Jul 11, 2012
daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 9
பகுதி 8
வீட்டை பார்த்ததும் நால்வருக்கும் ஒன்றுமே புரியவில்லை. வீடே திருவிழா போல் இருந்தது. இரண்டு லாரி சொந்தக்காரர்கள் வீட்டிற்குள் இருந்தனர். வெளியே வந்த விஜியின் சித்தி,
"விஜி, வந்துட்டீயா? குட் குட். சரி get ready. அக்கா உனக்கு ஒரு சூப்பர் ரெட் சாரி எடுத்து வச்சு இருக்காங்க! சீக்கிரம் கட்டிக்கோ!" என்று சொல்லிவிட்டு, நின்று கொண்டிருந்த van driverரிடம் பணம் கொடுத்தார். உள்ளே நுழைந்த சித்தி, விஜியின் தோழிகளை பார்த்து,
"girls, நீங்களும் வாங்க!"
கலா, "எங்க?"
சித்தி, "பொண்ணு பார்க்குற function நடக்க போகுது." என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
*******************************************************
விஜி அன்று சொன்ன plan எல்லாருக்கும் ஞாபகம் வந்தது.
விஜி, "shhhhhhhhhhhh....." அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி, தனது ஐடியாவை கொட்டினாள்.
சுதா, "என்ன ப்ளான்?"
விஜி, "நம்ம எதுக்கு probability படிக்கிறோம்?"
கலா, "அது தெரிஞ்சு இருந்தா எப்பவோ உருப்புட்டு இருப்பேனே?"
விஜி, "what is the probability of him saying yes?"
மற்றவர்கள் முழித்தனர். சசி பதில் அளித்தாள், "1"
விஜி, "yes."
மறுபடியும் அதே கேள்வியுடன் விஜி, "what is the probability of him saying no?"
சுதா, "அதே 1"
விஜி, "yes. so maths படி பார்க்க போனால், நம்ம ஏன் பயப்படனும்? அவனே வேணாம்னு சொல்றதுக்கு chance நிறைய இருக்கு. and என் வீட்டுல ஜாதகம் அது இதுனு நிறைய பார்ப்பாங்க. so ஒவ்வொரு proposalலா பாத்து ஓகே சொல்றதுக்குள்ள...விடிஞ்சிடும்..."
சசி, "அப்பரம்?"
கலா, "விடிஞ்சா...பல்லு விளக்கி மூஞ்சி கழுவு."
சசி, "அட ச்சே!"
விஜி, "and அதே சமயம்....அவனுக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்கனும். ஆனா நல்ல புள்ள மாதிரி இருக்கனும்"
கலா, "கிட்டதட்ட நம்ம சசி மாதிரி சொல்லு."
சசி கலாவின் காலை மிதித்தாள்.
************************************************************************************************
வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த கலா,
"இப்ப என்ன பண்ண போற? அடுத்த வாரம் அவன வெளியே கூப்பிட்டு பேசலாம்னு இருந்த. இப்ப....உன் வீட்டுலேயே.... this is going very dangerous."
சுதா, "எனக்கு தலையே சுத்து-து."
சசி, "நீ maths. probability. ok சொல்ல மாட்டேன். அப்படி இப்படினு சொன்ன? ஆனால், போற போக்க பாத்தால், இன்னிக்கே நிச்சயதார்த்தம் முடிஞ்சு நாளைக்கே கல்யாணம் ஆயிடும் போல இருக்கே!"
கலா, "அப்ப உனக்கு நாளைக்கு first nightஆ டி?" என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க, சசியும் சுதாவும் சிரித்தனர்.
விஜிக்கு சிரிப்பும் கோபமும் கலந்து வந்தது.
கலா, "ஒகே கூல் கூல்.... விஜி நீ போய் ரெடியாகு." விஜியின் சித்தி வந்து உடனே அவளை அழைத்து கொண்டு சென்றாள்.
சசி, "நான் இப்படியே ஓடி போயிடுறேன். என்னால இந்த கொடுமையலாம் பாத்துகிட்டு இருக்க முடியாது!" என்றாள்.
சுதா, "அட பாவி, நீயெல்லாம் ஒரு friendaa?"
கலா, "என்ன நடக்குமோ அது கண்டிப்பா நடக்கும்?", சந்திரமுகி படத்தில் 'ரா'ரா' பாட்டுக்கு முன்னாடி வரும் ரஜினி, பிரபுவுக்கு ஆறுதல் சொல்வதுபோல் கலா சோகத்தை கொட்டினாள்.
வீடு முழுவதும் சொந்தக்காரர்கள் 'நான் ஈ' போல் பறந்துகொண்டிருந்தனர் ஒவ்வொருவரும் தனது வேலையை பார்த்தபடி. சினிமாவில் வருவதுபோல், ஒரு சின்ன குழந்தை ஓடி வந்து,
"மாப்பிள்ள வந்துட்டாரு!" என்று கத்தியபடி வீட்டை நோக்கி ஓடியது. 'தெய்வீக' முகத்துடன் மாப்பிள்ளை வந்து இறங்கினார். விஜியின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றில் விழுவதை தடுக்க முடியாமல் கலா, சசி, சுதா நின்று கொண்டிருந்தனர். விஜியின் அறைக்குள் ஓடினர். கலா உடனே அந்த அறைக்குள் இருந்த கழிவறைக்கு சென்று அதனை நோட்டமிட்டாள்.
விஜி, "என்ன டி பண்ணுற?"
கலா, "நீ படமெல்லாம் பார்த்தது இல்ல? toilet வழியா பொண்ணு தப்பிச்சு போறத?"
விஜி, "அடி பாவி!"
கலா, "இத தவிர வேற வழி தெரியுல!"
சசி, "லூசு மாதிரி பண்ணாத."
கலா, "விஜி லூசாகாம இருக்க, நான் இப்ப லூசுத்தனம் பண்ணியே ஆகனும்!" என்றதும் சுதா சிரித்தாள்.
விஜி, "ஐயோ கடவுளே!! stop confusing me. how's he?"
கலா, "அவர் ஆயிரத்தில் ஒருவராகவே இருக்கட்டும். இது நமக்கு வேண்டாம் டி. வேணாம் மச்சான் வேணாம்...." என்று பாடலை பாடினாள். அப்போது விஜியின் சித்தி அறைக்குள் நுழைந்து,
"வா விஜி. உன்ன கூப்பிடுறாங்க."
விஜிக்கு போகவும் மனமில்லை. போகாமல் வேறு எப்படி தப்பிக்கலாம் என்றும் தெரியவில்லை.
சசி, "வா நாமும் போவோம்." சுதா சசியை தடுத்தாள்.
கலா, "சசி, உனக்கு மனசுல ரோஜா படம் மதுபாலானு நினைப்பா??"
மூவரும் மாடியிலிருந்து எட்டி பார்க்க, விஜி கீழே சென்றாள்.
சசி, "காபி கொண்டு போகல நம்ம விஜி???"
சுதா, "ஏய் நீ என்ன இது படம்னு நினைச்சீயா?"
சசி, "படம் இல்லையா?"
கலா, "இல்ல, பாடம். சும்மா இரு! என்ன நடக்குதுனு மட்டும் வேடிக்கை பாரு."
சசி, "பாட்டு பாட சொல்லுவாங்களா?"
கலா, "இல்ல, கூட்டு வைக்க சொல்லுவாங்க!" சிரித்தாள் சுதா.
மாப்பிள்ளைக்கு சூர்யா என்று நினைப்பு. முதல் மூன்று பட்டன்களை போடவில்லை. அதை பார்த்த கலா,
"ஓ...சட்டை மேல எவ்வளவோ பட்டன்ஸ்...." என வடிவேலு பாணியில் சொல்லி கிண்டல் அடித்தாள். கூட்ட நெரிசல் சத்தத்திலும், இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்க, விஜி மேலே ஒரு பார்வை வீசி முறைத்தாள்.
விஜியின் பாட்டி, "எல்லாருக்கும் சம்மதம் தானே?" என கேட்க, விஜி மறுபடியும் மேலே பார்த்தாள். மூவரும் அதற்குள் மேலே பார்த்து 'கடவுள் விட்ட வழி' என்று காட்டினர்.
மாப்பிள்ளையின் மாமா, "ரெண்டு பேரும்...கொஞ்சம் தனியா பேசிக்க சொல்லுங்க. இந்த காலத்து பிள்ளைங்களுக்கு நம்ம freedom கொடுக்கனும் பாருங்க...." என்று சொல்லிவிட்டு பெரிய சிரிப்பு சிரித்தார். வாழ்க்கையில் இது தான் பெரிய காமெடி என்பதுபோல் அக்கூட்டமே சிரித்தது.
சுதா, "இது தான் அவங்க ஊர்ல freedom ஆ?"
கலா, "அப்பரம் காந்தி தாத்தா கஷ்டப்பட்டு வாங்கினாரே..அதுக்கு பேரு என்ன?"
சசி, "அவங்க இப்ப எங்க போய் பேசுவாங்க?"
கலா, " 97 வருஷ தமிழ் சினிமா வரலாற்றில் இந்த மாதிரி சீன் எங்க வைப்பாங்க? மொட்ட மாடில தான்"
சசி, "இது படம் இல்லனு சொன்ன?"
கலா, "வாழ்க்கை தான் சினிமா, சினிமா தான் வாழ்க்கை."
சசி, "பசி மயக்கத்துல நீ உலறுர!"
மொட்ட மாடியில், மூவரும் தூணுக்கு பின்னால் ஒளிந்திருக்க, விஜியும் மாப்பிள்ளையும் டீ கடையில் 'பன்னு' வாங்கி திண்பதுபோல் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தனர்.
ஒளிந்திருந்த சுதா, "இன்னிக்குள்ள பேசிடுவாங்களா?"
கலா, "ம்ம்...according to medical institute of american society.....இன்னும் 48 மணி நேரம் கழிச்சு தான் எதுவானாலும் சொல்ல முடியும்." என்று நக்கல் செய்ய, சுதாவும் சசியும் சிரித்தனர்.
விஜி, "எங்க வேலை பாக்குறீங்க?" என்றாள் தயக்கத்துடன்.
தூணுக்கு பின்னால் நின்ற கலா, "அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?" அமைதியாய் இவர்களுக்குள் மட்டும் பேசிகொண்டனர்.
மாப்பிள்ளை, " inforile software company..." புன்னகைக்க முயற்சி செய்தாலும், புன்னகை வரவில்லை. அப்போது மாப்பிள்ளையின் கைபேசி ரிங்டோன் அடித்தது, "கண்ணழகா, காலழகா...."
சுதா, "ஓ...இவுக மூனு பட ஹீரோ தனுஷ் நினைப்பா?"
கலா, " பலான படத்துல வர பக்கத்துவீட்டுக்காரன் மாதிரி இருக்கான்...இவன் ஹீரோவா?"
சசி சற்று முழித்தாள், "ஆமா..நீ எப்போ அந்த மாதிரி படத்த பாத்த?"
கலா, "அட த்தூ...போஸ்டர பாத்தேன்.."
கைபேசியில் பேசிவிட்டு மாப்பிள்ளை விஜியிடம், "எனக்கு இது first time...."
கலா, "எங்களுக்கும் மட்டும் இது 150வது episodeஆ என்ன?"
விஜி, "ம்ம்..." என்றாள் பவ்வியமாய்.
கலா, " சாட்டை எடுத்து சாத்துவாள்னு பாத்தா...சாவித்திரி மாதிரி சாஞ்சிகிட்டு இருக்கா?"
சசி, "உனக்கு எல்லாமே கிண்டல் தான். அவ இடத்துல நீ நின்னு பாரு, அப்பரம் தெரியும்?"
கலா, "என்ன தெரியும்?....பக்கத்து portionல துணி காய போடுறதா?"
சுதா, "ஐயோ ராமா... கொஞ்ச நேரம் சும்மா இருங்க ரெண்டு பேரும்!"
மாப்பிள்ளை, " கல்யாணத்துக்கு அப்பரம் நீ வேலைக்கு எல்லாம் போக தேவையில்ல..."
சுதா, "அட பாவமே, அவ இன்னும் படிச்சே முடிக்கலையே?"
கலா, "மனசளவில் அவ இன்னும் ரெண்டாவது தான் படிக்குறா மிஸ்டர் மாப்பிள்ளை"
மாப்பிள்ளை, "அப்பரம்...நான் கீழே போய் என்ன சொல்ல?"
கலா, "மொட்ட மாடில நிறைய வத்தல் காய வைக்கலாம்னு போய் சொல்லு."
விஜி, "எனக்கு தெரியல."
மாப்பிள்ளை, "தெரியலனா...என்ன அர்த்தம்?" என்று கொஞ்சம் அதட்டினான். சற்று திடுகிட்டு போனாள் விஜி.
கலா, "நான் அடிச்ச தாங்க மாட்டே...நாலு மாசம் தூங்க மாட்டே..." என்று சத்தமில்லாமல் பாடினாள்.
சுதா, "என்னய்யா இவன்...இப்பவே மிரட்டுறான்?"
மாப்பிள்ளை விறுவிறுவென்று கீழே போனான். அவன் போனபிறகு மூவரும் விஜி அருகே சென்றனர். விஜி அழ ஆரம்பித்தாள்.
விஜி, "நான் நினைச்ச ப்ளான் படி ஒன்னுமே பண்ணல!! i hate myself! i feel so disgusted. this saree...this arrangement...all this stupid nonsense...i hate it! i hate it!" என கத்தினாள். மூவரும் அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் அவள் கேட்பதுபோல் இல்லை. விஜியின் சித்தி மொட்டை மாடிக்கு வந்தார்.
சித்தி, "விஜி...girls...happy news. மாப்பிள்ள ஓகே சொல்லிட்டார். கீழே எல்லாருக்கும் சந்தோஷம். so happy for you" என்று சொல்லிவிட்டு கட்டி அணைத்துவிட்டு சென்றார். கலா, மொட்டை மாடியிலிருந்து கீழே எட்டி பார்த்தாள்.
கலா, "இங்கேந்து குதிச்சுடு விஜி."
விஜி, "என் விருப்பத்த யாரும் கேட்க மாட்டாங்களா?"
சுதா, "we are indian girls. we are fated."
கலா, "ஹாஹா...இப்ப ஏன் எல்லாரும் அமீர் கான் showல வர மாதிரி பேசுறீங்க? relax...கண்டிப்பா நல்லது நடக்கும்."
விஜி, "கருமாதி தான் நடக்கும்." என்றாள் எரிச்சலுடன்.
சுதா, " விஜி...அப்படிலாம் சொல்லாத."
நால்வரும் கீழே சென்றனர்.
வாழ்க்கையில் ஃபோன் மாற்றலாம். ஆனா, அந்த ஃபோனே வாழ்க்கையை மாற்றினால்....
வீட்டு ஃபோன் ரொம்ப நேரம் அலற, யாரும் கவனிக்கவில்லை அதனை. விஜியின் பாட்டி அதனை எடுத்து பேசினார்.
"ஐயோ அப்பா!!!!!!!!!!!!" என்று அலறி கொண்டு மயங்கி கீழே விழுந்துவிட்டார். எல்லாருக்கும் அதிர்ச்சி. என்ன நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. விஜி ஃபோனை எடுத்து பேசிவிட்டு, அனைவரையும் பார்த்து,
"கொள்ளு தாத்தா செத்துபோயிட்டாரு!" என்று சொல்லி முடிப்பதற்குள், அனைவரும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டனர்! திருவிழா போல இருந்த வீடு, முற்றிலும் மாறியது ஒரு நொடியில். மாப்பிள்ளை வீட்டார் உடனே கிளம்பிவிட்டனர். விஜி சோகத்தை அடக்க முடியாமல் அவளது அறைக்குள் ஓடினாள். பின்னாடியே மூவரும் சென்றனர். அறை கதவை சாத்திய மறு வினாடியே விஜி,
"செத்தாண்டா சேகர்!" என்று சொல்லிவிட்டு வாய்விட்டு கைகொட்டி சிரித்தாள்.
சசி, "என்ன டி இப்படி சொல்ற?"
விஜி, "ஆமா டி. இனி ஒரு வருஷத்து கல்யாணம் எதுவுமே நடக்க வாய்ப்பில்ல. and இந்த மாப்பிள்ள வந்த சகுனம் இப்படி ஆச்சுனு.. இந்த proposal will be rejected!!!!!!!!!! and i am the happiest girl in the world!!" என்று படி 'ஒத்த சொல்லால' பாடலை போட்டு ஆட ஆரம்பித்தாள். கூடவே அனைவரும் சேர்ந்து ஆடினர். மெத்தையில் கிடந்த போர்வையை எடுத்து இடுப்பில் மடித்தவாறு, போர்வை நுனியை வாயில் கடித்தவாறு கலா தனுஷ் போலவே ஆடினாள்.
சுதா, "இதலாம் தப்பு இல்லையா?"
ஆடி கொண்டிருந்த கலா, "ஒருத்தன் செத்தால் தான் இன்னொருத்தனுக்கு வாழ்வு" என்றுவிட்டு நாக்கை மடித்து கொண்டு ஆட்டத்தை தொடர்ந்தாள்.
*முற்றும்*
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
avlothaana?? damaalnu mudichiteenga?? :(
அட பாவமே .....உங்க Ending காக நல்லா இருந்த தாத்தாவ கொன்னுடிங்க..
அந்த தாத்தாவோட ஆவி உங்கள சும்மா விடாது
disappointing ending. disgusting too
soora mokkai da samy
r u planning to continue the story rite.
Thayavu seithu ithai thodarnthu eluthungal
gils: எழுதினால் முடிக்க சொல்றாங்க, முடிச்சா எழுத சொல்றாங்க!!!
anyway, இது முடிவு இல்ல...ஆரம்பம்
(பில்லா படம் பாத்த effect hehehe)
anand: தாத்தா 'ஈ'யா வருவாரோ??
(நான் ஈ படம் பார்த்த effect!)
இரண்டு anonymousகளுக்கும் நன்றி!!
இதுல எது 'digusting'னு சொன்னா, அடுத்த தடவ நல்லா பண்ண try பண்ணலாம்னு தான் கேட்குறேன்:)
//சூர மொக்கை//
ஹாஹா...எத்தன தமிழ் படங்கள் பாத்து இருப்போம்! aren't we used to it then? :))
bharathiraja: ஹாஹா... ஆதரவுக்கு நன்றி. இந்த கதையை இப்போதைக்கு தொடர்ந்து எழுத போவதில்லை. தொடர் கதை எழுதும் அளவுக்கு நேரம் இல்ல.
ஆனா..சின்ன சின்ன ஒரு பக்கம் கதை எழுத வாய்ப்பு உண்டு!:)
kollu thatha irantha dance?
Post a Comment