Jan 3, 2013

நடுவுல கொஞ்சம் 2012 காணும்!!

என்ன ஆச்சு!
2012 calendar வாங்கினேன்.
கிழிச்சேன்.
ஓ..ஓ..ஓ....அப்படி பறந்து போச்சே!!
ஒகே ஒகே ஒகே

*************************************************************
2012 இவ்வளவு சீக்கிரம் பறந்து போகும்னு நினைக்கல! அப்படி 2012 என்ன தான் பண்ணோம்னு யோசிச்சு பார்த்தா...ம்ம்ம்....எதையும் அப்படி ஒன்னும் பெரிசா பண்ணியிருக்க மாட்டே நீ அப்படினு நீங்க சொன்னீங்கன்னா அது தப்பு!

ஐரோப்பா பயணம்


டிசம்பர் மாதம் 13 நாள் சென்ற பயணம்! வாழ்க்கைல மறக்க முடியாத பயணம். அந்த 13 நாட்கள் அப்படினு ஒரு புத்தகமே எழுதலாம்!!! குளிர் காற்று, பனி, சாப்பாடு...ச்சே...இதலாம் திரும்பி வரவே வராது!!

குறும்படம்

சும்மா ஒரு பேச்சுக்கு ஆரம்பிச்சு, கடைசில உண்மையாகவே ஒரு குறும்படத்த எடுத்தோம் நானும் எனது 3 நண்பர்களும். சும்மா ஜாலிக்காக எடுத்த படம் தான். 3 மணி நேரத்தில் எடுத்த படமாக இருந்தாலும், அதுக்கு அப்பரம் நடந்த எடிட்டிங் வேலை இருக்கே!!! யப்பா!!! வேலை செய்யும் இடத்தில் இந்த ஆர்வத்தை காட்டியிருந்தால் இந்நேரம் promotion கிடைச்சு இருக்கும். :(((( சரி விடுங்க அந்த சோக கதை இப்ப வேணாம்.
 (குறும்படம் சீக்கிரம் வெளியிட படும்)


தோழியின் கல்யாணம்+ பார்ட்டி

நெருங்கிய தோழியின் கல்யாணம்! நல்ல படியாய் முடிந்தது! மாலை reception முடிஞ்சு விடிய விடிய ஆடிய ஆட்டம் மறக்கவே முடியாது!!! அதிலும் இன்னொரு தோழன் masters graduation முடித்தவன். அதற்கும் சேர்த்து கொண்டாட்டம்! மறக்க முடியாத ஒரு நாள்!

எந்த கடையில நீ அரிசி வாங்குற?

என் வலைப்பூவை தொடர்ந்து படித்தவர்களுக்கு தெரியும்....3 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாய் 13கிலோ குறைத்தேன். அதுக்கு அப்பரம் வேலைக்கு போனபிறகு 10கிலோ இடை கூடியது!:(((( இந்த 2.5 வருடங்களில் 10கிலோ அதிகரிப்பு!!! ச்சே என்னடா வாழ்க்கை இதுனு நினைச்சு, இப்ப மறுபடியும் தீவிரமாய் 'கோதா'வில் இறங்கிவிட்டேன்.

கடந்த 4 மாதங்களில் 5கிலோ குறைத்துவிட்டேன். தினமும் 3கிலோ மீட்டர் ஓட்டம், இரவு சாப்பாடு அளவை குறைத்துவிட்டேன். நமக்கு புடிச்ச ஜீன்ஸகூட போட முடியாமல் இருக்கும்போது மனசு வலிக்குதே!!! ஆக, இன்னும் 4 கிலோவை குறைத்தால் போதும்!!! so once கோதாவுல இறங்கிட்டோம், நம்ம தாதா தான்!!

இன்று அதற்கு பிள்ளையார் சுழியாய், 5 கிலோ மீட்டர் ஓடினேன் 35 நிமிடங்களில்!!!

#நம்பிக்கை தான் வாழ்க்கை#

எல்லா வருஷமும் நல்ல வருஷம் தான்! ஆனா, அதுல மண்ணு அள்ளி போடுற மாதிரி சில ஆசாமிகள் இருப்பாங்க....அவங்கள சமாளிச்சு, இந்த 2013 வருஷத்தை நல்ல வருஷமாக அமைத்து கொள்ள எல்லாருக்கும் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன்.

3 comments:

Unknown said...

super machi

அருணா செல்வம் said...

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எடையை குறைத்தது எப்படின்னு ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.
நன்றி.

மாணவன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!