(இது சும்மா காமெடி போஸ்ட். இன்று காலையில் அதிசயமாய் கோயிலுக்கு போக நேர்ந்தது. அப்போது தோன்றிய வடிவம் தான் இது! இது யார் மனதையோ புண்படுத்த அல்ல, ரொம்ப நாள் சிரிக்காம இருப்பவர்களின் மனங்களை பண்படுத்தவே!! ச்சே...ஆரம்பமே அசத்தலா இருக்குல!:)))))
மழை சாரல் அடிக்க, நான் என் ஜன்னல் கதவை மூடினேன். அப்போது, திடீரென்று ஒரு ஒளி தெரிந்தது ஜன்னல் வெளியே. ஒரு உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்தது. பல படங்களில் அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே..ம்ம்.. அலைபாயுதே ஷாலினிக்கு அப்பாவாக நடித்தவர் போல் இருந்தது அந்த உருவம். அந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் அறைக்குள் வந்தது.
நான்: யோவ் யாரு மேன் நீ?
உருவம்(வெள்ளை ஒளி லேசாக மறைந்து சாதாரண மனிதனாய் தெரிந்தார்): நான் கடவுள்
நான்: என்ன ஆர்யாவுக்கு போட்டியா? ஆர்யாவுக்கு அப்பா மாதிரி இருந்துகிட்டு, கடவுளா கடவுள்!? எங்க, அந்த படத்துல ஆர்யா தலகீழா நிக்குமே அந்த மாதிரி நில்லு பார்ப்போம்?
கடவுள் (புன்னகையித்தார்): எந்த கடவுளும் தலகீழா நிக்காது. கடவுள்கிட்ட அருள் கேட்டு மனுஷன் தான் சில சமயத்துல தலகீழா நிப்பான்.
நான்: என்ன நக்கலா? சரி அதவிடு, எதுக்கு மழையில நனைஞ்சுகிட்டு வர?
கடவுள்: வாக்கிங் போய்கிட்டு இருந்தேன். மழை வந்துச்சு. அதான் இங்க ஒதுங்கிட்டேன்.
நான்: இன்னும் நம்ப முடியலய்யா?
கடவுள்: எத?
நான்: நீ கடவுள்கிறத?
கடவுள்: ஏன்?
நான்: அம்மன் படத்துல வர ரம்யா கிருஷணன் மாதிரியும் இல்ல. பாளையத்து அம்மன் படத்துல் வர மீனா மாதிரியும் இல்ல. அறை எண் 306ல வர பிரகாஷ்ராஜ் மாதிரியும் இல்ல. அப்பரம் எத வச்சு நான், உன்னைய கடவுள்னு நம்புறது?
கடவுள்: நம்ப வேண்டாம்.
நான்: கடவுளே, கடவுள நம்ப வேண்டாம்ங்குது! ஹாஹாஹா...காமெடி போ நீ.
கடவுள்: யார் அம்மன்? பாளையத்து அம்மன்?
நான்: எல்லாம் உன் சொந்தங்காரங்க தான்?
கடவுள்: சொந்தமா?
நான்: ஹாஹா...என்ன உனக்கும் சொந்தங்காரங்கனா அலர்ஜீயா?
கடவுள்: இல்ல, சத்தியமா எனக்கு சொந்தம் கிடையாது.
நான்: உன் பெயர் என்ன?
கடவுள் (மீண்டும் புன்னகை): ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுவாங்க.
நான்: ஐயோ கடவுளே!!
கடவுள்: yes, speaking!!
நான்: நீ கமல்ஹாசன் fan தானே? உண்மைய சொல்லு!! செமயா குழப்புற.
கடவுள்: சாரி, நான் குழப்புல. பதில் சொன்னேன்.
நான்: சரி விடு. காபி குடிக்குறீயா?
கடவுள்: இல்ல வேணாம். மனஷன் கண்டுபுடிச்ச எல்லாத்திலும் ஒரு கெட்டது இருக்கும்.
நான்: நீ ஓவரா எங்கள கலாய்க்கிற. அப்பரம் விரதம், பால் ஊத்துறது, பூ போடுறது, இது எல்லாம் serviceயை நிறத்திடுவோம்.
கடவுள்: இதலாம் எனக்கு என்னிக்கு பண்ணியிருக்கீங்க?
நான்: அட பாவி!!! உலகமே தினமும் கோயில இத தானே பண்ணிகிட்டு இருக்கோம்!!
கடவுள்: கல்லுக்கு போடறது எல்லாம் கடவுளுக்கு தானு யார் சொன்னது?
நான்: தூணிலும் இருப்பார் துறம்பிலும் இருப்பார்-னு சொன்னாங்க!
கடவுள்: நான் சொன்னேனா??
நான்: நல்லா தான் பேசுற?? (என் laptopல் வேலையை பார்த்தேன்)
கடவுள்: என்ன செய்யுற?
நான்: வேலை தான்! அடுத்த வாரத்துக்குள்ள இத கொடுத்து ஆகனும்.
கடவுள்: உன் வேலை உனக்கு பிடிக்காதுல.
நான் (ஆச்சிரியத்துடன்): உனக்கு எப்படியா தெரியும்?
கடவுள்: உலகத்துக்கே தெரியுமே! உன் பேஸ்புக்-ல தினமும் இத தானே கொட்டி தீர்க்குற!
நான்: அட நீயும் பேஸ்புக் வச்சு இருக்கீங்களா? friend request அனுப்புறேன்?
கடவுள்: மனசாட்சிக்கு உண்மையா நடந்தா, friend request accept பண்ண மாதிரி தான்.
நான்: ஹாஹாஹா இது வேறயா! இப்பலாம் யார் மனசாட்சி படி நடக்குறாங்க. ஆபிஸ் வந்து பாரு!! நீ எமன பாத்து இருக்கீயா? பாஸ்-னு பேர்ல ஒரு எமன்!
கடவுள்: சிலர் அப்படி தான்.
நான்: நீ தான் படைச்ச. ஏன்? ஏன்? எல்லாத்தையும் நிறத்தனும்.
கடவுள்: ஹாஹா...நான் ஒன்னும் நாயகன் படம் வேலு நாய்க்கர் இல்ல.
நான்: ஜோக் அடிக்காத மேன். பதில் சொல்லு. ஏன் சிலருக்கு மூளையே இல்லாம படைச்ச.
கடவுள்: சில நேரத்துல நானும் தப்பு பண்ணுவேன்.
நான்: உண்மைய ஒத்துகிட்ட பாத்தியா!! GOD IS GREAT!
கடவுள்: மன கஷ்டபடுறவங்களுக்கு எப்படியாச்சு ஒரு வழியே தேடி கொடுப்பேன். GOD PROMISE!
நான்: பாப்போம் பாப்போம்! அந்த நம்பிக்கை எல்லாம் போச்சு. உலகத்துல எத்தனையோ பேர் கஷ்டம் படுறாங்க. சாப்பாடு இல்ல. வீடு இல்ல. நோய், வறுமை. the damage has been done. it's too late..
கடவுள்: மனுஷன தான் நான் படைச்சேன். தப்ப நீங்க தான் படைச்சுகிட்டீங்க.
நான்: என்னமோ போ! உலகம் அழிஞ்சு இன்னொரு உலகம் வர போறதுனு சொல்றாங்களே? உண்மையா?
கடவுள்: நீங்க செஞ்ச தப்புக்கு தண்டனை வேணுமா?
நான்: எதாச்சு செஞ்சு உலகத்த காப்பாத்து!
கடவுள்: உனக்கு இந்த உலகம் மேல அவ்வளவு அக்கறையா?
நான்: அப்படிலாம் ஒன்னுமில்ல.உலகம் அழியறத்துக்கு முன்னாடி எனக்கு ஒரே ஒரு ஆசை.
கடவுள்: என்னது?
நான்: இந்த கோச்சடையான் படத்த மட்டும் earlyயா release பண்ணிடேன்!!
கடவுள்: ஹாஹா உலகம் அழிஞ்சாலும், மனிதன் திருந்த மாட்டான்!
நான்: நாங்க திருந்திட்டா, உனக்கு வேலை இல்லாம போயிடுமே, கடவுள்!!
*முற்றும்*
7 comments:
Good one
verandaahala ukkanthu typinatha??? mutrum ku badila mutram nu potrukinga :D:D:D kadavul en boomiku vara maatengaraaarngarathuku nalla example..
நகைச்சுவையாக இருந்தாலும் இடையில் சில நையாண்டியும் இருந்தது. கல்லுக்கு செய்வதெல்லாம் கடவுளுக்கு செய்ததாகுமா? நச் கேள்வி.
சமுத்ரா: நன்றிங்கோ!!
கில்ஸ்: it's now corrected machi!!!
விச்சு: நன்றி பாஸ்!!!!
Edho comedy post nu sonneenga atha eppo elutha poringa :-))
Etho comedy post nu sonneenga eppo elutha poringa :-))
நியாயமான கேள்விதாம்பா..!
//அம்மன் படத்துல வர ரம்யா கிருஷணன் மாதிரியும் இல்ல. பாளையத்து அம்மன் படத்துல் வர மீனா மாதிரியும் இல்ல. அறை எண் 306ல வர பிரகாஷ்ராஜ் மாதிரியும் இல்ல. அப்பரம் எத வச்சு நான், உன்னைய கடவுள்னு நம்புறது?//
Post a Comment