Dec 18, 2012

நடுவுல கொஞ்சம், கும்கி, கடல், எதிர்நீச்சல காணும்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்த பார்த்தேன். எனக்கு சந்தானம் வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது- "இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல"""

விழுந்து விழுந்து சிரிக்கும் காமெடி படம் அல்ல. (உள்ளத்தை அள்ளி தா, அவ்வை ஷ்ண்முகி, மகளிர் மட்டும் படங்களை விடவா இது பெரிய காமெடி படம்) அதுக்குனு படம் நல்லா இல்லேனு சொல்லிட கூடாது. ரெண்டாம் பாதியில் வரும் காட்சிகள் கண்டிப்பா சிரிப்பா இருந்ததுச்சு. முதல் பாதி சற்று மெதுவாய் சென்றது. ஏதோ, edit செய்ய படாத குறும்படம் போல் இருந்துச்சு.

எங்கள் அண்ணி ஆண்ட்ரீயா பாடிய பாடலை படத்தில் காட்டாமல் போனது மிக பெரிய வருத்தம் எங்களுக்கு!
- அகில உலக ஆண்ட்ரீயா ரசிகர் மன்றம்


படத்துக்கு ஓவர் build-up தான் தேவையில்லை என்று நினைக்க தோன்றியது (பாவம், அவங்களும் என்ன பண்ணுவாங்க.....marketing strategy) எனக்கு என்னமோ இந்த படத்துக்கு முன்னோடமாய் வந்த இந்த வீடியோ தான் செம்ம காமெடியாய் இருந்துச்சு

*************************************************************

கும்கி படம் கண்களுக்கு குளிர்ச்சி! அந்த மலை பகுதி, அருவி எல்லாம் செம்ம சூப்பர்! அழகா காட்டியிருந்தாங்க! சலிப்பு தட்டாமல் கதையை நகர்த்தியது சிறப்பு. தம்பி ராமய்யா தான் இந்த படத்துக்கு இரண்டாவது ஹீரோனு நினைக்குறேன். அவர் சொல்லும் ஒவ்வொரு வசனமும் முக பாவனையும் காமெடி கலாட்டா தான்!

அப்போ முதல் ஹீரோ யாரு? இமான் தான்!!!!!!!!!! பாடல்கள் எல்லாம் கேட்ட மாதிரி இருந்தாலும். இந்த படத்தில் வரும் locationகளுக்கு ஏற்றாற்போல் பாடல்கள்!

பிரபு பையன் விக்ரம் பிரபு நல்லாவே நடித்து இருந்தார் (அவரை பற்றி மேலும் தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் பகுதியில் சொல்கிறேன்)
அந்த புள்ள லட்சுமி மேனன் பரவாயில்லாம நடிச்சு இருக்கு.

************************************************************

கடல் மற்றும் எதிர்நீச்சல் பாடல்களை கேட்டேன். ம்ம்ம்...ம்ம்ம்...

கடல் பாடல்களைவிட
எதிர் நீச்சல் பாடல்களை
விரும்புகிறது
இந்த பாழா போன மனசு

#ஆண்ட்ரீயா தொட்ட எதுவும் வெற்றியை தொடாமல் போனதில்ல#

எதிர்நீச்சல் பாடல் கொஞ்சம் புரியும் வண்ணம் இருப்பதால் என்னவோ. புதுசா எதுவும் இல்ல. ஆனா கேட்க நல்லாயிருக்கு. அதிகாமன ஆங்கிலம் கெட்ட வார்த்தைகளை (censor) செய்து இருக்கிறார்கள். இந்த மாதிரி கெட்ட வார்த்தை உபயோகம் தேவையில்ல. அது ஒன்னு தான் மைனஸ்.

கடல் பாடல்கள் ஒரு மாதிரியாய்...ஏதோ மாதிரி இருக்கு. ஏஆர் தீவிர ரசிகை என்றாலும் மனசு 'கடலை' தாண்டி 'எதிர்நீச்சல்' போட வைக்குது!அந்த மகுடி பாடல் பரவாயில்ல. இந்த கருத்தை சொன்னதற்கு, பொங்கி எழுந்த நண்பர்கள்

பாட்டு கேட்க கேட்க தான் புடிக்கும் என்றார்கள்.

சரி பார்ப்போம்....

பாடல்கூட பரவாயில்லனு தோணுது. ஆனா, கடல் teaser என்ற பெயரில் இதை வெளியிட்டதை தான் என்னால் மன்னிக்க முடியாது.  

மக்களை ''tease' பண்ணுறீங்களா? :(((((((((

4 comments:

yasaru said...

எலே..உன்னோட இந்த பிளாக்க இப்ப ரெண்டு நாளா தான் தெரியும்.2006 ல இருந்து எழுதுற போல..ஒண்ணுதாம்ல உங்கிட்ட கேட்கனும்..இவ்ளோவும் எழுத எப்பதான் உனக்கு நேரம் கிடைக்குது..பதில் சொல்லுல..நாட்டாமை கேக்குறேன்.

gils said...

andrea videovaachum padam mudiarachay potrukalam :( nkpk director ozhiga..aana padam paatha antha song enga vanthirukumnu guessay pannamudiala..chumma potutanga pola...

ethirneechal songs growing on slowly..esp the title song...thaaarumaaaru honeysinggghhuuu

FunScribbler said...

yasaru: வலைப்பூ பக்கம் வந்தமைக்கு நன்றி! ஒரு காலத்துல (அதாவது சந்தோஷமான காலேஜ் காலத்துல) நிறைய எழுத நேரம் கிடைச்சது. இப்ப வேலைக்கு போன பிறகு எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!! 3 வாரம் இப்ப லீவு கிடைச்சதால மறுபடியும் எழுத வாய்ப்பு கிடைச்ச இருக்கு அவ்வளவு தான்!:))

FunScribbler said...

@gils: நிஜமெல்லாம் மறந்துபோச்சு பாட்டு தான் எனக்கு பிடிச்சது! அப்பரம் அந்த லோக்கல் பாய்ஸ் பாடலும் பரவாயில்ல!