பாங்க. கஷ்டம் தான். இன்னும் கொஞ்சம் நாளைக்கு பாரு... இல்லன்னா நீயும் உன் வேலையும் போதும்டா-னு சொல்லி transfer வாங்கிடு. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு, கொஞ்ச நாளைக்கு வீட்டுலே இரு. உனக்கும் breakஆ இருக்கும். mind freshஆ இருக்கும். புதுசா யோசிக்கலாம். don't worry. aal izz well. if all is not well, then push the manager in the well." என்று சொல்லிவிட்டு புன்னகையித்தான்.

"hahaha...." வாய்விட்டு சிரித்தாள் சமீரா.

தொடர்ந்தாள் சமீரா, "thanks டா. i feel better now."

சுபாஷ், "இன்னொனும் செய்யலாம்."

சமீரா, "என்ன?"

சுபாஷ், "இப்படி gapஏ இல்லாமல் இறுக்கி கட்டிபிடிக்கலாம்." என்றவன் அவளை ஜன்னல் அருகே இழுத்து சென்றான்.

சமீரா, "டேய்... என்ன பண்ணுற? விடு. ஆதிஷ் வந்துட போறான்."

சுபாஷ், "கட்டி பிடிச்சதுனால தான் அவனே வந்தான்." என்று கண் சிமிட்டினான்.

சமீரா, "oh my god, what a cheesy line? ச்சீ போடா...." என அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தாள்.

"முடியாது. சும்மா இருந்த சங்க எடுத்து அமலா பால் மாதிரி பப்ப பப்பா பப்பபாண் ஊத்திட்டு இப்ப போகனும்னு சொல்லுறீயா? nothing doing. kiss me now." என்று கட்டளையிட்டான்.

"ப்ச்....நான் இன்னும் குளிக்கலடா. I feel very stuffy." என பதில் அளித்தாள்.

"ஒன்னும் தேவையில்ல. குடும்பத்துல ஒரு ஆளு குளிச்சா போதும். kiss me." என்று சொல்லிவிட்டு அவனது உதடுகளை அவளது உதடுகள் அருகே கொண்டு சென்றான். சமீரா, தனது ஆள்காட்டி விரல்களால் அவனது உதடுகளை தடுத்தாள்.

"நீ வர வர மோசமா போயிகிட்டு இருக்க. உனக்கு இதலாம் யாரு சொல்லி கொடுக்குறாங்க?" என புருவங்களை சுருக்கி கேட்டாள் சமீரா.

"ஏய்...நான் அனுப்புற links எல்லாம் நீ படிக்கறது இல்லையா?" என்றான்.

"என்ன links??" என்றாள்.

"enpoems.blogspot.com கதைகள் links? அவங்க எழுதற கதை எல்லாம் ஒரே கதை தான். ஒரு குழந்தை தூங்கும். கதைல வர wife கோபமா, இல்ல tiredஆ இருப்பாங்க. husband romance பண்ணுவாரு." புன்னகையித்தான்.

சமீரா, "so அந்த மாதிரி கண்டத படிச்சு தான் கெட்டு போயி இருக்கீயா? ஏன் வேற நல்லா விஷயமே உனக்கு படிக்க தெரியாதா?"

சுபாஷ், " எனக்கு அது தான் நல்லா விஷயம்."

சமீரா, "சரி இப்ப என்ன பண்ணனும்?"

சுபாஷ், "huh...ரெண்டு பேரும் சேர்ந்து மாவு பிசஞ்சு, பூரி பண்ணுவோமா? யாரடி இவ... உங்கிட்ட ஒரு கிஸ் வாங்க இவ்வளவு போராடனுமா?" என்று விளையாட்டாய் கோபித்து கொண்டான்.

அவனது கன்னங்களில் கைவைத்தாள் சமீரா. மெதுவாய் அவன் முகம் அருகே சென்றாள். குஷியான சுபாஷ் கண்களை மூடி கொண்டான்.

அறையை திறந்து வெளியே வந்தான் ஆதிஷ் கண்களை கசிக்கி கொண்டு, "அப்பா, toilet போனும்?"

சமீராவும் சுபாஷும் வாய்விட்டு சிரித்தனர்.

*முற்றும்*

5 comments:

Anonymous said...

//enpoems.blogspot.com கதைகள் links? அவங்க எழுதற கதை எல்லாம் ஒரே கதை தான். ஒரு குழந்தை தூங்கும். கதைல வர wife கோபமா, இல்ல tiredஆ இருப்பாங்க. husband romance பண்ணுவாரு//
nice

Pu..Ka..Ra..Prabhu said...

காதல் வார்த்தை, சின்ன சின்ன சண்டை, கட்டி அணைக்க ஒரு காதலன் / காதலி இருந்தால் கவலைகள் எங்கே? வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு காதல் பார்வைக்கு..

ஈகோ வாழ பிரிந்த தம்பதிகளுக்கு உங்க ப்ளாக் படித்த சின்ன மாற்றம் வரலாம்.. ஜஸ்ட் கிட்டிங்..

Unknown to myself said...

வழக்கம் போல உங்க style la ஒரு நல்ல கதை..ரொமான்ஸ், நகைச்சுவையையும் கலந்து நல்லா எழுதுறீங்க...கதைத் தலைப்பே வித்தியாசமா இருந்ததால உடனே க்ளிக் பண்ணிட்டேன்...

அப்புறம் ஒரு confession...

கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆச்சு உங்க blog பக்கம் வந்து..அப்ப எல்லாம் ஏதாச்சும் tension, இல்லைனா mood out ஆயிட்டா உங்களோட post படிப்பேன். main ஆ கதைகளைத் தான் படிப்பேன். கொஞ்சம் மனசு ஜாலி ஆயிடும்.

ரொம்ப சுய நல வாதிடா உன் மனது relax ஆனாப் போதும்னு இருந்திட்டே, என்னைக்காவது என் blog la comments போட்டு இருக்கியானு நீங்க திட்டறது காதுல விழுகுது. அப்ப எல்லாம் படிக்க மட்டும் தான் பிடிக்கும், இப்ப தான் எழுதறதுல இருக்கிற சுகத்தை அனுபவிக்க ஆரமிச்சு இருக்கேன்.

இனி நேரம் கிடைக்கும் போது ,அப்பப்ப இந்தப் பக்கம் வந்துட்டு போறேன்..தொடந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்!!!

F.NIHAZA said...

ஆஹா ஆஹா...என்னமா ரொமென்ஸ்....

Thamizhmaangani said...

Thank you so much!!