Aug 28, 2012

Cocktail mix- மதுபான கடை, அட்டகத்தி, நான்!

மதுபான கடை, அட்டகத்தி, நான் ஆகிய படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. (எப்படி மா உனக்கு நேரம் கிடைச்சதுலாம்னு கேட்க கூடாது!)

3) மதுபான கடை- கதையே இல்லாமல் மொக்கை படம் எடுப்பதைவிட, இந்த மாதிரி சுவாரஸ்சியமான படம் எடுப்பது ஒரு வகையில் நல்லா தான் இருக்கு. குடிக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதுபோல் முற்றிலும் குடிக்காரர்களை பற்றி தான் படம். நையாண்டி, நக்கல், கிண்டல், அதில் கொஞ்சம் காதல் என படம் நகர்கிறது.

இந்த நீதிமன்றம் விஜித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது என பராசக்தி வசனம் போல் இப்படமும் பல விஜித்திர கதாபாத்திரங்களை கொண்டுள்ளன.

'என்னடா இது' கதையே இல்லாமல் போகுது என ஒரு சில இடங்களில் தோய்வு ஏற்பட்டாலும், சரி என்ன தான் நடக்குதுனு பார்த்து முடித்தேன்.  படத்திற்கே பலமே வசனங்கள் தான்.





DVDல பார்க்கலாம் படத்தை! anyway, tasmarc கடையலாம் மூட போறாங்களா? உண்மை செய்தியா, மக்களே!!?

2) அட்டகத்தி- படத்தில் ரொம்ப பிடித்த விஷயம் பாடல்கள்!!! 'ஆடி போன ஆவணி' பாடல் செம்ம சூப்பர் ரகம். வெங்கட் பிரபு உதவி இயக்குனர் என்பதினால் என்னவோ தெரியல இப்படத்திலும் கதை ஒன்றும் வலுவா இல்ல. நல்லா பொழுதுபோக்கு படம்.

பேருந்தில் காதல், கானா பாடல், காமெடி என படம் போகிறது. அவ்வபோது சென்னை 28 படம் ஞாபகத்திற்கு வந்துபோனது.

படம்- ஒரு முறை பார்க்கலாம் (2-in-1 dvdல)

1) நான் - பார்த்த மூனு படங்களிலேயே ரொம்ப பிடிச்ச படம். கதை, திரைக்கதை எழுதிய ஜீவா சங்கருக்கு முதல் பாராட்டு. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி சரியா இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தமைக்கு இன்னொரு பாராட்டு.

சும்மா, புரியாத வார்த்தையா போட்டு பாட்டு அமைக்கும் விஜ்ய் ஆண்டனி மேல் இப்போ தனி மரியாதையே வந்து இருக்கு. படத்தில் ஒரு கட்டத்தில் நண்பன் இறந்த பிறகு, அந்த இருள் நிறைந்த ஹாலில் அழுவார் பாருங்க.....செம்ம சூப்பர் நடிப்பு (இது என்ன பெரிய நடிப்பு, எங்க தனுஷ் கூட தான் பின்னி எடுப்பார்னு சொல்வோருக்கு....போங்க தம்பி போங்க...போய் புள்ள குட்டிங்கள படிங்க வையுங்க!!)

மயாக்கலா பாடலும் தப்பெல்லாம் தப்பே இல்லை பாடலும் அருமையிலும் அருமை!

நல்ல திரில்லர் கதையில் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு யோசிச்சு ஒருசில திருப்பங்களை சேர்த்து இருந்தால், இன்னும் நல்லா இருந்திருக்கும்னு தோனுது!

நான் - நாக்க மூக்க நாயகனின் மூக்கு மேல விரல் வைக்கும் ஒரு அற்புத படைப்பு!

(விஜய் ஆண்டனி தான் படத்தில் தயாரிப்பாளர்!)

6 comments:

Anonymous said...

தப்பெல்லாம் தப்பே இல்லை பாடல் நம் நாட்டை சேர்ந்த பொத்துவில் அஸ்மின் இனால் எழுதப்பட்டதை லோஷன் மறந்துவிட்டாரோ?

gils said...

title pathutu ungala pathina posto nenachen!! :D:D lol :D semma review

FunScribbler said...

gils: ada paavi!! ennai pathi post?? போஸ்ட்ல வர அளவுக்கு நான் ஒன்னு சின்ன ஆளு இல்ல...
என்னைய பத்தி வரலாறுல வரும் பாரு!!:)))))))))))) ஹிஹிஹி.

Sivaranjani said...

விஜய் ஆண்டனி பத்தி இவ்வளவு சொல்லிட்டு ஸ்டில் போடாம விட்டுடிங்களே.. A little disappointment pa :(

gils said...

!!! varalaarunaa std thaana!! :D:D:D

gils said...

varalaaruna std thaana :D:D:P