Jul 2, 2012

புகை


முதுகு பக்கத்தை காட்டி படுத்திருந்தாள் கேஷினி. கண்விழித்த குமார் அவள் அருகே நகர்ந்து படுத்தான். கலைந்திருந்த அவளது முடியை சரிசெய்தபோது கழுத்தோரத்தில் தெரிந்தது ஒரு சின்ன காயம். அதற்கு முத்தமிட்டான் குமார். அவன் ஸ்பரிசம் பட்ட கேஷினி அரைதூக்கத்துடன் அவன் பக்கம் புரண்டாள்.

கேஷினி, "குட் மார்னிங் டா. எழுந்திரிச்சிட்டீயா?" பாதி தூக்க கலக்க புன்னகையுடன்.

குமார், "ம்ம்... மணி 1130 ஆக போகுது."

கேஷினி, "i am so tired da" என்றவள் அவன் போர்வைமேல் வைத்திருந்த தனது கையை  அவனது நெஞ்சில் வைத்தாள்.

குமார், "sorry..." என்றான். புன்னகையித்தாள் கேஷினி.

ஸ்ட்டிக்கர் பொட்டு அவனது மேல் உதட்டில் ஒட்டியிருந்தது. அதனை எடுத்து அவனது மூக்கில் முக்குத்தி போல் வைத்து விளையாடினாள் கேஷினி. அவள் விளையாடுவதை ரசித்த குமார் மறுபடியும்,

"நேத்து....... சாரி" என இழுத்தான்.

கேஷினி, "ச்சி, லூசு. tired இருக்குனு தான் சொன்னேன். பிடிக்கலனு சொன்னேனா?" என்றாள் கண்களில் குறும்புடன். குமாருக்கு கொஞ்சம் வெட்கம் வந்தது. அந்த வெட்கபுன்னகையில் கன்னத்தில் குழி விழுந்தது.

தொடர்ந்தாள், "வெட்கபடாதே டா. அநியாயத்துக்கு அழகா தெரியுற." என்றவள் அவனது உதடுகளில் 'இச்' வைத்தாள். இருவரும் பேசாமல் 1 ஒரு நிமிடம் இருவரின் கண்களை பார்த்து கொண்டிருந்தனர். 'என்ன' என்பதுபோல் புருவங்களை உயர்த்தினாள். 'ஒன்னுமில்ல'என்பதுபோல் அவன் தலையை ஆட்டினான்.


"இன்னிக்கு நைட் இருந்துட்டு போக முடியாதா?"

"nothing doing, darling." என்றவள் எழுந்து சென்றாள்.

"எங்க டா, என் dress."

"யாருக்கு தெரியும்?" என்றான் சில்மிஷ பார்வையோடு. அவளது துணிகளை தேடி கண்டுபிடித்தவள், அதனை போட்டு கொண்டாள். கீழே கிடந்து அவனது துணிகளை அள்ளி அவன் மேல் வீசி எறிந்தாள். ஜன்னல் ஓரமாய் கிடந்த சிகெரட்டை பற்ற வைத்து சிகெரட் பிடித்து கொண்டிருக்கும்போது குமாரும் வந்து ஒரு சிகெரட்டை பற்ற வைத்தான்.

புகைக்கு நடுவே, ""எப்ப போகனும்?" என்றான்.

"before 2. அம்மாவும் அப்பாவும் ஊர்லேந்து திரும்பி வரத்துக்குள்ள."

அவள் தொடர்ந்தாள், "வேலை விஷயம் என்ன ஆச்சு?"

"ம்ம்ம்... ரவுடீயா இருந்தவனுக்கு எவன் வேலை கொடுப்பான்?" கடுப்பில் அவன் இன்னும் புகையை இழுத்து பிடித்தான்.

அப்போது அவனது கைபேசி அலறியது.

"டேய் லிங்கம்...என்கிட்ட எதுவும் சொல்லாத. நான் தான் எல்லாத்தையும் விட்டுடு வந்துட்டேன்ல. வைங்கடா ஃபோன."

கேஷினி, "என்ன ஆச்சு?"

"ஏதோ பெரிய இடத்து பையன காணுமா? வர சொன்னான்."

"so, நீ இன்னும் அவங்க கூட தான் இருக்க?"

"இல்ல மா. நான் எல்லாத்தையும் விட்டுடேன்."

"then why are they calling you?"

"என்னது?"

"அப்பரம் எதுக்கு அவங்க உனக்கு ஃபோன் பண்றாங்க?"

"சத்தியமா தெரியாது."

"நீயும் உன் சத்தியமும்...." என்றவள் கடைசி பகுதி சிகெரட்டை இழுத்து பிடித்து 'ashtray'ல் தேய்த்தாள். கோபத்தில் ஹாலில் இருக்கும் சோபாவில் உட்கார்ந்தாள்.

"சத்தியமா கேஷு.....நான் எல்லாத்தையும் விட்டுடேன். என்னய நம்பு."

அப்போது 'உன் மேல ஆசை தான்' பாடல் தொலைக்காட்சியில் ஓட, குமார்,

"கேஷு, என் போட்டு இருக்குற சட்டை மாதிரி தானே andreaவும் போட்டுருக்கா?"

முறைத்தாள் கேஷினி.

"நீகூட....கொஞ்சம் andrea மாதிரி தான் இருக்க." என்றவுடன் வாய் விட்டு சத்தம் போட்டு சிரித்தாள் கேஷினி. சமாதானம் ஆன சந்தோஷத்தில் குமார் அவள் கழுத்து அருகே செல்ல, அவள் அவனை தடுத்தாள்.

"நான் கிளம்புறேன்" என்றவள் வீட்டை விட்டு வெளியேறினாள். பக்கத்து தெருவில் ஒரே கூட்டமாக இருந்தது. போலீஸ் கார்கள் குவிந்துகிடந்தன. குமாரின் பழைய ரவுடி நண்பர்களை விசாரித்து கொண்டிருந்தனர். உடனே கேஷினி குமாருக்கு ஃபோன் செய்து நடந்ததை சொன்னாள்.

"சரி நான் பாத்துகிறேன்" என்றான்.

ஃபோனை பையில் போட்டுவிட்டு, இன்னொரு கைபேசியை எடுத்தாள் கேஷினி,

"அக்கா, சொன்ன மாதிரி பண்ணிட்டேன். பையன கடத்தி நம்ம go-downல வச்சுருக்கோம். போலீஸ் லிங்கம் ஆளுக மேல தான் சந்தேகம் படுறாங்க."

*முற்றும்*

5 comments:

Anonymous said...

total crap

Anonymous said...

thoo

Thamizhmaangani said...

இரண்டு anonymousகளுக்கும், கருத்து சொன்னதிற்கு நன்றி!:))))

Pu..Ka..Ra..Prabhu said...

thamil ... onnum puriyamaateengathu... nanum rendo moonu vaati paduchu parthuden... but nice see you try to attempt different story(apart from love,romance)

Thamizhmaangani said...

@prabhu

//but nice see you try to attempt different story(apart from love,romance)//

புதுசா எழுதினா...பயங்கர கொலை மிரட்டல் எல்லாம் வருதே:((( ஹிஹிஹி...