வியாழக்கிழமையே போய் டிக்கெட்டுகளை வாங்கி கொண்டேன் சனிக்கிழமை காட்சிக்கு. வேலையில promotion கிடைத்ததால், நானே treat பண்ணுறேனு (தேவையில்லாம வாக்கு கொடுத்து) சொல்லி உயிர்த்தோழிகள் இருவருடன் சென்றேன்.
தமிழ் சினிமாவில், பெண் இயக்குனர்கள் ரொம்ப குறைவு. தைரியமா ஒரு படம் செய்ய நிறைய பொறுமை வேணும். அதற்கு முதல் பாராட்டு ஐஸ்வர்யாவுக்கு.
பிடித்த விஷயங்கள்
1) கண்ணழகா பாடல் இசை
2) ஸ்ருதி/தனுஷ் வீடு. அவ்வளவு அழகு!!
3) புதுமையான கல்யாணம்- clubல்
4) சிவா கார்த்திகேயனின் சில காமெடி வெடிகள்
5) ஒருசில romantic scenes/dialogues- "உன்னைய காய படுத்த மாட்டேன். மத்தவங்க உன்னைய காயப்படுத்த விட மாட்டேன்."
ஆனால், ஏங்க இந்த மாதிரி படத்த எடுத்தீங்க? முதல் பாதி நல்லா இருந்துச்சு. அப்படியே இங்கீலிஷ் படம் மாதிரி 1 மணி நேரத்துல, அதாவது, interval-லேயே படத்தை முடித்து இருக்கலாம். இரண்டாம் பாதி ஐயோ யோ யோ!!! ஆசான் படி நடக்க வேண்டும் என்பது நல்லது தான். அதுக்காக செல்வராகவன் மாதிரியேவா படத்த எடுக்கனும்!??
தியெட்டரில் வந்த கமெண்ஸ் "இந்த தனுஷ் ஒரு படத்துலயும் தெளிவாவே இருக்க மாட்டானா?"
மன்னிக்க முடியாத குற்றங்கள்:
1) அடிக்கடி ஸ்ருதிஹாசனை அழ வைத்தது
2) psychiatrist clinic மோசமான நிலையில் இருந்தது.
3) கொலவெறி பாடலை உப்பு சப்பு இல்லாமல் எடுத்தது.
4) ஸ்ருதிஹாசன் தங்கைக்கு ஏன் வாய் பேச முடியாத character? அவள் எப்படி திடீரென்று பேசுகிறாள்?
5) climax???????????
கொலவெறி பாடலை வெள்ளைக்காரன்கள் வைத்தோ, அல்லது பெரிய பட்ஜெட் செலவில் செட் போட்டோ எடுத்து இருக்க தேவையில்லை. ரசிக்கும்படியாக ஒரு signature step, அல்லது சில celebritiesகளை வைத்தோ எடுத்து இருந்திருக்கலாம். :((((((((((((((((((((((((((((((((((
ஆமா, காருக்கு எதுக்கு அச்சாணி என்பது போல்?? இந்த படத்துக்கு '3' என்று எதற்கு பெயர் வந்தது?
90 மார்க் வாங்ககூடிய மாணவன் தேர்வில் வெறும் 40 மார்க் வாங்கினால் வலிக்கும் இதயம் போல் என் இதயம் இருந்தது படம் முடிந்தபிறகு. ஏங்க ஐஸு, இப்படி பண்ணிட்டீங்க?
(படத்தை பார்த்த ஒரு சில தோழிகள், கல்யாணமான தோழிகளுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது என்று கூறினார்கள். facebook status முழுக்க ஆஹா ஓஹோனு பாராட்டு!!
அவங்களுக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்லனும்-
போங்க சார் போங்க! போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க சார்!)
8 comments:
தல இந்தவாட்டி அடி பலமோ....
நச் விமர்சனம்.
Anand: yes boss! :(((
Prakash: thanks boss!!
//ஆமா, காருக்கு எதுக்கு அச்சாணி என்பது போல்?? இந்த படத்துக்கு '3' என்று எதற்கு பெயர் வந்தது?//
ஊருக்கே தெரியும் 3 என்றால் உங்களுக்கு தெரியாமலே விமர்சனம் :-))
ஷ்ருதி +தனுஷ் +1 =3 :-)) ரெண்டு பேர் வாழ்க்கைல மூன்றாவதா வருதாம் தனுஷோட ஆல்டர் ஈகோ , படத்துக்கு பேரு வைக்க யோசிக்கிற டைரடக்கருங்க அப்படியே கொஞ்சம் கதையக்கும் ரூம் போட்டு யோசிச்சு இருக்கலாம் :-))
//90 மார்க் வாங்ககூடிய மாணவன் தேர்வில் வெறும் 40 மார்க் வாங்கினால் வலிக்கும் இதயம் போல் என் இதயம் இருந்தது படம் முடிந்தபிற///
ஏங்க இதுக்கு முன்னாடி அவங்க ஏதோ மெகா ஹிட் படம் குடுத்த மாதிரி பீல் பன்னுறேங்க..
இதுக்கு முன்னாடி அவங்க திரைக்கதை (உதவி) எழுதிய படம் பாபா அப்புறம் ஆயிரத்தில் ஒருவன்..
ரெண்டுமே தோல்வி படங்க..
ரஜினி வரலாற்றில் மெகா தோல்வி படம் பாபா...
ஆயிரத்தில் ஒருவன் தான் செல்வாவின் விழ்ச்சியின் ஆரம்பம்..
அவங்க கிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு படம் வந்தது பெரிய ஆச்சிரியம் இல்ல..
@vavvaal: //கொஞ்சம் கதையக்கும் ரூம் போட்டு யோசிச்சு இருக்கலாம் :-))//
hahaha true true!
@raj:
it is a quite a big let down that she had a strong crew with her- dhanush, shruti, great music, visuals and i guess even some dialogues were very nice! but...:(((
நானும் தான் இப்படி முதல் நாளே ஏமாந்து போனேன் ஒரு நண்பர் சொன்னது போல மயக்கம் என்ன படத்தின் இரண்டாம் பாதியை இதன் இரண்டாம் பதியாக இணைத்திருந்தால் படம் வெற்றி பெறும்
nan thapichen
Post a Comment