Apr 26, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 7


(series 3) பகுதி 6

ஒருவித பயம் கலந்த அறுவறுப்புடன் வீட்டிற்குள் நுழைந்தாள் விஜி. தோழிகள்கூட இருக்கும்போது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் தைரியமும்கூட இப்போது இல்லை. வீட்டிற்குள் ஒரு பெரிய பட்டாளமே உட்கார்ந்து மாப்பிள்ளை ஃபோட்டோக்களை பார்த்து கொண்டிருந்தனர்- விஜியின் அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா, தங்கைகள் மற்றும் ஜோதிட தரகர்.

விஜியைப் பார்த்த பாட்டி, "வா வா.....இந்த பையன் ஓகேவா?" என்று ஒரு மாப்பிள்ளை ஃபோட்டோவை காட்டினார். தலை வெடித்துவிடுவது போல் இருந்த விஜிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அழுத கண்கள் சிவந்து காணப்பட்டன.  இவர்கள் செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், தனது விருப்பம் எது என்று புரியாமல் இவர்கள் செய்யும் கூத்தை கண்டு இன்னும் அழுகை வந்தது அவளுக்கு. 

*****************************************************************************

காரில், சசியும் சித்தார்த்தும் சினிமாவுக்கு சென்று கொண்டிருந்தனர். 

"புது கார் நல்லா இருக்கு சித்து." என்றாள் சசி. 

"என் familyக்கு அடுத்தபடியா நீ தான் இதுல travel பண்ணுற. என் friendsகூட இந்த கார்ல இன்னும் ஏறல. " என்றான் சித்து கவனத்தை சாலையிலும் சசிமேலும் செலுத்தியவாறு.

"ஓ...really?" புன்னகையித்தாள் சசி. 

"உன்கிட்ட ஒரு suggestion கேட்கனும்?" என்று சசி கேட்டேள்.

"life matter இது...." என இழுத்தாள் சசி. வண்டியை ஓட்டி கொண்டே உம் போட்டுகொண்டு கேட்டான். 

"காலேஜ் படிக்கற ஒரு பொண்ணு அவ படிப்ப கூட முடிக்காம அவங்க வீட்டுல கல்யாணம் ஏற்பாடு பண்ணா என்ன செய்றது?" என்று மொட்டையாக சொல்ல,

சித்தார்த்தின் புருவங்கள் சுருங்கின.

"என்ன சொல்ற?" என்று மறுபடியும் கேட்டான்.

"அந்த பொண்ணு என்ன சொல்லி வீட்டுல உள்ளவங்கள சமாளிக்கறது?" என்று மறுபடி சொல்லியதும் காரை டக்-கென்று நிறுத்தினான். பின்னாடி வந்த மோட்டர்சைக்கில்காரன் ஹாரன் அடித்தான். 

'சரியா ஓட்டுங்கடா' என கையசைவு செய்தபடி போனான் மோட்டார் சைக்கில்காரன். சசிக்கு ஒன்னும் புரியவில்லை. காரைவிட்டு வெளியே சென்றான் சித்தார்த். சசியும் அவனை பின்தொடர்ந்தான்.

சசி, "என்ன சித்து....ஏன் கார நிறுத்தின?" 

சித்தார்த், "தெரியும்டி உங்கள பத்தி. கூடவே இருந்து பிடிச்சது எல்லாம் பண்ணுவீங்க. கல்யாணம்னா வந்தா....வீட்டுல பாக்குறாங்க. US மாப்பிள்ள இருக்குனு சொல்வீங்க. நான் உங்கள அண்ணன் மாதிரி நினைச்சு தான் பழகினேன் அப்படிம்பிங்க."

தொடர்ந்தான் சித்தார்த், "வீட்டுல ஏதாச்சு சொன்னாங்கன்னா. ஆமா நான் சித்தார்த்-னு ஒரு பையன லவ் பண்ணுறேன் - னு சொல்ல வேண்டியது தானே? தைரியம் இல்லேனா அப்பரம் எதுக்கு உங்களுக்கு எல்லாம் லவ்?"

******************************************************************************

"அட பாவி!!! correctஆ பேச சொன்னா கமல் மாதிரி பேசி குழப்பிவிட்டு வந்து இருக்க. சரி அப்பரம் என்ன சொன்னான்?" என்று கலா கூறினாள் சசியை பார்த்து. சசி நடந்தவற்றைக் கூறி முடித்தாள்.

சுதா, "அப்பரம் என்ன ஆச்சு?"

சசி, "கோபத்துல கிளம்பிட்டான். ஃபோன் பண்ணி பார்த்தேன். ஆனா எடுக்கல."

கலா, "anyway, congrats மச்சான்! அந்த ஷு ஷு sugar boyய வர சொல்லு, பேசலாம், நாள் fix பண்ணலாம்." என்று bru coffee விளம்பரத்திலும் வருவதுபோல் கிண்டல் அடித்தாள்.

சசி, "அதலாம் ஒன்னுமில்ல." என்றபடி வெட்கப்பட்டாள்.

கலா, "இந்த பாரு. வெட்கப்படுறேனு சொல்லி, இந்த காலால கோலம் போடுற வேலையலாம் வேண்டாம். இன்னிக்கு தான் நான் கஷ்டப்பட்டு என் ரூம vaccum cleaner வச்சு துடைச்சேன்." என்று பேசிகொண்டிருக்கும் வேளையில் சுதா ஒரு மாதிரியாய் இருப்பதை கண்டாள் சசி.

சசி, "ஏய் என்ன ஆச்சு சுதா?"

சுதா, "ஒன்னுமில்ல."

கலா, "ஒன்னுமில்ல-னு பொண்ணுங்க சொன்னா ஏதோ இருக்குனு அர்த்தம். kya bole ladki..." என ஹிந்தியிலும் விட்டு அடித்தாள்.

சுதா, "நாளைக்கு ghazal கச்சேரிக்கு கூப்பிட்டான் ரவி."

கலா, "அப்படினா???" தலையை சொரிந்தாள்.

சசி, "ஞான சூனியமே.அப்படினா நம்ம classical மாதிரி அதுவும் ஒரு வகை இசை கச்சேரி."

கலா, "ஹாஹா...சும்மா பாட்டு கச்சேரி தானே. போயிட்டு வா. முக்கியமா நம்ம விஜி பிரச்சனைக்கு ஒரு ஐடியா கேளு!"

சுதா, "ஆனா எனக்கு இந்த பாட்டு கச்சேரிலாம் பிடிக்காது. அவன் கூப்பிட்டதாலே no-னு சொல்ல முடியல." என்று பெருமூச்சுவிட்டாள்.

கலா, "இது என்ன பெரிய விஷயமா? hindustani இசையில 17  வருஷமா முழ்கி இருக்குற மாதிரி ஒரு லுக் கொடு. அவங்க பாடும்போது தலையை அப்பப்ப right-க்கும் left-க்கும் ஆட்டு. அப்பரம் கைய இப்படி வச்சு...." என்றவள் அடை போடுவது போல் சைகை செய்து,

"இசையை ரசிக்கற மாதிரி பீலா விடு."

இப்படி மூவரும் சிரித்து பேசிகொண்டிருக்கும்போது கலாவின் அம்மா பேசும் சத்தம் கேட்டது. கலாவின் அம்மா,

"விஜி...வா. வீட்டுல சொன்னாங்க. கல்யாணமாம் உனக்கு. congrats!! all the best!" என்றார்.

காயப்பட்ட புண்ணில் ஆசிட் ஊற்றியதுபோல் இருந்தது விஜிக்கு. கலாவின் அறைக்குள் சென்றார்.

விஜி, "உங்க அம்மாகிறதால சும்மா விட்டேன்." கோபத்துடன் மெத்தையில் அமர்ந்தாள்.

கலா, "விடு மச்சி. mothers என்றாலே அப்படி தான்!"

விஜி, "நான் decide பண்ணிட்டேன். நான் ஓடி போக போறேன்."

கலா, "hello!! ஓடி போறதுக்கு நீ ஒன்னும் காதல் சந்தியாவும் இல்ல. வழி அனுப்பி வைக்கறத்துக்கு நாங்களும் ஒன்னும் நாடோடிகள் சசிகுமார் கூட்டமும் இல்ல. வேற ஏதாச்சு ஒழுங்கா முடிவு எடுக்குறீயா?"

விஜி, "முடிவு எடுக்கறதுக்குள்ள என் உயிர எடுத்துடுவாங்கனு நினைக்குறேன்."

மற்றவர்கள் சிரித்தனர்.

சுதா, "timingல பின்னுற போ!!"

விஜி, "என் tragedy உங்களுக்கு comedyயா இருக்கா?"

சசி, "இங்க பார்டா, மறுபடியும்!!"

கலா, "ஓகே விஜி. don't worry. நல்லதே நடக்கும். aal izz well."

விஜி, "சசி, சித்தார்த் ஏதாச்சு ஐடியா சொன்னாரா?" என்றதும் சசி சொன்ன கதை மறுபடியும் repeat telecast ஆனது.

விஜி, "ஓ மை காட். sorry sasi. என்னால தானே குழப்பம். but anyway congrats" கவலையிலும் கொஞ்சம் சிரித்தாள்.

சசி, "actually விஜி... உன் வீட்டுல படிப்புக்கு ரொம்ப importance கொடுப்பாங்களே. நீ வேணும்னா இப்படி சொல்லி பாரேன்- நான் படிச்சு பெரிய ஆளா வரனும். அப்பரம் தான் மத்தது எல்லாம்."

கலா, "படிச்சா பெரிய ஆளா வர முடியாது. சாப்பிட்டா தான் பெரிய ஆளா வர முடியும்" என்றபடி மேசையில் இருந்த chocolate cakeயை எடுத்து கடித்தாள்.

விஜி, "எல்லா சொல்லி பாத்துட்டேன். என்னைய convince பண்றதுக்காக புதுசு புதுசா சொல்றாங்கய்யா வீட்டுல. எங்க அம்மா சொன்னாங்க actually பாட்டிக்காக இதலாம் பண்ணலயாம். போன வருஷத்துலேந்தே போற இடத்துல எல்லாம் கேட்குறாங்களாம்."

கலா, "போற இடத்துல எல்லாம் கேட்க, நீ என்ன புது பாடலா?"

அப்போது விஜியின் கைபேசி அலறியது. புதிதாக வந்த mms.

விஜியின் அம்மாவிடமிருந்து புதிதாய் ஒரு மாப்பிள்ள ஃபோட்டோ. விஜி அந்த மெசேஜை அனைவருக்கும் கேட்கும்படி படித்தாள்,

"விஜி, இந்த பையன வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சுருக்கு. நீ பாத்து சொல்லு. பாட்டி சொன்னாங்க இந்த பையனுக்கு ஒரு தெய்வீக முகம் இருக்குனு."

(பகுதி 8)

8 comments:

Anonymous said...

இந்த பையன வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சுருக்கு = சித்தார்த்

vijayroks said...

next part eppo poda poreenga? next year ah?

FunScribbler said...

vijayroks:ஏன் சார், நீங்க வேற? எப்படியாச்சும் எழுதனும்னு தான் ஆசைப்படுறேன். ஆனா, தினமும் 'மூட்' கெடுக்குற மாதிரி வேலை வந்துடுது!

Anonymous said...

next part eppo poda poreenga? year 2014 leyah?

Anonymous said...

next part eppo poda poreenga? year 2015 leyah?

Anonymous said...

next part eppo poda poreenga? year 2016 leyah?

Anonymous said...

next part eppo poda poreenga? year 2017 leyah?

Anonymous said...

next part eppo poda poreenga? year 2018 leyah?